மேடையில் நடிகையிடம் அத்துமீறிய வாலிபர்

விசாரணையில் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்சன் என்பது தெரியவந்தது.
சென்னை,
பிரபல பாடகி அரியானா கிராண்டே. இவர் தற்போது விக்டு: பார் குட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சிங்கப்பூரில் சமீபத்தில் நடந்தது. இதில் அரியானா கிராண்டே கலந்துகொண்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தடுப்பைத் தாண்டிக் குதித்து அரியானா கிராண்டேவிடன் அத்துமீறலில் ஈடுபட்டார். உடனே அங்கிருந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்சன் வென் (26) என்பது தெரிந்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில், அவரை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தியும் சிங்கப்பூருக்குள் நுழைய வாழ்நாள் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது.
Related Tags :
Next Story






