எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி


எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி
x
தினத்தந்தி 15 Dec 2025 7:30 PM IST (Updated: 15 Dec 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவர் தனது 10-வது வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் நடித்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்த படம் மீரா.

கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில் அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றார். 1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் ஜெர்ஸி, கிங்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கௌதம் தின்னூரி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிகை சாய் பல்லவி நடிப்பார் என கூறப்படுகிறது.

சாய் பல்லவி தற்போது ‘ராமாயணம்’ படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story