வெனிசுலா மீது தாக்குதல் - அமெரிக்காவுக்கு ரஷியா,... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 03.01.2026
x
Daily Thanthi 2026-01-03 11:15:08.0
t-max-icont-min-icon

வெனிசுலா மீது தாக்குதல் - அமெரிக்காவுக்கு ரஷியா, ஈரான் கண்டனம் 

வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் சாக்குப்போக்குகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இதே போல், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

1 More update

Next Story