கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய்.. திரையுலகினர் உதவிக்கரம் நீட்டுவார்களா?


கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய்.. திரையுலகினர் உதவிக்கரம் நீட்டுவார்களா?
x

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

சென்னை,

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் 'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்டார். தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்தார்.

சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். இதற்கிடையில் சின்னத்திரை நடிகர் பாலா, அபினய்யை நேற்று அவரது வீட்டில் சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவியாக வழங்கினார்.

மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்த அபினய், 'பாலா... நான் சீக்கிரமா போயிடுவேன்' என்று கண்கலங்கப் பேச, அவருக்கு பாலா ஆறுதல் கூறி கிளம்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாக்லேட் பாய் போல தோற்றமளித்த அபினய் தற்போது எலும்பும், தோலுமாய் இருப்பது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது நிலையை உணர்ந்து திரையுலகம் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என்று ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1 More update

Next Story