வார ராசிபலன் - 27.07.2025 முதல் 02.08.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
எதுவும் காலாகாலத்திற்கு நடக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மேஷம் ராசியினருக்கு 11-ல் உள்ள ராகு துணையாக செயல்படுவார்.
தானிய உற்பத்தி, இன்டீரியர் டிசைனர், விளையாட்டு பொருள் தயாரிப்பு துறையினர், நகை வியாபாரிகள், சட்ட ஆலோசகர்கள், கலைத்துறையினர் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த விஷயம் நடக்கும்.
ரியல் எஸ்டேட் துறையினர் புது திட்டங்களை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய நிறுவன பங்குகள் மூலமாகவும் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர்.
நேரம் தவறி சாப்பிடுவதாலும், ஜீரணக் கோளாறு காரணமாகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் குணமடையும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுடச்சுட சுவையான சர்க்கரை பொங்கல் வழங்கினால் நன்மை உண்டு.
ரிஷபம்
உற்சாகமாக இருந்தாலும் அவ்வப்போது அமைதியாகி விடும் ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் 2-ல் உள்ள சுப கிரகங்கள் தன வரவை ஏற்படுத்துவார்கள்.
நிதி ஆலோசனை, நிதி முதலீடு, பொறியியல் தொழில் துறையினருக்கும், மருத்துவர்கள், மருந்து விற்பனை, இண்டீரியர் துறையினருக்கும் ஆதாயம் உண்டு. அரசு, தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடுகளிலும், ஷேர் மார்க்கெட் துறையினர் மருத்துவமனை, சிமெண்ட், அரசு துறை நிறுவன பங்குகள் மூலமும் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு பணி வாய்ப்பு குறித்த தகவல் கிடைக்கப் பெறுவர்.
மூச்சுக்கோளாறு, வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். குலதெய்வம், அருகில் உள்ள பெண் தெய்வங்களுக்கு சந்தன காப்பு செய்வதும், மருத்துவ சிகிச்சை பெறுபவருக்கு உதவி வழங்குவதும் நன்மை தரும்.
மிதுனம்
பிறர் துன்பங்களை தன் துன்பங்களாக நினைத்து செயல்படும் மிதுனம் ராசியினருக்கு ராசியில் உள்ள சுபகிரகங்களால் எதிர்பார்த்த பண வரவு உண்டு.
ஆபரண உற்பத்தி, சுற்றுலா, டிஜிட்டல் தொழில் துறையினருக்கும், தினசரி சந்தை, மருத்துவ ஆராய்ச்சி, பத்திரிகையாளர் ஆகியோருக்கும் லாபம் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் கவனம் கொள்ள வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி, சுரங்கம், டிஜிட்டல் நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய கணினி மொழி கற்றுக் கொள்வர்.
சிறுநீரக தொற்று, மன அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். முடிந்தவரை மௌன விரதம், உண்ணா நோன்பு கடைபிடிப்பது நன்மை தரும்.
கடகம்
அன்புக்கு அன்பையும், கோபத்திற்கு கோபத்தையும் பரிசாக வழங்கும் கடகம் ராசியினருக்கு 12-ல் உள்ள சுக்கிரன் வீட்டின் உள் அலங்கார பணிகளை செய்ய வைப்பார்.
பொறியாளர்கள், பிளைஆஷ் பிரிக் தயாரிப்பு, விவசாயத் துறை, ஏற்றுமதி-இறக்குமதி, கட்டிடப்பொருள் வியாபாரிகள், அரசியல்வாதிகளுக்கு நல்ல காலம். அரசு உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் பழைய கடன்களை தீர்ப்பார்கள், ஷேர்மார்க்கெட் பிரிவினர் மசாலா பொருள், சரக்கு போக்குவரத்து, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன பங்கு மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர்.
