வார ராசிபலன் - 17.08.2025 முதல் 23.08.2025 வரை

கன்னி ராசியினருக்கு ராஜ்ய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவை பலம் பெறுவதால் காரிய வெற்றி ஏற்படும்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் அமைதியாக செயல்படும் பக்குவம் பெற்ற மேஷம் ராசியினருக்கு 3-ம் இடத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.
ரசாயனம், தகவல் தொடர்பு தொழில் துறையினரும், மின்சாரம் பொருள், கட்டுமான பொருள் வியாபாரிகளும் கூடுதலான உழைப்பை தரவேண்டிய காலகட்டம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் துறையில் புதிய கட்டுமான திட்டங்கள் தொடங்குவது, ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடுகள் செய்வது ஆகிய விஷயங்களில் கவனம் தேவை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவர்.
மன உளைச்சல், வயிற்று வலி, தலைவலி ஆகியவை ஏற்பட்டு விலகும். பொருளாதார ரீதியாக சிக்கலில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு இயன்றவரை பொருள் உதவி செய்வதால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்
பொறுத்தவர் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு இலக்கணமாக உள்ள ரிஷபம் ராசியினருக்கு 2-ல் சுபர்கள், 11-ல் சனி ஆகிய கிரகங்கள் முயற்சிகளில் வெற்றி தருவார்கள்.
இரும்பு, அழகு சாதனம், கட்டுமானத் தொழில், எலெக்ட்ரானிக், மருந்து பொருள் வியாபாரம் ஆகியவற்ரில் எதிர்பார்த்த லாபம் உண்டு. தனியார், அரசு உத்யோகஸ்தர்களுக்கு பணியிட சிக்கல்கள் அகலும்.
ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகள் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் புதிய நிறுவன பங்குகள் மூலமும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக படிப்பில் ஈடுபடுவர்.
மின்சாரம், நெருப்பு, எந்திரம் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்த, ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளுக்கு பரிசளித்து மனம் மகிழச் செய்தால் நன்மை உண்டு.
மிதுனம்
பெற்ற அனுபவங்களால் காரிய வெற்றி அடையும் சூட்சுமத்தை அறிந்த மிதுனம் ராசியினருக்கு 1, 2-ம் இடங்களில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும்.
தகவல் தொடர்பு, மின்சாரம், பத்திரப்பதிவு துறையினருக்கும், ஏற்றுமதி இறக்குமதி, விவசாய விளைபொருள் வியாபாரிகளுக்கும் லாபகரமான காலகட்டம். அரசு உத்தியோகஸ்தர்கள் உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகள் செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் சற்று நிதானமாக செயல்படுவதாலும் ஆதாயம் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
கை கால் அசதி, உடல் வலி, பிரஷர் ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். கோவில் அன்னதானங்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் பொருளுதவி செய்தால் நன்மை ஏற்படும்.
கடகம்
பயணம் செய்வதில் ஆர்வமாக உள்ள கடகம் ராசியினருக்கு ராசியில் சஞ்சரிக்கும் ராசியதிபதி, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன ஸ்தான அதிபதி ஆகியோரால் செல்வாக்கு உயரும்.
இரும்பு, லேத் பட்டறை, ரசாயனம், மருந்து தொழில் துறையினரும், கட்டிட பொருள், எண்ணெய், ரியல் எஸ்டேட் வியாபாரிகளும் ஆதாயம் பெறுவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமான திட்டங்களை கவனமாக செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் அரசுத் துறை பங்குகளை வாங்குவதாலும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான காலகட்டம்.
வெளியிடங்களில் உண்பது, காலம் தவறி உண்பது ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடையும். ஆதரவற்ற அனாதைகளுக்கும், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கும் பரிசு, பொருளுதவி செய்தால் நன்மை உண்டு.
சிம்மம்
புதிய நம்பிக்கைகளோடு எதிர்காலத்தை வரவேற்கும் வெள்ளை மனம் கொண்ட சிம்மம் ராசியினருக்கு கேதுவுடன் இணைந்து ஆட்சி பெற்ற ராசியதிபதி மனதில் ஆன்மிக எண்ணங்களை உருவாக்குவார்.
ரசாயனம், மருந்து, மின்சார தொழில் துறையினருக்கும், ரியல் எஸ்டேட், எலெக்ட்ரானிக்ஸ், வண்டி வாகன வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ப மதிப்பும் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட்டில் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் அரசு துறை முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பர்.
