தமிழ் படங்களில் நடிக்க ஆசை - நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்


தமிழ் படங்களில் நடிக்க ஆசை  - நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்
x

பல தடவை தமிழகம் வந்திருக்கிறேன். அங்குள்ள ரசிகர்களின் ரசனை அளப்பரியது என்று நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் பிரக்யா ஜெய்ஸ்வால் தற்போது 'அகாண்டா-2', 'டைசன் நாயுடு' படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியுடன் கூடிய அவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.

இதற்கிடையில் தமிழ் சினிமா பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, "தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடவை தமிழகம் வந்திருக்கிறேன். அங்குள்ள ரசிகர்களின் ரசனை அளப்பரியது. தமிழ் படங்களில் நடிக்க எனக்கும் ஆசை தான். காத்திருக்கிறேன். காலம் கனியட்டும். பார்க்கலாம்" என்றார்.

1 More update

Next Story