வயிற்றுக் கோளாறு, தலைவலி, மன உளைச்சல் ஏற்பட்டு விலகும். பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவதும், ஆதரவற்ற முதியோருக்கு ஆடை தானம் செய்வதும் நன்மை தரும்.
சிம்மம்
தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் திறமை படைத்த சிம்மம் ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் உள்ள சுபகிரகங்களால் பொருளாதாரம் மேம்படும்.
கணினி, விவசாய விளைபொருள், மருத்துவ உபகரண தயாரிப்பு தொழில் துறையினருக்கும், ஆராய்ச்சி, எலக்ட்ரானிக்ஸ் பொருள், ஆடை ஆபரண வியாபாரிகளுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். தனியார், அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாடிக்கையாளர்களாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் சுற்றுச்சூழல், எரிவாயு நிறுவன, பால் பொருள் தயாரிப்பு நிறுவன பங்கு மூலம் ஆதாயம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராவர்.
மன உளைச்சல், உடல்-மனச்சோர்வு, சளி, காய்ச்சல் ஏற்பட்டு விலகும். தினமும் காலையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வைப்பதும், அருகில் உள்ள கோவில் கருவறை தீபத்திற்கு நெய் வழங்குவதும் நன்மை தரும்.
கன்னி
காலம் வரும் வரை காத்திருந்து காரிய வெற்றி பெறும் கன்னி ராசியினருக்கு 10-ல் உள்ள சுக்கிரன் புதிய தொடர்புகளால் லாபம் தருவார்.
உணவகம், கலைத்துறை, கம்ப்யூட்டர் துறையினர் லாபமும், நகை வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், மனநல ஆலோசகர்கள் வரவேற்பு பெறுவர். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய பங்குதாரர்கள் மூலமும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருத்துவமனை, பெட்ரோலியம், பால் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலமும் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி தொழில்நுட்ப கல்வியில் ஈடுபடுவர்.
ஜீரணக் கோளாறு, கை கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் சீராகும். கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பு பிரசாதம், ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு ஆடைதானம் செய்வது நன்மை தரும்.
துலாம்
குணத்தின் அடிப்படையில் மனிதர்களை எடை போடும் திறன் பெற்ற துலாம் ராசியினர் இவ்வாரம் பாக்கியஸ்தானத்தில் குருவோடு சேர்வதால் குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கு அச்சாரம் ஏற்படுத்துவார்.
மருத்துவம், விவசாயம், இரும்பு தொழில் துறையினரும், மருந்துக்கடை, கேட்டரிங், மளிகை கடை வியாபாரிகளும் திட்டமிட்டு முதலீடு செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணியிட பொறுப்புகளால், மன அழுத்தம் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் துறையினர் வெளிநாட்டு தொடர்புகள் மூலமும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து நிறுவனம், சரக்கு ஏற்றுமதி நிறுவன பங்கு மூலமும் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் வெற்றியும், உதவித்தொகையும் கிடைக்க பெறுவர்.
மன உளைச்சல், உடல் அசதி ஏற்பட்டு விலகும். முதியோர்களுக்கு இயன்ற உதவி செய்வதும், வீட்டில் தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபடுவதும் நன்மை தரும்.
விருச்சிகம்
மற்றவர் சொற்களால் இதயம் புண்பட்டு விடும் இயல்பு கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் அஷ்டமத்தில் உள்ள சுப கிரகங்கள் வெளிநாட்டுத் தொடர்புகளில் லாபம் தருவர்.
மசாலா, வேளாண் விளைபொருள், கட்டுமான பொருள் வியாபாரிகளும், புதிய தொழில் முனைவோர், போட்டோகிராபி, உணவக தொழில் துறையினரும் முன்னேற்ற பாதையில் செல்வர். உத்தியோகஸ்தர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய வாய்ப்புகளாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஓட்டல் நிறுவன பங்குகள் மூலமும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதாந்திரதேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவர்.
தலைசுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சையால் நீங்கும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புளி சாதம், இனிப்பு பிரசாதம் வழங்க நன்மை உண்டு.
