வார ராசிபலன் - 21.09.2025 முதல் 27.09.2025 வரை...ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
அன்பு நெஞ்சமும், தாராள மனமும் உடைய மேஷம் ராசியினரை இந்த வாரம் விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். பாக்கியத்தை பார்க்கும் குரு, ராசியை பார்க்கும் செவ்வாய் ஆகியோரால் சுபச் செய்தி தேடி வரும்.
வேளாண்மை உற்பத்தி தொழில் லாபம் அடையும். ஏற்றுமதி-இறக்குமதி, உணவுப் பொருள், பர்னிச்சர் வியாபாரிகள் தொழிலில் ஆதாயம் ஏற்படும். அதிகாரத்தில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சிக்கல் நீங்கி வெற்றி பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்லகாலம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வாசனாதி திரவியங்கள், மசாலா பொருட்கள், எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். மாணவர்கள் ஆன்மிக விஷேசங்களில் பங்கு கொள்வர்.
மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் விலகும். ஆதரவற்ற, வயதானவர்களுக்கு ஆடைதானம், அன்னதானம் செய்வது நன்மை தரும்.
ரிஷபம்
தன்னை மறந்து அழகை ரசிக்கும் இயல்பு கொண்ட ரிஷபம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவர். ராசி அதிபதி அந்தஸ்தையும், கௌரவத்தையும் உயர்த்துவார்.
நெருப்பு, மருத்துவம் தொழில்துறை தடை கடந்து வெற்றி அடையும். லேத், ஆலோசனை, மருத்துவ உபகரண வியாபாரம் முன்னேற்றம் பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி ஆதாயம் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் விருத்தி பெறும். ஷேர் மார்க்கெட் அரசுத்துறை, இரும்பு, கட்டிட பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபம் தரும். மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற தேவையான ஆலோசனை பெறுவர்.
இருமல், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு அகலும். இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். கோவில் வாசலில் உள்ள வறியவர்களுக்கு பொருளுதவி, அன்னதானம் அளிப்பது நன்மை தரும்.
மிதுனம்
நம்பியவர்களிடம், விசுவாசமாக நடக்கும் மிதுனம் ராசியினர் இந்த வாரம் குடும்ப, சமூக நற்காரியங்களில் புகழ் பெறுவர். ராசியதிபதி மனதில் தைரியத்தை ஏற்படுத்துவார்.
ஆடிட்டிங், அழகு சாதன, எழுத்து சார்ந்தவர்கள் வெற்றி பெறுவர். மொத்த கொள்முதல், மளிகை, சில்லறை விற்பனையில் புது கூட்டாளியால் முன்னேற்றம் பெறும். உத்தியோகஸ்தர்கள் புது மாற்றங்களை சந்திப்பர்.
ரியல் எஸ்டேட் நீர்நிலை பகுதி திட்டங்களால், ஷேர் மார்க்கெட் ஆடை ஆபரணம், தங்க நகை, ஏற்றுமதி பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகளில் பங்கு பெறுவர்.
காலம் தவறி வெளியிடங்களில் உணவு உண்பதால் வயிற்றுக் கோளாறு, தொண்டை வலி ஏற்பட்டு அகலும். அன்னை வழி மாமா, தந்தை வழி அத்தைக்கு பரிசு வழங்கி ஆசிகளை பெறுவது நன்மை தரும்.
கடகம்
மனதில் மென்மையும், வலிமையும் கொண்டு செயல்படும் கடக ராசியினர் இவ்வாரம் நன்மை தரும் புதிய தொடர்பு பெறுவர். சனி, சுக்கிரன் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்குவார்கள்.
அழகு சாதனம், வட்டி, லாட்ஜ், அழகு நிலைய தொழில், கட்டிட பொருள் விற்பனை, சொகுசு வாகனம், தரகு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெற்று உயர்வர்.
ரியல் எஸ்டேட்டில் பெருநகரங்களில் கட்டுமான திட்டம், ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் வழக்கத்தை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மன உளைச்சல், தலைவலி, முதுகுவலி ஏற்பட்டு மருத்துவத்தால் குணமாகும். மனைவி வழி சொந்தங்களுக்கு உதவி செய்வதும், மனைவி வழி முதிய உறவினர்களிடம் ஆசி பெறுவதும் நன்மை ஏற்படுத்தும்.
சிம்மம்
தைரியம், கூச்சம், மற்றவர் கருத்தை மதிக்கும் குணம் உள்ள சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு பகவான் தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவார்.
லேத், மின் காண்ட்ராக்ட், விவசாயம், உலோகம், கட்டுமான பொருள், மின்பொருள் விற்பனை, பூஜா ஸ்டோர் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகம் மூலம் எதிர்பாரா ஆதாயம் உண்டு.
ரியல் எஸ்டேட்டில் கடன்கள் அடையும். ஷேர் மார்க்கெட்டில் கேளிக்கை விடுதி, உலோக தயாரிப்பு, ஹோட்டல் பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் கணினி, பொறியியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவர்.
தலைசுற்றல், மயக்கம் வருவதுபோல இருந்தால் தக்க மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் இரு முதியோருக்கு அன்னதானம், பொருள் தானம் தருவது நன்மை தரும்.
கன்னி
வேடிக்கையான சுபாவம், துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் உள்ள கன்னி ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். சுக்கிரன் பேச்சில் இனிமையை கூட்டுவார்.
டிம்பர், பணம் கொடுக்கல் வாங்கல், கல்வி தொழிலில், சமையலறை பொருள், புத்தகங்கள், ஆன்மீக பொருள் வியாபாரம் திட்டமிட்ட லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பர்.
