வார ராசிபலன் - 20.07.2025 முதல் 26.07.2025 வரை


வார ராசிபலன் - 20.07.2025 முதல் 26.07.2025 வரை
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

இந்த வார ராசிபலன்:-

மேஷம்

சமநிலை இதயமும், நடுநிலை குணமும் கொண்ட மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் செவ்வாய் நட்பு வீட்டில் இருப்பதால், சுப காரியங்கள் நடக்கவும், வீடு மனை வாங்கவும் மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். ஓட்டல், திரவப் பொருள், கால்நடைகள் விற்பனை தொழில் துறையினர், வாகனங்கள், ஆடை ஆபரண விற்பனை வியாபாரிகளுக்கு புது பங்குதாரர்கள் சேர்வார்கள். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களிலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் எலக்ட்ரானிக் நிறுவன, மின்னுற்பத்தி நிறுவன பங்குகளிலும் முதலீடு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். தலைபாரம், நுரையீரல் அலர்ஜி ஏற்பட்டு சிகிச்சை மூலம் சரியாகும். பொது மக்களுக்கு குடி தண்ணீர் தானம் வழங்குவதும், கோவிலில் அன்னதானம் செய்வதாலும் நன்மைகள் உண்டு.

ரிஷபம்

வாழ்க்கை என்றால் என்ன என்பதை நடைமுறையில் உணர்ந்த அனுபவசாலிகளான ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் ராசியில் உள்ள ராசி அதிபதி மனதில் புதிய மாற்றங்களை உருவாக்கி உற்சாகமாக செயல்படச் செய்வார். விவசாய விளைபொருள், பால், பழ வகை உற்பத்தி தொழில் துறையினர், காய்கறி, மளிகை விற்பனையாளர்கள் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்றுவர். தனியார் துறை ஊழியர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் பழைய கடன்களை அடைப்பார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஏற்றுமதி-இறக்குமதி, எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிற்கல்வியில் பயிற்சி பெறுவர். காதில் கோளாறு, தலை சுற்றல் ஏற்பட்டு மருத்துவ சிசிச்சையால் குணமடையும். அருகில் உள்ள கோவிலுக்கு மல்லிகை மாலை, வாசனை திரவியங்கள் வாங்கி கொடுப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்

தனக்கென வரையறை உருவாக்கி அதற்குள் செயல்படும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் நிதானமாக பேசி நடந்து கொள்வதன் மூலம் கடந்த கால சிக்கல்கள் விலகும். புத்தகம் விற்பனை, ஆடம்பரப் பொருள் தயாரிப்பு தொழிலில் உள்ளவர்கள், இசை, சமையல் கலைஞர் ஆகியோர் புதிய வாய்ப்புகளை பெறுவர். தனியார், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினர் வெளிநாட்டு தொடர்புகளை பெறுவதுடன், ஷேர் மார்க்கெட் பிரிவினர் கட்டுமானம், தகவல் தொடர்பு நிறுவன பங்குகளில் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு உயர் படிப்பு குறித்து ஆர்வமாக விசாரித்து அறிந்து கொள்வர். சிறுநீர் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு சிகிச்சை மூலம் குணமடையும். அவ்வப்போது உண்ணாநோன்பு இருப்பதும், மற்றவர்களிடம் அதிகம் பேச்சுக் கொடுக்காமல் இருப்பதும் சிக்கல்களை தவிர்க்கும்.

கடகம்

பலன் கிடைக்காவிட்டாலும் உழைப்பையும், முயற்சியையும் கைவிடாத கடகம் ராசியினருக்கு இந்த வாரம் லாபஸ்தான சுக்கிரனால் பல நன்மைகள் வந்து சேரும். இரும்பு பொருள் தயாரிப்பு, கட்டிடப் பொருள் உற்பத்தி தொழில்துறையினர், கட்டுமான பொருள், இரும்பு உதிரிபாக விற்பனை செய்பவர்களுக்கு லாபம் உண்டு. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும்.

