வார ராசிபலன் - 15.06.2025 முதல் 21.06.2025 வரை


வார ராசிபலன் - 15.06.2025 முதல் 21.06.2025 வரை
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

இந்தவார ராசிபலன்:-

மேஷம்

நண்பர்களுக்கு வரும் துன்பத்தால் மனத்துயர் அடையும் மேஷம் ராசியினர் இந்த வாரம் எதிர்கால நன்மைக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர். ராசியில் உள்ள சுக்கிரன் ஏழாம் இடத்தை பார்ப்பதால் புதிய தொடர்புகளால் நன்மை ஏற்படும்.

ஓட்டல் தொழில்துறையினர் மற்றும் ஜவுளி வியாபாரிகள் தைரியமாக செயல்பட்டு சிக்கல்களை தீர்ப்பார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து, பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள்.

மன உளைச்சல், தலைவலி ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். கோவிலில் கன்றுடன் உள்ள பசு மாட்டுக்கு அருகம்புல் மற்றும் வாழைப்பழம் தருவதன் மூலம் சிரமங்கள் விலகும்.

ரிஷபம்

மற்றவர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்ற கருத்தைக் கொண்ட ரிஷபம் ராசியினர் இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். பத்தாம் இடத்தில் உள்ள ராகு, சந்திரனை குரு பார்ப்பதால் இந்த வாரம் காரிய வெற்றிகள் உண்டு.

ஆடை உற்பத்தி, ஆபரண தயாரிப்பு, வாகன ஏஜென்சி தொழில், வேளாண் விளைபொருள் வியாபாரிகள் சிறப்பான வளர்ச்சியும், சமூக மதிப்பையும் பெறுவார்கள். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினர் புதிய முதலீடுகளை செய்வதற்கான காலகட்டம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது.

வயதானவர்கள், நாள்பட்ட சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெற்ற அன்னை மற்றும் அன்னை வழி உறவினர்களுக்கு பரிசு பொருட்களை அளித்து ஆசிகளை பெறுவதால் நன்மைகள் உண்டு.

மிதுனம்

எந்த ஒரு விஷயத்திலும் காத்திருந்து காரிய வெற்றி பெறும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குதூகலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். ராசியில் சூரியன் சஞ்சரிப்பது மனதில் தைரியத்தை ஏற்படுத்தும்.

ஆசிரியர்கள், அச்சக தொழில்துறையினர், ஹார்டுவேர் வியாபாரிகள் புதிய ஊர்களில் கிளை தொடங்குவார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இரும்பு, நிலக்கரி, பெட்ரோலிய நிறுவன பங்குகளில் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவர்.

கை-கால், முதுகு வலி, உடல் அசதி ஏற்பட்டு சரியாகும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு முடிந்தவரை நிதி உதவி செய்வதும், கோவில் நித்திய பூஜைக்கு முடிந்தவரை பொருள் உதவி செய்வதும் நன்மைகளை தரும்.

கடகம்

பல தடைகளைக் கடந்து மனதில் நினைத்த விஷயத்தை செய்து முடிக்கும் பக்குவம் பெற்ற கடகம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய செய்திகள் வந்து சேரும். பத்தாம் இடத்தில் உள்ள சுக்கிரன் சமூக மதிப்பை உயர்த்துவார்.

வாகன ஏஜென்சி, இரும்பு தொழில்துறையினர், எண்ணெய், திரவ வியாபாரிகள் பல நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பர். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு புதிய தொடர்பால் நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள்.

மன உளைச்சல், அலைச்சல் உழைப்பு காரணமாக அசதி ஏற்படும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு அன்னதானம், ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் செய்வதால் நன்மைகள் உண்டு.

சிம்மம்

எதுவும் சில காலம் என்ற உண்மையை உணர்ந்த சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் தன வரவு ஏற்படும். பதினொன்றாம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு.

சாலையோர வியாபாரிகள், மளிகை தொழில், பர்னிச்சர், நகை வியாபாரிகள் கொள்முதலில் வழக்கத்தை விட குறைவாக செய்வது நல்லது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எதிர்பார்த்த லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டு விலகும். வாழ்க்கைத் துணையின் உடன் பிறந்தோர், உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றால் நன்மைகள் உண்டு.

கன்னி

ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்து வெற்றி பெறும் கன்னி ராசியினர் இந்த வாரம் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். ஆறாம் இடத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் நோய்கள் விலகும்.

பைனான்ஸ், ஆடிட்டிங், நவநாகரிக ஆடை தயாரிப்பு தொழில்துறையினர், பெண்கள் உடை வியாபாரிகளுக்கு கடந்த கால தொழில் பிரச்சினைகள் விலகி லாபம் அடைவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு பிரகாசமான காலகட்டம் இது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

வெயிலில் அலைவதால் உடலில் அசதி ஏற்பட்டு விலகும். இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் விரதம் இருந்து அந்த நாளில் முதியோர்களுக்கு அன்னதானம் செய்வதால் சிரமங்கள் விலகும்.

