திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நிக்கி கல்ராணி சாமி தரிசனம்

2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமானார்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நிக்கி கல்ராணி இன்று சாமி தரிசனம் செய்தார்.
மலையாளத்தில் 2014ம் ஆண்டு வெளியான 1983 படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நிக்கி கல்ராணி தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அவர் தமிழில் 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தமிழில் யாகாவாராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






