திருமலா பால் நிறுவன மேலாளர் வழக்கு: சென்னை காவல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 08:25:24.0
t-max-icont-min-icon

திருமலா பால் நிறுவன மேலாளர் வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்

ரூ.40 கோடி கையாடல் புகாரில் சிக்கிய திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சென்னை ஆணையர் அருண், “இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி.சி. பாண்டியராஜன் தவறு செய்ததால் தான் துறை ரீதியாக விசாரணை நடத்தியிருக்கிறோம். அறிவுறுத்தலை மீறி ரூ.40 கோடி கையாடல் புகாரை டி.சி. பாண்டியராஜன் விசாரித்துள்ளார். சிவில் வழக்கு, பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அனுமதி பெற்று தான் விசாரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். 

1 More update

Next Story