வார ராசிபலன் - 07.09.2025 முதல் 13.09.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
நேர்மையோடு, பயம் இல்லாமல் செயல்படும் மனம் கொண்ட மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் 11-ம் இடம் பலமாக உள்ளதால் எண்ணியவை யாவும் நிறைவேறும்.
சுற்றுலா, பெட்ரோல் பங்க் தொழில் துறையினர், வேளாண் விளைபொருள், ஆடை, ஆபரண வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மற்றவர்களை முழுவதும் நம்பிவிட வேண்டாம்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் மருந்து பொருள், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் விளையாட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வாய்ப்புண், தொண்டை வலி, உடல் அசதி ஏற்பட்டு ஓய்வு, மருத்துவம் மூலம் குணமடையும். மவுனமாக இருப்பதும், வாரத்தில் இரண்டு, மூன்று முறை உண்ணா விரதம் இருப்பதும் நன்மை தரும்.
ரிஷபம்
எந்த சிக்கலையும் அதன் அடிப்படை தன்மையறிந்து தீர்க்கும் புத்தி கொண்ட ரிஷபம் ராசியினருக்கு 10-ம் இடம் பலமாக இருப்பதால், எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
ஐ.டி, மின் சாதன தயாரிப்பு தொழில், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மை பெறுவர். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் ஆதாயமடைவர்.
ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. ஷேர் மார்க்கெட்டில் பெட்ரோலியம், சுற்றுலா நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர்.
தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் அவற்றை கவனமாக மேற்கொள்ள வேண்டும். வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் நீங்கும். பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவதாலும், வயது முதிர்ந்த தம்பதியருக்கு பரிசளித்து வாழ்த்துப் பெறுவதாலும் சிக்கல்கள் விலகும்.
மிதுனம்
மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும் அமைதியாக அதை வெளிப்படுத்தும் மன இயல்பு கொண்ட மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் 9-இடம் பலமாக இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
பால்பொருள் உற்பத்தி, ஓட்டல் தொழில், ரசாயனம், வாகன வியாபாரிகள் தொழில் வெற்றிக்கான விஷயங்களை செயல்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த மாற்றங்கல் வந்து சேரும். ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு, நிதி நிறுவன பங்குகளில் எச்சரிக்கை வேண்டும். மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வர்.
தலை சுற்றல், தோல் பாதிப்பு, மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். குலதெய்வம், இஷ்ட தெய்வ மந்திரங்கள், பாசுரங்களை சொல்வது நன்மை தரும்.
கடகம்
மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும், காரியத்தில் கண்ணாக இருந்து ஜெயிக்கும் இயல்பு கொண்ட கடகம் ராசியினருக்கு இந்த வாரம் 8-ம் இடம் பலமாக இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை.
மருத்துவ, ரசாயன தொழில் துறை, நகை, ஜவுளி வியாபாரம் ஆகியவற்றில் புதிய திட்டங்களை நிறைவேற்றலாம். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவை பெறுவர்.
ரியல் எஸ்டேட்டில் வெற்றிக்கான காலம் கனிந்து விட்டது. ஷேர் மார்க்கெட்டில் ஹோட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம் உண்டு. மாணவர்கள் கணினி லாங்க்வேஜ் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர்.
காது வலி, உடல் அசதி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பொது இடங்களில் பானகம், நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதும், அம்மன் கோவில் அபிஷேகத்திற்கு பால் தருவதும் நன்மை தரும்.
சிம்மம்
சிக்கல்களால் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காணும் சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ம் இடம் பலமாக உள்ளதால் வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் நன்மை உண்டு.
தடை தாமதங்களை சந்திந்த தொழில் துறையினர், வியாபாரிகள் மகிழ்ச்சிகரமான முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெற்று உற்சாகம் அடைவர்.