ரியல் எஸ்டேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு, ஷேர் மார்க்கெட்டில் அரசு பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை, அரசு போட்டித் தேர்வுகளை எழுத ஆலோசனை பெறுவர்.
வயிற்று உபாதை ஏற்பட்டு விலகும். மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும் முதியோர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் நாய்களுக்கு பிஸ்கட் வழங்குவது, பைரவருக்கு அபிஷேகம் செய்வது நன்மை தரும்.
துலாம்
மற்றவர் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் துலாம் ராசியினருக்கு இவ்வாரம் புது நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவார்கள்.
ஓட்டல், உரம், இரும்பு, திரவ தொழில் துறையினர் முன்னேறுவார்கள். சிறு விற்பனை, விவசாய பொருள், மண், கல் வியாபாரிகள் லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் நடக்கும் திட்டங்களில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் ரசாயனம், மின்சாரம், கல்வி நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் உற்சாக சுற்றுலா சென்று மகிழ்வர்.
ஜலதோஷம் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு இயன்ற அளவு பண உதவி செய்தால் நன்மை உண்டு.
விருச்சிகம்
உண்மை அன்பும், பழக இனிமையான விருச்சிகம் ராசியினர் இந்த வாரம் சமூக முக்கியம் பெற்றவர்களாக உலா வருவர். லாபஸ்தான சூரியன் - புதன் பொருளாதாரம் முன்னேற்றம் தருவர்.
இன்ஜினியரிங், மெஷினரி, ஓட்டல் தொழில் துறையிலும், பர்னிச்சர், ரெடிமேடு ஆடை, வாயுப்பொருள் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் தாங்களே இறங்கி செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் மருத்துவம், ரியல் எஸ்டேட் நிறுவன, மதுபான நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் பாடங்களில் விஷேச கவனம் செலுத்த வேண்டும்.
வயிற்று கோளாறு, முதுகுவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். பள்ளி குழந்தைகளுக்கு, சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டுப் பொருள், இனிப்பு வகைகளை பரிசாக வழங்கினால் நன்மை ஏற்படும்.
தனுசு
இனிமையாக பேசுவதுடன், தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் தனுசு ராசியினர் இந்த வாரம் எதிர்பார்த்த தனவரவை பெறுவர். சுக்கிரன், சந்திரன் ஆகியோர் மன விருப்பத்தை பூர்த்தி செய்வார்கள்.
நிதி, கலைத்துறை, பத்திரிக்கை, அரசியல் துறையினர், கட்டிடப் பொருள், பிரிண்டிங், ஏஜென்சி வியாபாரிகள் நிதானமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் புது கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட்டில் ஆடை ஆபரண, தங்க நகை, ஜவுளி நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
சுகாதாரமான சூழலில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பானங்களை பருகுவது அவசியம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு, உறவினர்களுக்கு பரிசளித்து மனம் மகிழச் செய்தால் நன்மை உண்டு.
மகரம்
பேச்சில் வேடிக்கை, காரியங்களில் கவனம், நேர்மறை எண்ணம் கொண்ட மகர ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். சுக்கிரன் உள்ளிட்ட சுபகிரகங்கள் வெளிநாட்டு தொடர்பு ஏற்படுத்துவார்கள்.
என்ஜினியரிங், கட்டுமானம், மருத்துவம், கேட்டரிங் தொழில்களும், இரும்பு, செங்கல், விவசாய வியாபாரமும் தொழில் விரிவாக்கம் பெறும். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் பாராட்டு பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடு, ஷேர் மார்க்கெட்டில் எண்ணெய், பெட்ரோல், வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர்.
அலைச்சல், அசதி, தலை சுற்றல் ஏற்பட்டால் தக்க ஓய்வு, மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தந்தை வழி உறவினர்களுக்கு உதவி செய்து, அவர்களது ஆசிகளை பெறுவது பல நன்மைகளை தரும்.
கும்பம்
சிந்தித்து முடிவெடுப்பதுடன், ரகசியங்களையும் பாதுகாக்கும் கும்ப ராசியினருக்கு சிக்கல் அகன்று மனதில் நம்பிக்கை உருவாகும். குரு, சுக்கிரன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள்.
தங்க ஆபரணம், வட்டி, நிதி, அலங்கார பொருள் தொழில், இனிப்பு பண்ட உற்பத்தி, அலங்கார பொருள் தயாரிப்பு வியாபாரம் வெற்றியடையும். உத்தியோகஸ்தர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர்.
ரியல் எஸ்டேட்டில் புது வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு, பொறியியல், ஹோட்டல், சினிமா பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்வார்கள்.
ஜலதோஷம், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். புற்று உள்ள அம்மன் கோவில் அல்லது ஆலமரத்து அடியில் உள்ள நாகர் சிலைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை ஏற்படும்.
மீனம்
வெள்ளை உள்ளம், மற்றவர் மீது அக்கறை கொண்ட மீன ராசியினர் இந்த வாரம் அலங்கார பொருட்களை வாங்கி மகிழ்வர். ராசி அதிபதி சமூக மதிப்பை உயர்த்துவார்.
புத்தகம், கணக்கு வழக்கு தொழில், ஏஜென்சி, சிறு வியாபாரிகள் தொழிலில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலில் பதவி உயர்வு பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில், ஷேர் மார்க்கெட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர்.
தலைவலி, வயிற்று கோளாறு, வலி, அஜீரணம் ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் விலகும். முதிய, உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நன்மை உண்டு.






