குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்...வார ராசிபலன் - 28.09.2025 முதல் 04.10.2025 வரை


Weekly Rasipalan - 28.09.2025 to 04.10.2025
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

இந்த வார ராசிபலன்:-

மேஷம்

அனைவரிடமும் கனிவாக பேசி காரியத்தை சாதித்து கொள்ளும் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ம் இடத்திலுள்ள ராசி அதிபதி புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார். தடைபட்ட திருமணங்கள் கூடி வரும்.

பால், ஏற்றுமதி இறக்குமதி, வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த நன்மை உண்டு. சரக்கு போக்குவரத்து, ஓட்டல், உணவு பொருள் வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர் ஒத்துழைப்பை பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் அடுக்குமாடி திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் மின்சாரம், கணினி, அறக்கட்டளை பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும்.

பல இடங்களுக்கு பிரயாணம் சென்று வந்த அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். பள்ளி குழந்தைகளுக்கு, குடும்ப பெரியவர்களுக்கு பரிசு கொடுத்து ஆசி பெறுவது நன்மை தரும்.

ரிஷபம்

நினைத்தவற்றை நினைத்தபடியே நிறைவேற்ற துடிக்கும் ரிஷபம் ராசியினருக்கு தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் உண்டு.

இரும்பு, நெருப்பு, மருத்துவ தொழில் துறையில் வளர்ச்சி உண்டு. அரசியல், தையல், சிறு தொழில் வியாபாரம் எதிர்பார்த்த முன்னேற்றம் பெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டும் செய்து வர வேண்டும்.

ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் பொதுத்துறை, மருத்துவமனை, கல்வி நிறுவன பங்குகளில் ஆதாயமுண்டு. மாணவர்கள் வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.

வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் பானங்களை பருக வேண்டாம். ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு பணம், ஆடை தானம் செய்வதன் மூலம் நன்மை உண்டு.

மிதுனம்

உடல் அளவிலும், மனதளவிலும் இளமையாக தோற்றமளிக்கும் விதம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம். ஆன்மீக திருப்பணிகள், ஆலய தரிசனம் என்று ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

ஆடிட்டிங், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆசிரியர் தொழிலில் நற்செய்தி கிடைக்கும். சிறு தொழில், வேளாண் விலை பொருள், பலசரக்கு வியாபாரம் தடைநீங்கி சூடுபிடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இட மாற்றம் உண்டு.

ரியல் எஸ்டேட்டில் கட்டுமான பணிகளை கவனமாக மேற்பார்வை செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் ஆடை ஆபரணம், தங்கம், வாகனம் நிறுவன பங்குகளில் ஆதாயமுண்டு. மாணவர்கள் புது விளையாட்டை கற்பர்.

அடிவயிற்றில், மார்பில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வயதான தம்பதிகளுக்கு பரிசளித்து ஆசி பெறுவதும், திருமணமான தம்பதிகளுக்கு இனிப்பு பரிசளிப்பதாலும் நன்மை உண்டு.

கடகம்

நண்பர்களை துணை கொண்டு எதையும் சாதித்து முடிக்கும் கடகம் ராசியினருக்கு இந்த வாரம் தடை தாமதங்களுக்கு பிறகு காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் மகிழ்ச்சி ஏற்படும்.

அழகுசாதனம், தங்கம் வெள்ளி, நிதித்துறை, ரியல் எஸ்டேட் தொழில் லாபம் பெறும். அழகு நிலையம், வட்டி தொழில், சொகுசு பொருள் வியாபாரம் வளர்ச்சி பெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த லாபமுண்டு. ஷேர் மார்க்கெட்டில் தங்கம், ஆடை தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர்.

காய்ச்சல், கை கால் வலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் குணமடையும். தூய்மை பணியாளர்கள், உடல் ஊனமுற்றோர், வயது முதிர்ந்தோருக்கு தேவையான உதவிகளை பொருளாக, உணவாக வழங்கிட நன்மை உண்டு.

சிம்மம்

தைரியமான மனதோடு செயல்பட்டு காரிய வெற்றி பெறும் திறமை கொண்ட சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் ஆன்மீக பயணம் உண்டு. பெண்மணிகள் முக்கியமான காரியங்களை முன்னின்று நடத்துவார்கள்.

