வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025
x
Daily Thanthi 2025-12-27 03:57:29.0
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல, வருகிற ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு ) ஆகிய தேதிகளிலும் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

1 More update

Next Story