திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025
x
Daily Thanthi 2025-11-09 10:12:46.0
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று வழக்கத்திற்கு மாறாக சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கி உள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க சற்று சிரமம் அடைந்தனர். மேலும் ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

1 More update

Next Story