வார ராசிபலன் - 24.08.2025 முதல் 30.08.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒருமித்த சிந்தனையோடு செயல்படும் கொள்கை கொண்ட மேஷம் ராசியினருக்கு சுக ஸ்தான சுபர்கள் மனதில் உற்சாகம் ஏற்படுத்துவார்கள்.
ஓட்டல் தொழில், விவசாய விளைபொருள் வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கம் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை பெறுவர். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாரா செலவுகள் உண்டு.
ரியல் எஸ்டேர் துறையினர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வதும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளிலும் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர் வெளிநாட்டு கல்வி, பணி வாய்ப்பு குறித்த தகவல்களை பெறுவர்.
ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு சிகிச்சை மூலம் அகலும். முடிந்தவரை மௌன விரதம், உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் பல சிக்கல்கள் விலகும்.
ரிஷபம்
மற்றவர்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்பட்டாலும் நிதானம் தவறாத ரிஷபம் ராசியினருக்கு 4-ம் இடத்தில் ஆன்மிக கிரகங்கள் சேர்க்கை பெறுவதால் தெய்வீக எண்ணங்கள் உருவாகும்.
எண்ணெய் வித்து தொழில்துறையினர், ஆடை, ஆபரண வியாபாரிகள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விருத்தி அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் விளைபொருள் விற்பனை, ஓட்டல் துறை நிறுவன பங்குகளால் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர்.
காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். தாயார் சந்நிதி, அம்பிகை சன்னிதியில் வெண்மை நிற மலர்மாலை சமர்ப்பணம் செய்வதும், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதும் நன்மை தரும்.
மிதுனம்
எதிர்காலம் குறித்து துல்லியமாக கணக்கிட்டு அதன்படி நடந்து கொள்ளும் மிதுனம் ராசியினருக்கு 2-ல் உள்ள சுபர்கள் சேர்க்கை தன வரவை அதிகரிக்கும்.
எக்ஸ்போர்ட் தொழில்துறையினர், மளிகை வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலம். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் மசாலா, வேளாண் பொருள் விற்பனை நிறுவன பங்குகளிலும் லாபம் அடைவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் திறமையாக செயல்படுவர்.
காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையும். துர்க்கை, புற்றுக்கோவிலுக்கு நெய் வழங்குவதும், மின் சாதனங்கள் தானம் தருவதும் நன்மை தரும்.
கடகம்
மனதில் சஞ்சலங்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் முதிர்ச்சியோடு நடந்து கொள்ளும் கடக ராசியினருக்கு ராசியில் சஞ்சரிக்கும் சுபர்களால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
இரும்பு, உதிரிபாக தொழில் துறையினர் மற்றும் மருந்து, கெமிக்கல் வியாபாரிகள் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து அவரது ஆதரவை பெற வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் வேறு ஊர்களில் புதிய கட்டுமானத் திட்டங்களை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் வெளிநாட்டு பங்குகளிலும் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரஷர், சுகர் பாதிப்பு உள்ளவர்கள் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதரவற்ற வயதான பெண்களுக்கு அன்னதானம் ஆடை தானம் செய்வதன் மூலம் நன்மை ஏற்படும்.
சிம்மம்
பிறர் செய்த தவறுகளை பொருட்படுத்தாமல் சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை கொண்ட சிம்மம் ராசியினருக்கு ராசியதிபதி, கேது சேர்க்கை ஆன்மிக தொடர்புகளை தரும்.
ஆபரண, பாத்திர தொழில் துறையினர், திரவம், கால்நடை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம், லாபம் வந்து சேரும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தகுந்த மதிப்பை பெறுவார்கள்.
ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஓட்டல், எரிவாயு நிறுவன பங்குகளிலும், ரியல் எஸ்டேட் பிரிவினர் புதிய முதலீடுகளிலும் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்லவும்.
தொடர் பயணங்கள் மூலம் உடல் அசதி, களைப்பு ஏற்பட்டு விலகும். குரங்குகளுக்கு அல்லது காளை மாட்டுக்கு பழங்கள் வழங்குவதும், ஆஞ்சநேயர் வழிபாடும் நன்மை தரும்.
கன்னி
மனதில் பல சிந்தனைகள் மாறிமாறி ஏற்பட்டு குழப்பத்தை தந்தாலும் இலக்கு நோக்கி திடமாக செல்லும் திறன் கொண்ட கன்னி ராசியினர் நிதானமாக செயல்பட வேண்டிய காலம் இது.
உற்பத்தி தொழில், எந்திர பொருள் வியாபாரிகள் தங்கள் அனுபவம் மூலம் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் நடப்பு திட்டங்களிலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு படிக்க வேண்டும்.
வயிற்று வலி, ஜீரண கோளாறு, முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு நீங்கும். பிரதோஷ காலங்களில் நந்திக்கு அருகம்புல் சமர்ப்பணம் செய்வதும், பெருமாள் கோவிலுக்கு புளியோதரை நிவேதனம் செய்வதும் நன்மை தரும்.
