காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையை பெரிதுபடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
x
Daily Thanthi 2025-12-31 07:17:21.0
t-max-icont-min-icon

காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

எங்கள் கட்சியில் என்ன பிரச்சினையோ அதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்த புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம். உள்கட்சி விவகாரத்தில் தயவு செய்து எந்தவித பிரச்சினையும் ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

1 More update

Next Story