எதிர்பாரா காரிய தடையால் மன உளைச்சல், நீண்டகால நோய்களால் உடல் பாதிப்பு ஆகியவை ஏற்படும். அருகில் உள்ள கோவில்களுக்கு தினமும் சென்று வருவதாலும், தினமும் ஓரிருவருக்கு அன்னதானம் செய்வதாலும் நன்மைகள் ஏற்படும்.
கன்னி
மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை கொண்ட கன்னி ராசியினருக்கு ராஜ்ய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவை பலம் பெறுவதால் காரிய வெற்றி ஏற்படும்.
கம்ப்யூட்டர், போக்குவரத்து, எந்திரம் ஆகிய தொழிலிலும், நுகர்பொருள், விளையாட்டு சாமான், காகிதம் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சொந்த வீடு அமையும்.
ரியல் எஸ்டேட் துறையில் விளம்பரங்கள் செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் ஆடை ஆபரண தயாரிப்பு, பெட்ரோலியம், மருந்து ஆகிய நிறுவன பங்குகள் மூலமும் ஆதாயம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய நண்பர்களை நம்பி எதையும் செய்து விடக்கூடாது.
உடல் உஷ்ணம், காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவத்தால் விலகும். அறக்கட்டளை, தர்ம ஸ்தாபனம், அன்னதானம் ஆகியவற்றுக்கு உதவிகள் செய்வதால் நன்மைகள் உண்டு.
துலாம்
நல்ல எண்ணங்களையே எப்பொழுதும் மனதில் நினைக்க வேண்டும் என்ற நேர்மறை சிந்தனை கொண்ட துலாம் ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுபர்கள் சேர்க்கை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
வண்டி வாகனம், லாட்ஜ், கமிஷன் தொழில் துறையினரும், ஜவுளி வியாபாரம், உதிரி பாகம், சமையல் உபகரண வியாபாரிகளும் தொழில் விரிவாக்கம் செய்யலாம். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் வங்கி, தகவல்தொடர்பு, எரிவாயு நிறுவன பங்குகளை வாங்குவதாலும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடும்ப சுப காரியங்களில் முன்நின்று பங்கேற்று மகிழ்வர்.
அலைச்சல், மன உளைச்சல், வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு விலகும். கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பு பிரசாதம், பெண்களுக்கு குங்குமம் வழங்குவதும், வாழ்க்கை துணையின் உறவினர்களுக்கு உதவி செய்வதும் நன்மை தரும்.
விருச்சிகம்
காரிய வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு செயல்படும் விருச்சிகம் ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் ராசி அதிபதியும், ராஜ்ய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் அரசாங்க விஷயங்களில் லாபம் உண்டு.
ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல், மருத்துவம் ஆகிய தொழிலிலும், கெமிக்கல், மின்சார பொருள், கம்ப்யூட்டர் உதிரிபாக வியாபாரிகளும் எதிர்பார்த்த லாபம் பெறுவர். அரசு உத்யோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றம், கூடுதல் பொறுப்பு ஏற்படும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் அரசுத் துறை, அறக்கட்டளை, பள்ளி கல்லூரி பங்குகள் மூலமும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தடைகளை கடந்து தேர்வு, விளையாட்டில் வெற்றி பெறுவர்.
சுவாசக் கோளாறு, தொண்டை பாதிப்பு, வாத நோய் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டு விலகும். அன்னை, அன்னை வழி உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசி பெறுவதும், அனாதை இல்லங்களுக்கு தண்ணீர் கேன் தானம் செய்வதும் நன்மை தரும்.
தனுசு
மனதில் உறுதியுடன் பல்வேறு விஷயங்களை செய்து முடிக்கும் மதிநுட்பம் கொண்ட தனுசு ராசியினருக்கு 7, 8-ம் இடங்களில் சுபர் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் நடந்தேறும்.
பணம் கொடுக்கல் வாங்கல், கட்டுமானத் துறை, பெருநிறுவன தொழில்களிலும், ஏஜன்சி, நுகர்பொருள், ஏற்றுமதி வியாபாரத்திலும் வருமானம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு கூடும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய ஒப்பந்தங்கள் செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் தங்க நகை, கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன பங்குகள் மூலமும் லாபம் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் ப்ராஜெக்ட் விஷயங்களில் சிறப்பாக செயல்படுவர்.
