வார ராசிபலன் 16.02.2025 முதல் 22.02.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்தவார ராசிபலன்:
மேஷம்
எந்த விஷயத்திலும் அனுபவம் என்பதே முக்கியம் என்ற மனநிலை கொண்ட மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் புது நண்பர்கள் கிடைத்து மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை மேம்படுவதால் மன நிம்மதி ஏற்படும். இல்லத்துணையின் சொந்தங்களை அனுசரித்து செல்லவும்.
தடை தாமதங்களை சந்தித்த தொழில் துறையினர், வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளைப் பெற்று உற்சாகம் அடைவர். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு பிரகாசமான காலகட்டம் இது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா பயணம் சென்று மகிழ்வர். ஜலதோஷம் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமாகும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவ உதவி அல்லது பொருள் உதவி செய்வது நன்மைகளைத் தரும்.
ரிஷபம்
தான் சிரமப்பட்டாலும் தன்னை சார்ந்தவர்கள் சிரமப்படக்கூடாது, அவர்கள் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ரிஷபம் ராசியினருக்கு, சிக்கல்கள் அகன்று மனதில் நம்பிக்கை மனதில் உருவாகும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் புது சிக்கல்களை சந்தித்து வெற்றிகரமாக கடந்து செல்வர். உத்தியோகஸ்தர்கள் காலத்துக்கேற்ற தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எதிர்பார்த்த லாபம் அடைவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது விஷயங்களை அறிந்து கொள்வர். ஜலதோஷம், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும்.
துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அனாதை ஆசிரமங்களுக்கு தண்ணீர் பாட்டில் தானம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தும்.
மிதுனம்
சுதந்திரமான மனப்பான்மையும், மற்றவர்களை சார்ந்து செயல்படாத மன தைரியமும் கொண்ட மிதுனம் ராசியினர் இந்த வாரம் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவர். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் எந்தச் சிக்கலையும் சமாளிக்கும் மனதிடம் ஏற்படும்.
தொழில் துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்க முயற்சியில் பொறுமையாக இருக்கவேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு புதிய தொடர்பால் நன்மை ஏற்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் உதவுவார்கள். வெளியிடங்களில் சுகாதாரமான சூழலில் உணவு, தண்ணீர் ஆகியவற்றை அருந்துவது நல்லது.
வீடுகளில் வாசனை மிக்க தூபம் இடுவதும், கோவில்களுக்கு மணம் மிகுந்த சாம்பிராணி, குங்கிலியம் வாங்கித் தருவதன் மூலமும் நன்மைகள் ஏற்படும்.
கடகம்
அன்பும் மற்றவர்கள் மீது அன்பும், பரிவும் கொண்டு, யாருக்கும் எந்த கெடுதலும் மனதளவிலும் நினையாத கடகம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான பல சம்பவங்கள் நடந்தேறும். குடும்பச் செலவுகளை திறமையாகச் சமாளித்து விடுவீர்கள்.
தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் மதிப்பை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிதானமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால முனேற்றத்திற்னான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள். பயணங்களால் அசதி, தலை சுற்றல் ஏற்பட்டால் தக்க ஓய்வு, மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
ராகு காலங்களில் புற்று கோவில்களில் வழிபாடு செய்வது, பர்வையற்றவர்களுக்கு பொருள் உதவி செய்வதும் நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.
சிம்மம்
எந்த நேரத்திலும் நேர்மையோடு செயல்படும் மன தைரியமும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தன்மையும் கொண்ட சிம்மம் ராசியினர் இந்த வாரம் சமூக முக்கியத்துவம் பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்ப பொருளாதார நிலையில் எதிர்பாராத தனவரவு உண்டு.
தொழில் துறையினர், வியாபாரிகள் செலவுகளை சந்தித்து சுமுகமாக சரி செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய முதலீடுகளை செய்வதற்கான காலகட்டம் இது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.வயிற்று கோளாறு, கைகால் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும்.
ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் நெய் தீபம் ஏற்றி வருவது அல்லது அங்குள்ள கருவறையில் உள்ள தீபத்தில் நெய் சேர்த்து வருவதால் பல நன்மைகள் ஏற்படும்.
கன்னி
எவ்வளவு பெரிய சிக்கல்கள் ஏற்பட்டாலும் மன அமைதியை கைவிடாமல் செயல்பட்டு, பிரச்சினைகளின் அடிப்படை என்ன என்று அறியும் திறன் பெற்ற கன்னி ராசியினர் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் கடந்த கால சிக்கல்கள் விலகி, எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் அடைவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். நேரம் கெட்ட நேரத்தில் உண்பதால் வயிற்று கோளாறு, அஜீரணம் ஏற்படும்.
பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி ஆசிரியர்கள், ஆன்மநெறிச் சான்றோர்களை வணங்கி ஆசிகளை பெறுவதால் பல நன்மைகள் ஏற்படும்.
