வார ராசிபலன் 30.03.2025 முதல் 05.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசி பலன்
மேஷம்
முன்கோபமும் அதற்கேற்ற நல்ல குணமும் கொண்ட மேஷம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். குடும்ப பொருளாதாரம் உயரும். கடன்கள் திருப்பி செலுத்தப்பட்டு மன நிம்மதி ஏற்படும்.
விவசாயம் மற்றும் இரும்பு சார்ந்த தொழில் துறையினருக்கு ஆதாயம் தரும் வாரம். புதிய நண்பர்கள் மூலம் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். மளிகை, நகை வியாபாரிகள் மனதில் திட்டமிட்ட தொழில் விரிவாக்க முயற்சிகளை செய்யலாம். தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் துறையினருக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய வாய்ப்புகளை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளால் மன உளைச்சல், உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு விலகும். ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் செய்வதன் மூலமும், அருகில் உள்ள முருகன் கோவிலில் தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவதன் மூலமும் நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்
கஷ்டமான சூழ்நிலையிலும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்ட ரிஷபம் ராசியினருக்கு மனதில் நினைத்த விஷயங்கள் இந்த வாரம் கைகூடும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடந்தேறும். பெண்மணிகளுக்கு நன்மைகள் நிறைந்த வாரம்.
தானியங்கள் மற்றும் மசாலா பொருள் வியாபாரிகள் புதிய வர்த்தக தொடர்பு பெற்று லாபம் அடைவார்கள். எந்திரத்துறை தொழில் முனைவோர் புதிய முன்னேற்ற பாதையில் செல்வார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வரவேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் தற்போது நடந்து வரும் கட்டுமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு தரப்பு பங்குகளில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக பாடங்களை படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய சிக்கல்கள் உடையவர்கள் மருந்துகளை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் அன்னதானம் செய்வதன் மூலமாகவும், வயதான தம்பதிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கி அவர்களுடைய ஆசிகளை பெறுவதன் மூலமும் நன்மைகள் உண்டு.
மிதுனம்
யாரிடம் எதை எப்படி பேசுவது என்ற நுட்பத்தை அறிந்துள்ள மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாரா முன்னேற்றம் உண்டு. நீண்ட நாட்களாக திட்டமிட்ட பல விஷயங்களை செய்வீர்கள். இல்வாழ்க்கை துணை உறவினர்களது சுபகாரிய நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் துறையினர், வங்கித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் பெருகும். நுகர்பொருள் மற்றும் பேன்ஸி பொருள் வியாபாரிகள் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பணி சார்ந்த விஷயங்களை மட்டுமே மற்றவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய வாய்ப்பு மூலம் லாபம் ஏற்படும். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு ஏற்றுமதி-இறக்குமதி பங்குகள் மூலம் ஆதாயம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் நற்பெயர் பெறுவார்கள்.
நேரத்துக்கு உணவு உண்பது, உடல் அசதி அல்லது வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் உடல் நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும். காது கேளாதோர், பார்வையற்றோர் ஆகியோருக்கு பொருள் தானம் அல்லது அன்னதானம் செய்வதாலும், சகோதர-சகோதரிகளுக்கு பரிசுப்பொருள்கள் வழங்குவதாலும் நன்மைகள் ஏற்படும்.
கடகம்
உணர்வுபூர்வமாக பேசி காரியத்தை சாதித்து கொள்ளும் திறன் பெற்ற கடகம் ராசியினருக்கு இந்த வாரம் தடை தாமதங்களை கடந்து வெற்றி பெறும் மன தைரியம் உருவாகும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை புதிய சுபச்செலவுகள் ஏற்படும்.
விவசாயம், லேத் தொழில் துறையினருக்கு சிக்கல்கள் நல்லவிதமாக விலகி புது வாய்ப்புகள் ஏற்படும். நுகர்பொருள் மற்றும் மசாலா ஏற்றுமதி வியாபாரிகள் பணப்புழக்கம் ஏற்பட்டு தொழில் விருத்தி செய்வார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த புதிய வாய்ப்பு கிடைக்கப்பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் தங்கம் மற்றும் ஆபரண பொருள் நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது தொழில்நுட்பங்களை கற்று கொள்வார்கள்.