துலாம்
கடந்த கால அனுபவங்கள் மனதை வாட்டினாலும், எதிர்காலம் நன்மை தரும் என்ற நம்பிக்கையோடு செயல்படும் துலாம் ராசியினருக்கு பத்தாம் இடத்தில் உள்ள சுபர்களால் அந்தஸ்து அதிகரிக்கும்.
ஓட்டல் தொழில்துறையினர், ஜவுளி வியாபாரிகள் அனுபவத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களிலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவன பங்குகளிலும் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பர்.
காய்ச்சல், தலைவலி, சளி, தோல் அலர்ஜி ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். கிருஷ்ணரை வழிபடுவதும், பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் மற்றும் இனிப்பு வழங்குவதன் மூலமும் நன்மை ஏற்படும்.
விருச்சிகம்
மனதில் எழும் எண்ணங்களை அனைவரிடமும் வெளிப்படுத்தாமல் பாதுகாக்கும் இயல்பு கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு 10-ல் உள்ள சூரியன், கேது ஆன்மிக தொடர்புகளை வழங்குவார்கள்.
வாகன உற்பத்தி தொழில்துறையினர், விளைபொருள் வியாபாரிகள் சிறப்பான வளர்ச்சி, சமூக மதிப்பு பெறுவர். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய முதலீடுகளை செய்வதற்கான காலகட்டம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டும்.
கை கால் வலி, உடல் அசதி ஆகியவை ஓய்வு எடுக்க தீரும். சிவலிங்கத்திற்கு விபூதி அபிஷேகம் செய்த திருநீறை பயன்படுத்துவதாலும், சிவனடியார்களுக்கு அன்னதானம் தருவதாலும் நன்மை உண்டு.
தனுசு
பணம் விஷயத்தில் மற்றவர்கள் தங்களை ஏமாற்றினாலும், அவர்களை மன்னித்து விடும் இயல்புகொண்ட தனுசு ராசியினருக்கு 7-ல் உள்ள ராசியதிபதி, 8-ல் உள்ள சுபர்கள் காரிய வெற்றி தருவார்கள்.
அச்சக தொழில் துறையினர், ஹார்டுவேர், இரும்பு வியாபாரிகள் புதிய கிளை தொடங்குவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்பு மூலமும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகள் மூலமும் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர்.
கைகால், முதுகு வலி, உடல் அசதி ஏற்பட்டு சரியாகும். அருகில் உள்ள கோவில்களுக்கு தீபம் ஏற்ற நெய் வழங்குவதும், ஆடு மாடுகளுக்கு அருகம்புல் தருவதும் நன்மை ஏற்படுத்தும்.
மகரம்
எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் கவலை கொள்ளும் மகரம் ராசியினருக்கு 7-ல் உள்ள சுப கிரகங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார்கள்.
இரும்பு தொழில் துறையினர், எண்ணெய், திரவ வியாபாரிகள் பல நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்திப்பர்.
ரியல் எஸ்டேட் துறையினர் பணிகளை நேரில் பார்வை செய்வதாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு புதிய பங்குதாரர்கள் மூலமும் நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவர்.
வெளியிடங்களில் நீர் பருகுவது, சாப்பிடுவது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றை வழிபடுவதும், ஆதரவற்ற விதவைகளுக்கு பொருளுதவி செய்வதும் நன்மை தரும்.
கும்பம்
அவசரப்பட்டால் எதுவும் நடக்காது என்ற உண்மையை தெரிந்து நிதானமாக செயல்படும் கும்பம் ராசியினருக்கு 7-ல் உள்ள சூரியன் நிர்வாகம், அரசு தரப்பு நன்மைகளை தருவார்.
மளிகை தொழில் துறையினர், பர்னிச்சர், நகை வியாபாரிகள் வழக்கத்தை விட குறைவாக முதலீடு செய்வது நல்லது. அரசு உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர்.
ரியல் எஸ்டேட் துறையினரும், ஷேர் மார்க்கெட் பிரிவினரும் புதிய வாய்ப்புகளில் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கைகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அஜீரணக் கோளாறு, வயிற்று வலி ஏற்பட்டு விலகும். பெருமாள் கோவிலில் அவரவர் எடைக்கு ஏற்ப கல்கண்டு அல்லது சர்க்கரை தானம் தருவதால் நன்மை உண்டு.
மீனம்
எந்த ஒரு வேலையையும் தொடங்குவதற்கு முன்னதாகவே அதனுடைய சாதக பாதகங்கள் குறித்து கணக்கிட்டு செயல்படும் மீனம் ராசியினருக்கு 5-ல் உள்ள சுப கிரகங்கள் மனதில் உற்சாகத்தை தருவார்கள்.
நவநாகரிக ஆடை தயாரிப்பு தொழில்துறையினர், பெண்கள் உடை வியாபாரிகளுக்கு கடந்த கால தொழில் பிரச்சினைகள் விலகி லாபம் அடைவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு நலமான காலகட்டம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களது வழிகாட்டுதல்களை பெறுவது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.
உடலில் அசதி, கைகால் வலி, சோர்வு ஏற்பட்டு விலகும். இயன்றவரை மவுனவிரதம், உண்ணாநோன்பு இருப்பதும், இரவு நேரங்களில் வறியவர்களுக்கு உணவு வழங்குவதும் நன்மை தரும்.