உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு எல்லையில்லா அன்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
x
Daily Thanthi 2025-12-18 06:52:35.0
t-max-icont-min-icon

உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை - விஜய்


மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் , ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நான் சினிமாவுக்கு வந்த 10 வயதில் இருந்து இந்த மக்களுடனான உறவு தொடங்கியது. எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதீர்கள். எனக்காக இறுதிவரை நிற்பீர்களா? நானும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். 

மக்களுக்கு எதுவுமே செய்யாமல் கதைகளை மட்டுமே அடித்து விடுகின்றனர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

ஈரோடு கடப்பாரை பெரியார்; தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார். பெரியாரிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். பெரியார் எங்கள் கொள்கை முன்னோடி.

அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து; அவர்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொருட்டே இல்லைதானே. பின் ஏன் கதறுகிறீர்கள். உங்களுக்கு காசுதான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

1 More update

Next Story