தனுசு
மதி நுட்பத்தோடு ஒரு விஷயத்தை அணுகும் தனுசு ராசியினருக்கு இந்த வாரம் தொழில், உத்தியோகம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டு.
ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் துறையினர், மீடியா தொழில் துறையினருக்கும், நகை, நுகர்பொருள் ஏஜென்சி, பேன்ஸி பொருள் வியாபாரிகளுக்கும் நல்ல காலம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட் துறையினர் ஏற்றுமதி-இறக்குமதி பங்கு மூலம் ஆதாயம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி, விளையாட்டில் நற்பெயர் பெறுவர்.
கை-கால் வலி, மார்பில் வலி, அழுத்தம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடன் பிறந்தோர், நண்பர்களுக்கு பரிசும், இனிப்பும் வழங்குவதாலும், கோவில் கருவறை தீபத்துக்கு நெய் வழங்குவதாலும் நன்மை உண்டு.
மகரம்
மாற்று சிந்தனைகளோடு வித்தியாசமாக செயல்பட்டு வெற்றி பெறும் மகரம் ராசியினர் இந்த வாரம் அஷ்டம ஸ்தான அசுப கிரக சஞ்சாரம் காரணமாக நிதானமாக செயல்பட வேண்டும்.
இரும்பு, உணவு, மருத்துவ தொழில் துறையினருக்கு வளர்ச்சிக்கான புது வாய்ப்பும், மசாலா பொருள், ரசாயனம், விளையாட்டு பொருள் வியாபாரிகள் தொழில் விருத்தியும் பெறுவர். மனிதவளத்துறை உத்தியோகஸ்தர்கள் உரிய பணியிட அங்கீகாரம் பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து உற்பத்தி, ஆபரண தயாரிப்பு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்ப பயிற்சி பெற வாய்ப்பு உருவாகும்.
வயிற்று கோளாறு, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்வது, பெண் குழந்தைகளுக்கு பரிசு பொருள்கள் வழங்குவது ஆகியவற்றால் நன்மை உண்டு.
கும்பம்
காரிய வெற்றியை மனதில் வைத்து, துன்பங்களை மறந்து செயல்படும் கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் 5-ல் உள்ள சுபர்கள் மன மகிழ்ச்சியை அதிகரிப்பார்கள்.
கேட்டரிங், ஆசிரியர்கள், சிறு தொழில் முனைவோர்களுக்கும், ஆடை ஆபரண வியாபாரிகள், டிஜிட்டல் துறையினர், மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கும் லாபகரமான காலம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு தாமதமான அரசு அனுமதி கிடைக்கும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பொதுத்துறை நிறுவன, சினிமா நிறுவன பங்கு மூலம் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்விக்கான ஆலோசனைகளை பெறுவர்.
அலைச்சல், மன உளைச்சல், உடல் அசதி ஏற்படக்கூடும். மலை, சிறு குன்றில் உள்ள தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து, மலர்மாலை சமர்ப்பித்தால் நன்மை உண்டு.
மீனம்
கலை ஆர்வமும், நண்பர்களுடன் நல்ல பழக்கமும் கொண்ட மீனம் ராசியினர் இந்த வாரம் அமைதியாக இருந்து காரியம் சாதிக்க வேண்டும்.
எந்திர உற்பத்தி தொழில், பத்திரிக்கை, மருத்துவ துறையினரும், தினசரி சந்தை, மருத்துவ ஆலோசனை, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் பிரிவினரும் லாபம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமானங்களிலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் விவசாய விளைபொருள், ரசாயன, எண்ணெய் உற்பத்தி நிறுவன பங்குகளிலும் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பிரயாணங்களால் மகிழ்ச்சியாக இருப்பர்.
தலை சுற்றல், மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். குடும்ப பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவதும், பசுக்களுக்கு பூசணிக்காயை உண்பதற்கு அளிப்பது நன்மை தரும்.