ரியல் எஸ்டேட்டிலும், ஷேர் மார்க்கெட்டிலும் சிக்கல்கள் அகன்று தெளிவு பிறக்கும். மாணவர்கள் உற்சாகமாக கல்விச் சுற்றுலா சென்று மகிழ்வர்.
தோல் பாதிப்பு, மனக்குழப்பம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். கருப்பு நிற உடைகளை தவிர்ப்பதோடு, குழந்தைகளுக்கு இனிப்புகளை பரிசளிப்பதால் நன்மை வந்து சேரும்.
கன்னி
தன்னுடைய நலனுக்காக மற்றவர்களை மனதளவில் கூட சிரமம் கொடுக்க கூடாது என்ற எண்ணம் கொண்ட கன்னி ராசியினருக்கு இந்த வாரம் 6-ம் இடம் பலமாக இருப்பதால் பழைய கடன்கள் தீரும்.
சினிமா, மீடியா தொழில் துறையிலும், கட்டுமான பொருள்கள் வியாபாரத்திலும் சிக்கல்கள் அகன்று முன்னேற்றம் அடையும். உத்தியோகஸ்தர்கள் காலத்துக்கேற்ற தொழில்நுட்பத்தை கற்பது அவசியம்.
ரியல் எஸ்டேட்டில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஷேர் மார்க்கெட்டில் ஓட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் நல்ல லாபம் உண்டு. மாணவர்கள் எதிர்கால நலனுக்கான தொழில்நுட்பங்களை பழகுவார்கள்.
தொண்டை வலி, காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள கோவில்களில் கைங்கரியம் செய்வது, முதியோர்களுக்கு அன்னதானம், பொருள் தானம் செய்வதால் நன்மை ஏற்படும்.
துலாம்
சுயமாக சிந்தித்து, செயல்பட்டு காரிய வெற்றி பெறும் துலாம் ராசியினருக்கு இந்த வாரம் 5-ம் இடம் பலமாக இருப்பதால் மனதில் தெய்வீக உணர்வும், புதிய சிந்தனைகளும் ஏற்படும்.
ஓட்டல், ஆடை, ஆபரண தயாரிப்பு தொழிலிலும், ஏற்றுமதி-இறக்குமதி, சுறு வியாபாரமும் எதிர்பார்த்த லாபத்தை தரும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் தங்கள் தனித்திறன்களை காட்டும் நேரம் இது.
ரியல் எஸ்டேட்டில் பணிகளை நேரில் பார்வை செய்வது அவசியம். ஷேர் மார்க்கெட்டில் விமான, கப்பல் நிறுவன பங்குகளால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு வெளிநாடு சென்று பணியாற்றுவது குறித்த ஆர்வம் ஏற்படும்.
ஜீரணக் கோளாறு, மன அழுத்தம், அடிவயிறு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நீர்மோர், தண்ணீர் தானம் செய்வதாலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உதவி செய்வதாலும் நன்மை உண்டு.
விருச்சிகம்
மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்ற எண்ணம் கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 4-ம் இடம் பலமாக இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உதவி உண்டு.
மருத்துவம், விவசாயம், இரும்பு தொழிலும், வாகனம், கட்டுமான பொருள், கணினி உதிரிபாக வியாபாரத்திலும் தொழில் விரிவாக்கம் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் திறமை நிர்வாகத்துக்கு தெரிய வரும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் நிதானமாகச் செயல்பட லாபம் உண்டு. மாணவர்கள் எதிர்கால பணி வாய்ப்பு பற்றிய ஆலோசனை பெறுவர்.
கணுக்கால் வலி, முட்டி வலி, வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். பொது இடங்களில் நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவது, குலதெய்வ, இஷ்ட தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்வதாலும் சிக்கல் விலகும்.
தனுசு
மன துணிச்சலை எல்லா நேரங்களிலும் வெளிக்காட்டாமல் அமைதியாக நடந்து கொள்ளும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 3-ம் இடம் பலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு.
