டிட்வா புயல், கனமழை எதிரொலி; தமிழகத்தில் இளம்பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
x
Daily Thanthi 2025-12-01 04:48:08.0
t-max-icont-min-icon

டிட்வா புயல், கனமழை எதிரொலி; தமிழகத்தில் இளம்பெண் உள்பட 5 பேர் பலி

வங்க கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டதுடன், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து, பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் (வயது 56) என்பவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சீதா(45), இவர்களுடைய மகள்கள் கனிமொழி(21), ரேணுகா(20). இளைய மகள் ரேணுகா டிப்ளமோ அக்ரி படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

கனமழையால் இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரேணுகா உள்ளிட்ட 4 பேரும் சிக்கிக்கொண்டனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்து விட்டார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பை சேர்ந்த பிரதாப் (வயது 19) என்ற வாலிபர், பலத்த மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

1 More update

Next Story