சளித்தொல்லை, ஜீரண கோளாறு ஆகியவை ஏற்பட்டு விலகும். சிவனுக்கு மாலை நேரங்களில் அபிஷேகம் செய்வதாலும், பெற்ற தாய் தந்தையரின் ஆசிகளை தினமும் பெறுவதாலும் நன்மை ஏற்படும்.
மகரம்
மனதில் நினைத்த விஷயத்தை நிறைவேற்றும்வரை தொடர்ந்து உழைக்கும் குணம் கொண்ட மகரம் ராசியினருக்கு 8-ம் இடத்திலுள்ள ஆட்சி பெற்ற சூரியன் உடல் நலனில் முன்னேற்றத்தை தருவார்.
ஜவுளி, கட்டுமானம், ஹோட்டல், லேத் தொழில் துறையினரும், ஏஜன்சி, பைனான்ஸ், சிமென்ட், இரும்பு வியாபாரிகளும் அளவாக முதலீடு செய்து லாபம் அடையலாம். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணிகளுக்கு மாறும் காலகட்டம் இது.
ரியல் எஸ்டேட்டில் புதிய திட்டங்களை கவனமாக அறிமுகம் செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் அரசு துறை, எரிவாயு, கெமிக்கல் நிறுவன பங்குகளில் கவனமாக செயல்படுவதன் மூலமும் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்ப சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.
திடீர் பிரயாணங்கள், மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்பட்டு மெதுவாக விலகும். மாலை நேரங்களில் பசு மாடுகளுக்கு வெண்பூசணி உண்பதற்கு தருவதும், சிவன்கோவில் உளுந்து வடை தானம் தருவது நன்மைகளை ஏற்படுத்தும்.
கும்பம்
எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு, அதற்கு ஏற்ற நபர்களை வைத்து செய்து முடிக்கும் திறமை பெற்ற கும்பம் ராசியினருக்கு 7-ல் அமர்ந்த ஆட்சி பெற்ற சூரியன் அரசு தரப்பு நன்மைகளை தருவார்.
விவசாயம், எந்திரம், தகவல் தொழில்நுட்ப தொழிலிலும், மளிகை, சிறுவணிகம், உதிரிபாக வியாபாரிகளும் தடைகளை சந்தித்தாலும் லாபம் குறையாது. அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் எதுவும் பேசாமல் பணிகளை கவனிப்பதே நல்லது.
ரியல் எஸ்டேட் துறையில் பழைய கட்டுமான திட்டங்களை கவனமாக பார்வையிடுவதும், ஷேர் மார்க்கெட்டில் அரசு துறை, கெமிக்கல், ஹோட்டல் ஆகிய பங்குகளை கவனமாக வாங்குவதாலும் விரயங்கள் தவிர்க்கப்படும். பள்ளி கல்லூரி மாணவர்கள் புதிய நண்பர்களை நம்பி எந்த ஒரு காரியத்திலும் இறங்கி விடக்கூடாது.
மனக் குழப்பம், பிறரை நம்பி ஏதேனும் செய்து மன உளைச்சல் அடைவது, தலைவலி ஆகியவை ஏற்பட்டு விலகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுதுபொருள் வழங்குவதாலும், கோவில்களில் இனிப்பு பிரசாதம் தருவதாலும் நன்மை ஏற்படும்.
மீனம்
எந்த தடை வந்தாலும் சுய முயற்சியால் அதை கடக்க வேண்டும் என்ற மீனம் ராசியினருக்கு 5-ம் இடத்திலுள்ள புதன் சந்தர்ப்பத்திற்கேற்ப செயல்படும் திறனை கொடுத்து காரிய வெற்றி தருவார்.
விவசாயம், பாத்திரங்கள் தயாரிப்பு, மின்னணு உதிரி பாக தயாரிப்பு ஆகிய தொழில்களிலும், சிறுவணிகம், பூஜை பொருள், எண்ணெய் வித்து வியாபாரிகளும் அளவாக முதலீடு செய்து லாபம் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
ரியல் எஸ்டேட்டில் திட்டமிட்டு முதலீடு செய்வதாலும், ஷேர் மார்க்கெட்டில் திரவப் பொருள், விவசாய விளைபொருள் நிறுவன பங்குகள் மூலமும் அதான்யம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.
வெளியிடங்களில் நேரம் கடந்து சாப்பிடுவதாலும், சாப்பிடாமல் இருப்பதாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீரடையும். உடன் பிறந்த, ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளுக்கு பொருள் உதவி செய்வதும், கோவிலுக்கு வரும் கன்னிப்பெண்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதும் நன்மை தரும்.