அச்சகம், ஹெர்பல் தயாரிப்பு, ஏஜென்சி தொழிலிலும், மளிகை, காய்கறி, உதிரி பாக விற்பனையிலும் சுணக்கம் நீங்கி வேகம் எடுக்கும். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய அடுக்குமாடி திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் வங்கி, கல்வி நிறுவன, அரசு ரசாயன நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி பெறுவர்.
தோல் பாதிப்பு, மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் தருவதன் மூலமும், மூலவருக்கு வாசனை மிகுந்த மாலை சமர்ப்பிப்பதன் மூலமும் நன்மை ஏற்படும்.
மகரம்
திட்டங்களை தனியாக வகுத்தாலும், அனைவரோடும் இணைந்து செயல்படும் தனித்தன்மை கொண்ட மகரம் ராசியினருக்கு இந்த வாரம் 2-ம் இடம் பலமாக இருப்பதால் சொல்வாக்கு, செல்வாக்கு உயரும்.
மருந்து, செருப்பு, இரும்பு தொழில்களும், உணவகம், மார்க்கெட் காய்கறி, பெரிய மால், பால் வியாபாரமும் முன்னேற்றப் பாதையில் செல்லும். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி பெருமூச்சு விடுவர்.
ரியல் எஸ்டேட்டில் தொழில் விருத்தி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் மசாலா தயாரிப்பு, ஓட்டல் துறை, சுற்றுலா நிறுவன பங்குகளில் லாபமுண்டு. மாணவர்கள் வெளியூர் தொழில்நுட்ப அரங்குகளில் கலந்து கொள்வர்.
கை கால் வலி, உடல் அசதி, மனக்குழப்பம், சளித்தொல்லை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பெருமள் கோவில் பக்தர்களுக்கு புளியோதரை தானமும், சொந்த சகோதர-சகோதரிகளுக்கு பரிசளிப்பதாலும் நன்மை உண்டு.
கும்பம்
எவ்வளவு உயரமாக சென்றாலும் பூமிக்கு வந்து ஆக வேண்டும் என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்ட கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் ராசி பலமாக இருப்பதால் சமூகத்தில் மதிப்பு உயரும்.
எந்திரம், ஜவுளி, மார்க்கெட் விற்பனை தொழிலிலும், சாலையோர கடை, ஜவுளி, எந்திர உதிரிபாக வியாபாரத்திலும் புதிய பாதை தெரியும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெற்று மகிழ்வர்.
ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட்டில் வேளாண்மை, அரசு கட்டுமான, தனியார் மோட்டார் நிறுவன பங்குகளிலும் லாபம் அடைவர். மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகும்.
மன உளைச்சல், மனக்குழப்பம், ஜீரண கோளாறு ஏற்பட்டு ஓய்வு எடுப்பதன் மூலம் விலகும். வயதான தம்பதிகளுக்கு அன்னமிட்டு பரிசு வழங்கி, ஆசி பெறுவதால் நன்மை வந்து சேரும்.
மீனம்
நண்பர்களுடைய கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் அவர்களை அனுசரித்துச் செல்லும் நல்ல மனம் கொண்ட மீனம் ராசியினருக்கு இந்த வாரம் 12-ம் இடம் பலமாக இருப்பதால் வீடு-மனை பராமரிப்பு செய்வீர்கள்.
ஜவுளி, சிறு, குறு தொழில், ஏஜென்சி, ரசாயன தொழில்களிலும், கட்டுமான பொருள், விளைபொருள், நோட் புத்தக வியாபாரத்திலும் புதிய ஆர்டர் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிட மாற்றமுண்டு.
ரியல் எஸ்டேட்டில் வேறு ஊரில் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் கட்டிட பொருள், வங்கி, கல்வி, அறக்கட்டளை பங்குகளில் ஆதாயமுண்டு. மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி பெறுவர்.
சிறுநீர் தொற்று, வயிற்று வலி, பசியின்மை ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். ஆதரவற்ற வயதான பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வதாலும், தாயார் கோவிலுக்கு நெய்தானம் தருவதும் சிக்கலை விலக்கும்.