லேத், விவசாயம், ஆன்மீகம், மின் உபகரண உற்பத்தி தொழிலிலும், மளிகை, உணவகம், ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.

ரியல் எஸ்டேட்டில் தாமதம் ஆனாலும் எதிர்பார்த்த லாபமுண்டு. ஷேர் மார்க்கெட்டில் மின்சாரம், கணினி, தகவல் தொடர்பு நிறுவன பங்குகளில் ஆதயம் பெறலாம். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவர்.

அடிவயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். தந்தை வழி உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்வதும் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதும் நன்மை தரும்.

கன்னி

எந்த தொழிலில் ஈடுபட்டாலும் தனித்தன்மையோடு செயல்படும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் மனதில் நினைத்தவை கை கூடி வரும். இல்லத்தரசிகள் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வார்கள்.

டிம்பர் டிப்போ, பணம் கொடுக்கல் வாங்கல், மோட்டார் உபகரண தயாரிப்பு தொழிலும், கட்டிட பொருள், திரவப்பொருள் வியாபாரமும் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தம் பணிகளை மட்டும் கவனிப்பது நல்லது.

ரியல் எஸ்டேட்டில் கார்ப்பரேட் கட்டுமான பணியிலும், ஷேர் மார்க்கெட்டில் ஏற்றுமதி-இறக்குமதி, கல்வித்துறை, திரவப்பொருள் நிறுவன பங்கு மூலம் லாபமுண்டு. மாணவர்களுக்கு வெளிநாட்டு பணி ஆர்வம் உருவாகும்.

ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். உடன் பிறந்த சகோதர சகோதரிகள், நண்பர்களுக்கு பரிசளித்து மனம் மகிழும்படி செய்தால் நன்மை உண்டு.

துலாம்

மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்து நடக்கும் துலாம் ராசியினருக்கு இந்த வாரம் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். இல்லத்தரசிகள் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வர்.

ரெஸ்டாரன்ட், லாட்ஜ், தோல் பொருள் தயாரிப்பு தொழிலில் கவனம் வேண்டும். உரம், எண்ணெய், இரும்பு, கட்டிடப் பொருள் வியாபாரத்தில் ஆதாயம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் இனிய சூழலில் பணியாற்றுவர்.

ரியல் எஸ்டேட்டில் புது பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் அரசு துறை, அறக்கட்டளை பங்கு மூலம் ஆதாயம் பெறலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிகளை பெற்றால் அது வெற்றிக்கு வழிவகுக்கும்.

வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சை மூலம் நீங்கும். தூய்மைப் பணியாளர்கள், செருப்பு தைப்பவர்களுக்கு அன்னதானம் அல்லது பொருள் தானம் செய்தால் நன்மை ஏற்படும்

விருச்சிகம்

சிக்கல்கள் எவ்வளவு இருந்தாலும் குறையாத வருமானத்தை பெறும் திறன் பெற்ற விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் மனதிற்குரிய விஷயங்கள் நடைபெறும். குழந்தைகள் விஷயத்தில் விட்டு கொடுத்து செல்லவும்.

போக்குவரத்து, இன்ஜினியரிங், சாப்ட்வேர் தொழிலில் புது வாய்ப்பு பெருகும். ஏஜென்சி, ஸ்பேர் பார்ட்ஸ், கன்சல்டன்சி, ரசாயன வியாபாரம் லாபம் பெறும். உத்தியோகஸ்தர்கள் நிர்வாக ரீதியாக பாராட்டு பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் அரசு ஒப்பந்தங்கள் மூலம், ஷேர் மார்க்கெட்டில் கணினி, மருந்து நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கை கால் வலி, மூட்டு வலி, ரத்த அழுத்தம், உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு விலகும். நண்பர்கள் அல்லது வாழ்க்கை துணைக்கு பரிசுகள் அளிப்பதால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

மனதில் லட்சியத்தோடு செயல்பட்டு காரிய வெற்றி அடையும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் புதிய சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தில் புதிய பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்கள் மகிழ்வர்.