ரியல் எஸ்டேட் துறையினர் பழைய கட்டுமான பணிகளில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மசாலா தயாரிப்பு நிறுவன, வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சளி, தலைவலி, தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவத்தால் அகலும். கோவில் குளக்கரையில் உள்ள யாசகர்களுக்கு அன்னதானம், தண்ணீர் தானம் செய்வதால் நன்மைகள் உண்டு.

சிம்மம்

இன்ப, துன்ப அனுபவங்களை மறக்காமல் மனதில் வைத்திருக்கும் குணம் கொண்ட சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் 12-ல் உள்ள ராசி அதிபதியால் திடீர் பயணங்களும், சுப செலவுகளும் ஏற்படும். பால் உற்பத்தி, மளிகை கடை தொழில் துறையினர், பர்னிச்சர்கள், காய்கறி விற்பனையாளர்கள் கடன் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், நகை நிறுவன பங்கு மூலம் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களை ஆர்வத்தோடு கற்று கொள்வார்கள். தோல் பாதிப்பு, தலை சுற்றல் ஆகிய கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். உறவினர்களுக்கும், உடன் பிறந்தோர் மற்றும் நண்பர்களுக்கு பணம், பொருளுதவி செய்தால் நன்மை உண்டு.

கன்னி

தனது மன எண்ணப்படியே எப்போதும் செயல்படும் கன்னி ராசியினர் இந்த வாரம் 11-ல் உள்ள வக்ர ராசியதிபதி செலவை ஏற்படுத்தினாலும் அதற்கேற்ற தன வரவையும் தருவார். சீட்டு நிறுவனம், அழகு சாதன பொருள் தயாரிப்பு தொழில்துறையினர், மளிகை, உணவு, இனிப்பு பொருள் விற்பனை செய்வோர் ஆதாயம் அடைவர். தனியார் ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயமும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் பால் பொருள், எண்ணெய் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலமும் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியூர் பயணம் உண்டு. பல்வலி, தலைவலி, கை-கால் வலி ஏற்பட்டு சிகிச்சையால் நீங்கும். முதியோர், ஆதரவற்றோர் இல்லத்துக்கு காய்கறி, பால் தானம் செய்தால் நன்மை உண்டு.

துலாம்

தான் உண்டு தன் வேலை உண்டு என்ற மன இயல்புகொண்ட துலாம் ராசியினருக்கு அஷ்டம ஸ்தான ராசியதிபதி எதிர்பார்த்த பல விஷயங்களை நடத்தி வைப்பார். எந்திர தயாரிப்பு, ஓட்டல், ஏற்றுமதி-இறக்குமதி தொழில் துறையினர், மளிகை, விவசாய விளைபொருள் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய வாடிக்கையாளர் மூலமும், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு மின்சாரம், நிலக்கரி நிறுவன பங்கு மூலமும் ஆதாயம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வர். அஜீரணம், வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவம் மூலம் சீரடையும். வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம், ஆடை தானம் செய்தால் நன்மைகள் உண்டு.

விருச்சிகம்

ஆயிரம் கவலைகள் தனக்கு இருந்தாலும், மற்றவர் சிரமம் குறித்து விசாரிக்கும் விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 10-ம் இடத்தில் உள்ள ராசி அதிபதி காரிய வெற்றியை வாரி வழங்குவார். எண்ணெய் வித்து, ஆடை ஆபரண தொழில் செய்வோர், தண்ணீர் கேன் போடுபவர், கேட்டரிங், மருந்துக்கடை வியாபாரிகள் புதிய முதலீடுகளை கவனமாக இருக்க வேண்டும். வங்கி, அரசுத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினர் சலுகை தருவதாலும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசுத்துறை, மின் நிறுவன பங்கு மூலமும் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி தொழில்நுட்ப படிப்பில் இணைவர். மனக்குழப்பம், தோலில் அலர்ஜி, கொப்புளம் ஏற்பட்டு மருத்துவத்தால் அகலும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இயன்றவரை பொருள் உதவி செய்வது நன்மை தரும்.

