வார ராசிபலன் 23.02.2025 முதல் 01.03.2025 வரை


வார ராசிபலன் 23.02.2025 முதல் 01.03.2025 வரை
x
தினத்தந்தி 23 Feb 2025 1:50 PM IST (Updated: 23 Feb 2025 1:51 PM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

இந்த வார ராசி பலன்

மேஷம்

பல்வேறு அனுபவங்களை சந்தித்து வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடக்கும் மேஷ ராசியினருக்கு முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். இல்லத்தரசிகளின் மனம் மகிழும்.

தொழில், வியாபார துறையினர் புது நபர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவார்கள். சுய தொழில் செய்யும் பெண்மணிகளுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

விவசாயம், ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் ஆகிய துறையினருக்கு இது லாபகரமான காலகட்டம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகும். அடிவயிற்று பகுதிகளில் வலி ஏற்பட்டு மருத்துவம் மூலம் குணமடையும்.

உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை அளித்து அவர்கள் மனம் மகிழும்படி செய்தால் பல நன்மைகள் உண்டு.

ரிஷபம்

பிறர் மீது அன்பு காட்டுவதால் பல கஷ்ட நஷ்டங்களை அடைந்தாலும் தங்கள் பாதையில் இருந்து விலகாத மனம் கொண்ட ரிஷப ராசியினருக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும் காலகட்டம் இது. குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதல் பணிகளை எடுத்து செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள்.

கலைத்துறையில் உள்ள பெண்மணிகள் புதிய வாய்ப்புகளை பெற்று பிரபலமடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்வார்கள். பயணங்களின்போது சுகாதாரமற்ற சூழலில் நீர் அருந்துவது, உணவு உண்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

உறவினர் வீட்டு சுப காரியங்களுக்கு தேவையான பொருள் உதவி அல்லது உங்களால் இயன்ற உதவிகளை செய்வது பல நன்மைகளை தரும்.

மிதுனம்

சுதந்திரமாக செயல்பட்டால் சாதாரண விஷயத்தையும் சாதனையாக மாற்றும் தன்மை படைத்த மிதுன ராசியினருக்கு முயற்சிகள் தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. இல்லத்தரசிகள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் உண்டு.

தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை நம்பாமல் எந்த ஒரு விஷயத்தையும் அவர்களே செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் புதிய முதலீடுகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் சூழல் உருவாகும்.

ஏற்றுமதி, வெளிநாட்டு தொடர்புகள் லாபகரமாக இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு கல்வியில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. முதுகு வலி, முட்டி வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு மலர் மாலைகள் சமர்ப்பித்து அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்கினால் நன்மைகள் உண்டு.

கடகம்

நம் மீது மற்றவர்கள் அன்பு செலுத்தாவிட்டாலும் நாம் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவோம் என்ற நல்ல மனம் கொண்ட கடக ராசியினருக்கு லாபகரமான வாரம் இது. வியாபாரிகள், தொழில் துறையினர் சிரமப்பட நேர்ந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு அரசு தரப்பு நன்மை உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். ரியல் எஸ்டேட், விவசாயம் ஆகிய துறைகளில் எதிர்பாராத லாபம் உண்டு. ஷேர் மார்க்கெட் ஆதாயம் தரும். வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.

கல்லூரி மாணவர்கள் புதிய தொடர்புகள், நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். பல இடங்களுக்கும் சென்று வருவதால் அலைச்சல் காரணமாக தலைவலி மற்றும் உடல் அசதி ஏற்படும்.

இந்த வாரம் இயன்றவரை மவுன விரதம் இருப்பதும், இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று அடிக்கடி வணங்குவதும் நன்மைகளை தரும்.

சிம்மம்

சரியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதால் பலருடைய நட்பை இழந்து இருந்தாலும் நேர்வழியில் நடக்கும் மனம் கொண்ட சிம்ம ராசியினருக்கு பொருளாதார ரீதியாக அனுகூலமான காலகட்டம் இது. இல்லத்தரசிகள் உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகளுக்கு ஏற்ற பண வரவு உண்டு.

தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடு செய்வதில் நிதானமாக இருக்க வேண்டும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதலாக கவனம் செலுத்தி பாடங்களை படிக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல இடங்களுக்கும் பிரயாணம் சென்று வருவதால் உடல் அசதி மற்றும் கை கால் வலி ஏற்பட்டு நீங்கும்.

வயதானவர்களுக்கு அன்னதானம் மற்றும் பொருள்தானம் இயன்றவரை செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

கன்னி

எவ்வளவு பரபரப்பாக செயல்பட்டாலும் அமைதியுடன் ஒரு இடத்திலிருந்து அனைத்தையும் சிந்தித்துப் பார்க்கும் தன்மை கொண்ட கன்னி ராசியினருக்கு பெரியோர் ஆசிகள் கிடைக்கும் காலகட்டம் இது. இல்லத்தரசிகள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வர்.

தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு கவனமாக முதலீடு மற்றும் கொள்முதல் செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டும். அரசியல் மற்றும் அரசாங்க காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டு. ஷேர் மார்க்கெட் துறையினர் எரிவாயு மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். பழைய கடன் சுமை அகலும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக செயல்பட்டு சாதனை படைப்பார்கள். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.