துலாம்

சொன்னதை சொன்னபடி செய்து முடிக்கும் மன உறுதி பெற்ற துலாம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். ஒன்பதாம் இடத்தில் உள்ள குரு காரிய வெற்றிகளை தருவார்.

நெசவு, ஜவுளி உற்பத்தி, ஓட்டல் தொழில்துறையினர், விவசாய விளைபொருள் வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்ய வசதி வாய்ப்புகளை பெறுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் செலவுகள் உண்டு.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்பு குறித்த எண்ணங்கள் உருவாகும்.

ஜலதோஷம், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். கோவில் காரியங்கள், பொதுக் காரியங்கள் ஆகியவற்றில் உங்களால் இயன்ற உழைப்பையோ, உதவியோ செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

உணர்ச்சிவசப்பட்டாலும் நிதானமாக செயல்படும் தன்மை கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட பொருளாதாரம் வந்து சேரும். ராசிக்கு ஆறாம் இடம், எட்டாம் இடம் ஆகியவற்றின் சுப கிரகங்கள் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு.

மருந்து, ரசாயனம், எண்ணெய் வித்து தொழில்துறையினர், ஆடை, ஆபரண வியாபாரிகள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வை பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் தொழில் விருத்தி அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் இனிப்பு தயாரிப்பு, ஓட்டல் துறை நிறுவன பங்குகளால் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர்.

அடிவயிற்று பகுதியில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். இந்த வாரம் முடிந்த வரை மௌன விரதம் அனுசரிப்பதாலும், ஓரிரு நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதாலும் நன்மைகள் உண்டு.

தனுசு

மற்றவர்களுக்கு நன்மை செய்யும் மனம் கொண்ட தனுசு ராசியினர், இந்த வாரம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை நல்லவிதமாக செய்து முடிப்பார்கள். ராசி அதிபதி ராசியை பார்க்கும் இந்த காலத்தில் மனதில் நினைத்தவை நிறைவேறும்.

ஏஜென்சி, காண்ட்ராக்ட், எக்ஸ்போர்ட் தொழில்துறையினர், மளிகை வியாபாரிகளுக்கு இது நல்ல லாபகரமான காலகட்டம். தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது.

ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர்.

காய்ச்சல், தலை, கை-கால் வலி ஏற்பட்டு சிகிச்சை மூலம் குணமடையும். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கு அன்னதானம் அல்லது மருந்துகள் தானம் செய்வது நல்லது.

மகரம்

எடுத்த காரியத்தை கடைசி வரை இருந்து செய்து முடிக்கும் திறன் படைத்த மகரம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். தைரிய ஸ்தானத்தில் உள்ள சனி காரிய வெற்றியை தருவார்.

தங்க நகை உற்பத்தி, விற்பனை, லேத், இரும்பு சம்பந்தமான தொழில் துறையினர் மற்றும் மருந்து, கெமிக்கல் வியாபாரிகள் முதலீடுகள் செய்து வளர்ச்சி பெறுவர். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து அவரது ஆதரவை பெற வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் வேறு ஊர்களில் புதிய கட்டுமானத் திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வெளிநாட்டு பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடிவயிற்று, முதுகில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். ஆதரவற்ற முதியோர்களுக்கு காலணிகள், பரிசுப் பொருள்கள் வழங்கினால் நன்மைகள் உண்டு.

கும்பம்

நேர் வழியிலேயே எதையும் செய்ய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கும்பம் ராசியினர், இந்த வாரம் உடன் பிறந்தவர்களால் லாபம் அடைவர். ஐந்தாம் இடத்தில் உள்ள குருவும், புதனும் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றுவார்கள்.

காவல் துறை, ரசாயனம், மருத்துவம், ஆபரண, பாத்திர தொழில் துறையினர், திரவம், கால்நடை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றங்கள், லாபங்கள் வந்து சேரும். தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்து வர வேண்டும்.

ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஹோட்டல் தொழில், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம். அடைவர். ரியல் எஸ்டேட் பிரிவினருக்கு காலம் கனிந்து விட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.

வெளியிடங்களில் சுகாதாரமற்ற நிலையில் பானங்களை பருக வேண்டாம். வாழ்க்கைத் துணையின் வயதான உறவினர்களுக்கு பொருள் உதவி மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை பெற்றால் நன்மைகள் உண்டு.

மீனம்

மற்றவர் எண்ணங்களை சுலபமாக உணர்ந்து கொள்ளும் திறன் பெற்ற மீனம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் பல சிக்கல்கள் அகலும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் தன வரவை தருவார்.

ஓட்டல், சுற்றுலா, லாட்ஜ், கணினி மென்பொருள் உற்பத்தி தொழில் துறையினர், எந்திர பொருள் வியாபாரிகள் தங்கள் அனுபவங்கள் மூலம் தொழில் வெற்றி பெறுவர். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் நன்மை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு நிறுவன பங்குகளில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும்.

வெயிலில் அலைவது காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டு விலகும். தந்தையின் உடன்பிறந்தவர்கள் அல்லது தந்தை வழி உறவினர்களின் ஆசைகளை பெறுவதால் நன்மைகள் உண்டு.

1 More update

Next Story