தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
x
Daily Thanthi 2025-12-22 04:54:18.0
t-max-icont-min-icon

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TAMIL NADU OPEUNIVERSITY) சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது. 2003 - 2004 கல்வி ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகம் பல்வேறு நிலையில் கல்வி சேவை செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான படிப்புகளை நடத்தி சாதனை புரிந்து வருகிறது. சுமார் 234 வகையான படிப்புகளை பல்வேறு பாடங்களில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை மாணவ மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், விடுமுறை கால டிப்ளமோ படிப்புகள் மற்றும் மேம்பட்ட டிப்ளமோ படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தியாவில் சுமார் 16 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தாலும் அவற்றுள் முறையாக பல்கலைக்கழக மானிய குழுவின் (UNIVERSITY GRANT COMMISSION) 12 B அந்தஸ்தை பெற்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.

1 More update

Next Story