தனுசு

மற்றவர் சிரமத்தை அவர் இடத்திலிருந்து பார்க்கும் மனநிலை கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 7-ம் இடத்தில் உள்ள ராசியதிபதி நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் ஆதாயம் தருவார். ஏற்றுமதி-இறக்குமதி தொழில், கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்பவர்கள், பெட்டிக்கடை, வட்டி தொழில், கமிஷன் ஏஜென்சி நடத்துபவர்கள் லாபம் அடைவர். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்பும், பணியிட மாற்றமும் உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினர் பெரிய வர்த்தகம் வழியாகவும், ஷேர் மார்க்கெட் துறையினர் தனியார் நிறுவன, பெட்ரோலிய நிறுவன பங்குகளாலும் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் திறமை காட்டுவர். தலைசுற்றல், சளி, காய்ச்சல் வந்து சிகிச்சையால் நீங்கும். நண்பர்கள் மனம் மகிழும் வகையில் பரிசளித்து, நலம் விசாரிப்பதால் சிக்கல்கள் விலகும்.

மகரம்

உறவினர்களால் ஏமாற்றம் அடைந்தாலும் அவர்கள் மீது கோபம் கொள்ளாத மகரம் ராசியினருக்கு 3-ல் உள்ள வக்ர ராசியதிபதி நிதானமாக செயல்பட வேண்டுமென சொல்லித் தருவார். லேத், விவசாயம், இரும்பு பொருள் உற்பத்தி தொழில் செய்வோர், கட்டுமான பொருள் விற்பனை, மளிகை கடை வியாபாரிகள் வளர்ச்சி பெறுவர். தனியார், அரசு துறை பணியாளர்கள் உயரதிகாரி ஆதரவால் ஆதாயம் அடைவர்.

ரியல் எஸ்டேட் துறையினருக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த நன்மையும், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு வேளாண் பொருள் ஏற்றுமதி நிறுவனம், ரசாயன நிறுவன பங்குகள் மூலம் ஆதாயமும் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்முறை சர்டிபிகேட் படிப்பை மேற்கொள்வர். நாக்கில் புண், காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். கோவிலுக்கு வரும் கன்னிப் பெண்களுக்கு இனிப்பு பிரசாதம், வயதான சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுப்பதால் நன்மை உண்டு.

கும்பம்

கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கு உதாரணமாக உள்ள கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் 5-ல் உள்ள குரு ராசியை பார்ப்பதாலும் எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். திரவப் பொருள் விற்பனை, நிதி நிறுவன தொழிலில் உள்ளவர்கள், ஆடை-ஆபரண பொருள், வேளாண் பொருள் வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் ஊழியர்கள் பணியில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஓட்டல் நிறுவன, அரசுத்துறை பங்கு மூலம் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறியியல், மருத்துவ உயர் கல்வி பற்றிய வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவர். நாக்கு வறட்சி, தோல் பாதிப்பு, மனக்குழப்பம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். சிவன் கோவில் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதம் வழங்குவதும், தந்தை, தந்தை வழி உறவினர்களுக்கு பரிசளித்து ஆசி பெறுவதும் நன்மை தரும்.

மீனம்

தன்னைச் சுற்றி என்ன விஷயங்கள் நடக்கின்றன என தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் மீனம் ராசியினருக்கு இந்த வாரம் 6-ல் உள்ள செவ்வாய் வீடுகளில் மராமத்து பணிகளை செய்ய வைப்பார். உற்பத்தி துறை தொழிலில் இருப்பவர்களுக்கும், கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபம் ஏற்படும். தனியார் துறை ஊழியர்களுக்கு உயர் அதிகாரி ஆதரவு கிடைக்கும்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டம் மூலமும், ஷேர் மார்க்கெட் பிரிவினர் வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பங்கு மூலமும் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று மனம் மகிழ்வர். பல், ஈறு பாதிப்பு, சளித்தொல்லை ஏற்பட்டு சிகிச்சை மூலம் நீங்கும். துறவிகளுக்கு பழங்கள் சமர்ப்பணம் செய்து வணங்குவதும், குடும்ப மூத்தவர்களிடம் ஆசி பெறுவதும் நன்மை தரும்.

1 More update

Next Story