தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.
ஏவிஎம் சரவணனின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை அவர் தயாரித்துள்ளார்.
அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.