காய்ச்சல், சளி மற்றும் வயிற்று கோளாறுகள் ஏற்பட்டு தகுந்த மருத்துவத்தால் குணமடையும். நீர்மோர் மற்றும் பானகம் தானம் செய்வதன் மூலமும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் அன்னதானம் வழங்குவதன் மூலமும் பல நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்
துணிச்சலோடு செயல்பட்டு காரிய வெற்றி அடையும் திறன் கொண்ட சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும்.
சுற்றுலா மற்றும் கேட்டரிங் தொழில் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். நகை வியாபாரிகள் மற்றும் ஆடை ஆபரண வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றை பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகளை பெறுவார்கள்.
குடும்ப சுப காரியங்கள் மற்றும் இதர பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பல இடங்களுக்கும் சென்று வருவதால் உடல் அசதியும் காய்ச்சலும் ஏற்படக்கூடும். குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் கோவிலுக்கு பசும்பால் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டு.
கன்னி
மென்மையாகவும் அன்பாகவும் பேசி மற்றவர்களை கவரும் குணம் கொண்ட கன்னி ராசியினருக்கு இந்த வாரம் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமாக பல இடங்களுக்கும் சுற்றுலா செல்லும் சூழல் ஏற்படும்.
கணினி, எந்திர உற்பத்தி தொழில் துறையினர் புதிய இடங்களில் தொழில் விரிவாக்கம் செய்ய நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்டேஷனரி, தினசரி சந்தை வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் பெருகி லாபம் பெறுவார்கள். தனியார் மற்றும் அரசு உத்தியோகஸ்தர்கள் பணி ரீதியான நல்ல செய்தி கிடைக்க பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலியம் மற்றும் விவசாய விளைபொருள் நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளிலும், விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
தலைவலி மற்றும் மன உளைச்சல் காரணமாக தலை சுற்றலோ மயக்கமோ ஏற்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். கன்றோடு கூடிய பசு மாட்டுக்கு அருகம்புல் வழங்குவதும், சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் பண உதவி செய்வதன் மூலமும் பல நன்மைகள் ஏற்படும்.
துலாம்
சொந்த பந்தங்கள் மற்றும் உறவினர்களை அனுசரித்து வாழ வேண்டும் என்ற கொள்கை கொண்ட துலாம் ராசியினருக்கு இது இனிய வாரம். குடும்ப நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமுகமாக முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
தானியங்கள், விவசாய விளைபொருள் உற்பத்தி தொழில் துறையினர் புதிய தொழில் முயற்சிகளை திட்டமிட்டு தொடங்க வேண்டும். பேன்சி ஆடை மற்றும் தங்க நகை வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கல், பணப்பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி ஆதரவை பெற்று நன்மை அடைவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது கூடாது. ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு குறித்த வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர்.
வெளியிடங்களில் நேரம் தவறி சாப்பிடுவதாலும், ஜீரணக்கோளாறு காரணமாகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமடையும். திருக்கோவில் வளாகத்தை சுத்தம் செய்வதன் மூலமாகவும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பானகம் மற்றும் நீர்மோர் தானமாக வழங்குவதன் மூலமாகவும் நன்மைகள் ஏற்படும்.
விருச்சிகம்
மென்மையான குணம் இருக்கும் அதே சமயம் எது குறித்தும் பயப்படாத திட மனது கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் பழைய நண்பர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படும். இல்லத்துணையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, உடனே அது விலகும்.
வேளாண் விளைபொருள் சார்ந்த தொழில் துறையினருக்கு அரசாங்கம் மூலம் நன்மைகள் ஏற்படும். மருந்து விற்பனை, மூலிகை மருந்து ஏற்றுமதி செய்யும் தொழில்துறையினருக்கு ஆதாயமான காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் மற்றும் சம்பள உயர்வு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் நடைபெறும் புதிய கட்டுமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறியியல் சார்ந்த படிப்பு மற்றும் பணி வாய்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்க பெறுவார்கள்.
விக்கல், மூச்சுக்கோளாறு மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். வீட்டுக்கு அருகில் உள்ள அம்பிகை அல்லது தாயார் சன்னதிக்கு தாழம்பூ குங்குமம் வாங்கி தருவதும், வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதும் பல நன்மைகளை தரும்.