துப்புரவு பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள் ஆகியோருக்கு இயன்றவரை பொருள் தானம் செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

துலாம்

அதிக மகிழ்ச்சியாக இருந்தால் அதிக துன்பங்களையும் சந்திக்க வேண்டிவரும் என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்த துலாம் ராசியினருக்கு மனதில் புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உருவாகும் வாரம் இது. வாழ்க்கைத் துணையின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டால் பல பிரச்சினைகள் தீரும். ஒரு சிலருக்கு வீடு, வீட்டு மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

தொழில் துறையினர், வியாபாரிகள் கூடுதலாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் ஆகிய துறையினர் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களுடைய வழிகாட்டுதல்களை பெற்று கூடுதல் மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டும். அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு அகலும்.

இரவு நேரங்களில் தெருநாய்களுக்கு உணவு அளிப்பதும், காலை நேரங்களில் பசு மாட்டுக்கு அகத்திக்கீரை மற்றும் அருகம்புல் அளிப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

மனதில் உள்ள அச்சத்தை விலக்கி செயல் புரிந்து சாதிக்கும் மனோதிடம் கொண்ட விருச்சிக ராசியினருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும் காலகட்டம் இது. இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் காலகட்டம் இது. தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும். அசையா சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

தொழில்துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் மற்றும் ஊதிய உயர்வை பெறுவார்கள். முயற்சிகள் எதிர்பாராத வெற்றி தரும். ரியல் எஸ்டேட் துறையினர் மற்றும் ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய தொடர்புகள் மூலம் பல ஆதாயங்களை அடைவார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலைத்துறையில் ஈடுபாடு கொள்வதற்கான சூழல் உருவாகும். உடல் நலனை பொறுத்தவரை சுவாசப் பிரச்சினைகள் மற்றும் தொண்டை பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு விலகும்.

இந்த வாரம் முழுவதுமே கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்ப்பதும், இயன்றவரை மவுனம் காப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

தனுசு

மற்றவர்களை நம்புவதால் ஏமாற்றம் அடைந்தாலும் மனிதர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் தன்மை கொண்ட தனுசு ராசியினருக்கு பொருளாதாரம் திருப்திகரமாக உள்ள வாரம். வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும்.

தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்க முடியும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.

பள்ளி கல்லூரி மாணவர்களது சாதனைகளால் ஆசிரியர்களுக்கு பெருமைகள் ஏற்படும். கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் வலிகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை உடனடியாக பெற வேண்டும்.

அருகிலுள்ள எந்த கோவிலாக இருந்தாலும் அங்கு இயன்றவரை மாலை நேரங்களில் ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது பல நன்மைகளை தரும்.

மகரம்

எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்த பிறகு அதில் இறங்கி காரியமாற்றி ஜெயிக்க வேண்டும் என்ற மனம் கொண்ட மகர ராசியினருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும் வாரம் இது. இல்லத்தரசிகள் மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் நடக்கும்.

தொழில்துறையினர் தடைதாமதங்களுக்கிடையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு. விவசாயம், ரியல் எஸ்டேட் துறையினருக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. கலைத்துறையினர் புதிய தொடர்புகளால் எதிர்பாராத வாய்ப்புகளை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் துறையில் லாபம் உண்டு.

பள்ளி கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் பழுதடைந்த மின்சார உபகரணங்கள், எரியாத மின்விளக்கு ஆகியவற்றை கவனித்து மாற்றுவதும், பழைய அட்டைப் பெட்டிகளை அகற்றுவதும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

கும்பம்

மனிதர்களின் உதவியை விட ஆண்டவனின் உதவியே எனக்கு போதும் என்ற எண்ணத்தோடு காரிய வெற்றிக்கு அயராது உழைக்கும் கும்ப ராசியினர் விடாமுயற்சியோடு செயல்பட்டு வெற்றி பெறும் வாரம் இது. இல்லத்தரசிகள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு சிலர் புதிய கடன் பெற்று பழைய கடன்களை திருப்பி செலுத்துவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் துறையினர், வியாபாரிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் துணிகர முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை மற்றவர்களால் மன உளைச்சல் ஏற்பட்டு அமைதி பாதிக்கப்படும்.

அருகில் உள்ள கோவிலில் நடக்கும் அன்னதானத்திற்கு இயன்றவரை பங்களிப்பது அல்லது தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டு.

மீனம்

விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற தத்துவத்தை புரிந்து அதற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மனோபாவம் கொண்ட மீன ராசியினருக்கு தகவல் தொடர்பு மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்கு எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை உண்டு.

தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் இந்த வாரம் நிதானமாக சந்தை நிலவரத்தை கவனித்து செயல்பட வேண்டும். ஏற்றுமதி, வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் ஏற்படும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை கிடைக்கப்பெறுவார்கள். உடல் நலனை பொறுத்தவரை தூக்கம் பாதிக்கப்படுவதால் மன உளைச்சல் ஏற்படும்.

சிரமமான நிலையில் உள்ள வாழ்க்கைத் துணையின் உறவினர்களுக்கு இயன்றவரை பொருள் உதவி அளிப்பதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.


Next Story