பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. இன்றே கடைசி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
x
Daily Thanthi 2025-12-31 07:22:36.0
t-max-icont-min-icon

பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. இன்றே கடைசி நாள்- மறந்துடாதீங்க!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றுதான் கடைசி நாளாகும். பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது.

இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் இணைத்து கொள்ளவும். அப்படி தவறினால் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

1 More update

Next Story