தனுசு
மூத்தோர் சொல் வார்த்தைக்கு என்றும் மதிப்பும் மரியாதையையும் அளிக்கும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். மனைவி வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டு.
ஆடை தயாரிப்பு, மகளிர் ஆபரண உற்பத்தி தொழில் துறையினருக்கு நல்ல தொழில் விருத்தி உண்டு. புத்தக விற்பனை, தினசரி சந்தை வியாபாரிகளுக்கு இவ்வாரம் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்று செயல்படுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய, நிலக்கரி, சுரங்க நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை ஆலோசனையாக பெறுவர்.
காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டு தக்க சிகிச்சையால் விலகும். இயன்றவரை மவுன விரதம் இருப்பதும், வாரத்தில் இரண்டு நாளாவது ஒரு வேளை உண்ணா நோன்பு இருப்பதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
மகரம்
பொதுவெளியில் மற்றவர்களது மதிப்பையும் மரியாதையும் பெற்று பெருந்தன்மையோடு நடந்து கொள்ளும் குணம் கொண்ட மகரம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய செய்திகள் கிடைத்து மனதில் நம்பிக்கை உருவாகும். குடும்ப உறவினர்களுடன் சுமுக உறவு நீடிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.
செங்கல், பிளைஆஷ் பிரிக் தயாரிப்பு, விவசாய துறையினர் தொழில் விருத்தி செய்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம், கட்டிடப்பொருள் வியாபாரிகளுக்கு இது நல்ல காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான தொழிலாளர்களின் சிக்கல்களை விசாரித்து சரி செய்ய வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் உணவு மற்றும் மசாலா பொருள் விற்பனை நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு உடையவர்கள் மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு எடுத்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும் கன்னி பெண்களுக்கு பூக்கள், குங்குமம் பிரசாதம் மற்றும் இனிப்பு தானமாக வழங்குவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
கும்பம்
தன்னம்பிக்கையோடு எதையும் விட்டு கொடுக்காமல் ஜெயித்து காட்டும் கும்பம் ராசியினருக்கு இது முன்னேற்றமான வாரம். குடும்ப பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று வருவீர்கள்.
மளிகை கடை, விவசாய விளைபொருள் ஆகிய தொழில் துறையினருக்கு இது நல்ல காலகட்டம். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஆடை ஆபரண வியாபாரிகளுக்கு வர்த்தகம் அதிகரிக்கும். அரசு மற்றும் தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவனம், பால் பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மூலம் உயர்கல்விக்கான முயற்சிகளை செய்வர்.
உறவினர்கள் ஏச்சு பேச்சுகளால் மன உளைச்சல், பல இடங்களுக்கும் அலைவது போன்றவற்றால் உடல், மனச்சோர்வு ஏற்பட்டு விலகும். கடவுளை வழிபடும் பொழுது உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு ஸ்தோத்திரத்தை வாய் விட்டு உச்சரிப்பது மற்றும் குலதெய்வ அல்லது இஷ்ட தெய்வம் மந்திரத்தை உச்சாடனம் செய்வதும் பல நன்மைகளை தரும்.
மீனம்
கழுவும் மீனில் நழுவும் மீன் என்று சொல்லப்படுவது போன்று பிரச்சனைகளில் இருந்து சிக்காமல் நழுவும் குணம் உள்ள மீனம் ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கும். உற்றார் உறவினர் ஆதரவாக இருப்பர். பொருளாதார வரவு நன்றாக இருக்கும்.
கல்வி நிறுவனங்கள், உணவகங்களை நடத்துபவர்கள் நற்பெயர் பெறுவார்கள். திருமண மண்டபம், நகை வியாபாரிகள் ஆகியோர் தொழில் விரிவாக்கம் செய்து லாபம் பெறுவர். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலியம், பால் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறியியல், கணினி மேற்படிப்பு குறித்து அறிந்து பயனடைவர்.
சிறுநீரக பாதிப்பு, ஜீரணக்கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் சீராகும். உங்களால் முடிந்தவரை பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு வஸ்திர தானம் மற்றும் பொருள் தானம் அளிப்பது பல நன்மைகளை தரும்.