ஏஜென்சி, கலைத்தொழில், கணினி தொழில் முன்னேற்றம் அடையும். பெட்ரோல், பால், உதிரிபாக வியாபார சமூக மதிப்பு பெறும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளில் திறமையாக செயல்படுவர்.

ரியல் எஸ்டேட்டில் வியாபார விருத்தி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், தங்க நகை பங்கு மூலம் லாபம் உண்டு. மாணவர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவர்.

திடீர் பயணங்களால் மன உளைச்சல், உழைப்பு காரணமாக உடல் அசதி ஏற்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதால் நன்மை ஏற்படும்.

மகரம்

கற்ற படிப்பை விட பெற்ற அனுபவமே சிறந்தது என்ற எண்ணம் கொண்ட மகரம் ராசியினருக்கு இந்த வாரம் தடைகளை கடந்து வெற்றி ஏற்படும். இல்லத்தரசிகள் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எளிதாக தீர்ப்பர்.

செங்கல், மருந்து, உபகரண தயாரிப்பு தொழிலில் அரசு ஆதாயம் உண்டு. திரவப் பொருள், உதிரிபாகம், இரும்பு, கட்டிட பொருள் வியாபாரம் சிறப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு கிடைக்கும்.

ரியல் எஸ்டேட்டில் நடக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு, வேளாண் பொருள், மருத்துவமனை பங்கு மூலம் லாபமுண்டு. மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் திறமை காட்டுவர்.

ரத்த அழுத்தம், மனக்குழப்பம், கைகால் வலி, உடல் அசதி ஏற்பட்டு சிகிச்சை மூலம் சரியாகும். ஆதரவற்ற வயது முதிர்ந்த பெண்மணிகளுக்கும், அரவாணிகளுக்கும் ஆடை தானம், அன்னதானம் செய்வது நன்மை தரும்.

கும்பம்

பொறுமை கடலினும் பெரிது என்ற பழமொழிக்கு ஏற்ப நடந்துகொள்ளும் கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் புகழ் அதிகரிக்கும். இல்லத்தரசிகள் குடும்ப ரீதியான உறவுகளுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை சீர் செய்வர்.

ஆடை ஆபரணம், நிதி, ரெஸ்டாரன்ட் தொழிலில் புது மாற்றங்கள் உண்டு. கொடுக்கல்-வாங்கல், ஸ்வீட் ஸ்டால், கால்நடை வியாபாரம் வெளியூர் தொடர்பு பெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு பெறுவர்.

ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமான பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் மின் நிறுவன, ஹோட்டல் பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். மாணவர்கள் எதிர்காலம் பற்றி திட்டமிட வேண்டிய காலம் இது.

வயதானவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதுடன், மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை வழி, தாய் வழி மாமாவுக்கு உதவி செய்து, ஆசி பெறுவது பல நன்மைகளை தரும்.

மீனம்

யாரிடம் எதை பேச வேண்டும் என்று அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் மீனம் ராசியினருக்கு இந்த வாரம் மன விருப்பப்படி விஷயங்கள் நடக்கும். இல்லத்தரசிகள் மனதில் புதிய தெம்பு, நம்பிக்கை உருவாகும்.

தகவல் தொடர்பு, புத்தகம், கணக்கு வழக்கு, தணிக்கை தொழிலும், ஸ்பேர் பார்ட்ஸ், பலசரக்கு கடை, புத்தக, மளிகை வியாபாரமும் விரிவாக்கம் அடையும். உத்தியோகஸ்தர்கள் கடன் பெற்று செலவுகளை சமாளிப்பர்.

ரியல் எஸ்டேட்டில் புதிய அடுக்குமாடி கட்டுமான பணி தொடங்கும். ஷேர் மார்க்கெட்டில் மண்மனை, வாகன, சமூக சேவை நிறுவன பங்கு மூலம் லாபமுண்டு. மாணவர்கள் நண்பர் வீட்டுவிசேஷங்களில் பங்கேற்று மகிழ்வர்.

நீண்டகால சிகிச்சை பெறுவோர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனாதை ஆசிரமங்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்களை தானமாக அளிக்க நன்மை ஏற்படும்.

1 More update

Next Story