துலாம்
எந்தச் சூழ்நிலையிலும் மன உற்சாகத்தை இழந்து விடாமல், சமநிலையோடு செயல்படும் துலாம் ராசியினரை இந்த வாரம் விலகிய உறவுகள் நாடி வரும். குடும்ப செலவு அதிகரித்தாலும் தக்க பொருள் வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் தொழில் வெற்றிக்கான பல விஷயங்களை செயல்படுத்துவார்கள். அதிகார பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். ரியல் எஸ்டேட் துறையினர் நன்மை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். மன உளைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும்.
அடர்த்தியான நிற ஆடைகளை அணியாமல் மஞ்சள், வெள்ளை நிற ஆடைகளை அணிவது, மவுன விரதம் இருப்பது ஆகியவை காரிய வெற்றி தரும்.
விருச்சிகம்
காரியம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அதில் வெற்றி என்பது முக்கியம் என்ற மனநிலை கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு.
தொழில் துறையினர், வியாபாரிகள் திட்டங்களை நேரம் பார்த்து நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினர் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஹோட்டல் தொழில், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம். அடைவர். ரியல் எஸ்டேட் பிரிவினருக்கு காலம் கனிந்து விட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி சம்பந்தமான தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். தலைசுற்றல், மயக்கம் இருந்தால் மருத்துவ ஆலோசனை வேண்டும்.
துப்புரவு தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகளுக்கு ஆடை மற்றும் அன்னதானம் செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
தனுசு
நம்பிக்கைக்கு உரியவர்களிடம் விசுவாசமாகவும், எதிரிகளுக்கு எதிரிகளாகவும் செயல்படும் தனுசு ராசியினர் இந்த வாரம் சமூக நற்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கைகளுக்கு வந்து சேரும். இல்லத்துணையுடன் வாக்குவாதம் கூடாது.
தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய கூட்டாளிகள், ஆர்டர்கள் கிடைத்து மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் வேறு ஊர்களில் புதிய கட்டுமானத் திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வெளிநாட்டு பங்குகளில் ஆதாயம் பெறுவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கருத்துப்பட்டறை, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள். வயிற்றுக் கோளாறு, தொண்டை வலி ஏற்பட்டு சிகிச்சையால் அகலும்.
அனாதை இல்லங்களில் உள்ள வயதான பெண்களுக்கு இயன்ற அளவில் ஆடை தானம், அன்னதானம் செய்வது பல நன்மைகளை அளிக்கும்.
மகரம்
மனதில் ஏராளமான எண்ணங்கள் சிறகடித்து பறந்தாலும் தங்களுடைய நிலைத்தன்மையை எந்த நிலையிலும் இழந்து விடாத மகரம் ராசியினர் இந்த வாரம் நன்மை தரக்கூடிய புதிய தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவுகள் உண்டு. சொந்தபந்தங்கள் விவகாரங்களில் கவனம் தேவை.
தொழில்துறையினர், வியாபாரிகள் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மன உளைச்சல், தலைவலி, உடல் அசதி ஏற்பட்டு மருத்துவத்தால் குணமாகும்.
அருகிலுள்ள திருக்கோவில்களுக்கு பூஜை, அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கித் தருவது அல்லது இவ்வாரம் நான்கு பேருக்கு அன்னதானம் செய்வதும் பல நன்மைகள் ஏற்படும்.
கும்பம்
தங்களுக்கென்று ஒரு வரையறை வகுத்துக் கொண்டு அவற்றில் மற்றவர்கள் வியக்கும் வகையில் சாகசமாக செயல் புரியும் கும்பம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். குடும்ப பொருளாதாரம் உயர்ந்து இல்லத்தரசிகள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவர்.
தொழில்துறையினர், வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் நடையிடுவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகி ஆதாயத்தை பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விருத்தி அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இனிப்பு தயாரிப்பு, ஓட்டல் துறை நிறுவன பங்குகளால் லாபம் அடைவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை கற்பதில் ஆலோசனை பெறுவர். இருமல், காய்ச்சல், கை, கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும், அவரவர் வயதுக்குரிய எண்ணிக்கையில் தீபம் அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவதும் நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.
மீனம்
பாதுகாப்பான சூழ்நிலையை உணரும் போதுதான் எந்த ஒரு விஷயத்திலும் துணிச்சலாக முடிவு எடுக்கும் தன்மை கொண்ட மீனம் ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
தொழில்துறையினர், வியாபாரிகள் திட்டமிட்ட லாபம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை, அரசு போட்டித் தேர்வுகளை எழுத ஆலோசனை பெறுவர். வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளும் முதியோர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனாதை ஆசிரமங்களுக்கு பால் வாங்கி தருவதும், சிவலிங்கத்துக்கு பால் மற்றும் தேன் கலந்த அபிஷேகம் செய்வதும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.