வார ராசிபலன் - 13.07.2025 முதல் 19.07.2025 வரை


weekly horoscope - 13.07.2025 to 19.07.2025
x

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

இந்த வார ராசிபலன்:-

மேஷம்

திட்டமிடுவது ஒன்று செயல்படுத்துவது இன்னொன்று என்றாலும் வெற்றிக் கனியை பறிக்கும் திறன் பெற்ற மேஷம் ராசியினருக்கு இவ்வாரம் 2-ல் சுக்கிரன் அமர்ந்து தனவரவை மேம்படுத்துகிறார்.

தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய மாற்றங்களை நோக்கி தங்களுடைய முயற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மறைமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு இது லாபகரமான வாரம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும்.

பற்களில் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் அல்லது பொருள் தானம் செய்தால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்

மற்றவர் ரகசியங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் ரிஷபம் ராசியினருக்கு ராசியில் உள்ள சுக்கிரனால் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.

தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வாய்ப்புகளை பெற்று தொழில் விருத்தி செய்வர். தனியார்துறை உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றம் பெறுவர்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு இது மகிழ்ச்சிகரமான காலகட்டம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதாந்திர தேர்வைக்கூட கவனமாக எழுத வேண்டும்.

அடிவயிற்று பகுதிகளில் வலி ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். திருக்கோவில் அன்னதானத்திற்கு வேண்டிய பொருட்களை தானம் செய்தால் நன்மைகள் தேடி வரும்.

மிதுனம்

பேசும்போதும், காரியத்திலும் மிக சாதுர்யமாக செயல்படும் மிதுனம் ராசியினருக்கு தன ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதியால் இந்த வாரம் மகிழ்ச்சி நிலவும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய முதலீடு செய்து லாபம் பெறலாம். தனியார்துறை உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவர்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு இது சாதகமான காலகட்டமே. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடந்த கால நல்ல விஷயங்களின் பலனை பெறுவார்கள்.

காய்ச்சல், வயிற்றுக்கோளாறு ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் குணமடையும். ஆதரவற்ற முதியோர்களுக்கு வஸ்திரதானம், காலணி தானம் செய்தால் நன்மைகள் நாடி வரும்.

கடகம்

பிறர் செய்த உதவியை என்றும் மறக்காமல், அவருக்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ள கடகம் ராசியினருக்கு இந்த வாரம் லாப ஸ்தான சுக்கிரன் பல மகிழ்ச்சியான விஷயங்களை நடத்தி வைப்பார்.

தொழில் துறையினர், வியாபாரிகள் சற்று சிரமப்பட்டால் தங்களுக்கான புதிய பாதையை உருவாக்க முடியும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மனதில் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் விரைவில் கைவந்து சேரும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு காலதாமதம் ஆனாலும் திட்டமிட்ட ஆதாயம் வந்து சேரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்பொழுதே திட்டமிட்டு படித்தால் இறுதி தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெறலாம்.

மன உளைச்சல் காரணமாக தலைவலி, ரத்த அழுத்தம் ஏற்பட்டு வைத்தியத்தால் விலகும். ஆதரவற்றோர் இல்லத்துக்கு இயன்றவரை ஏதேனும் உதவிகள் செய்தால் நன்மைகள் நாடி வரும்.

சிம்மம்

துன்பங்கள் மனதை வருத்தினாலும், முகத்தில் புன்னகையோடு இயல்பாக செயல்படும் சிம்மம் ராசியினர் இந்த வாரம் லாப ஸ்தான குரு-சூரியன் காரணமாக புதிய நற்செய்திகளை பெறுவர்.

தொழில்துறையினர், வியாபாரிகள் வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபட்டு வரவேண்டும். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு வேலை மாற முயற்சி செய்யும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு போட்டிகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களை கற்று அதன் மூலம் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவர்.

வயிற்று வலி, தலைவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு பொருள் உதவி செய்தால் நன்மைகள் நாடி வரும்.

கன்னி

துன்பங்களை அனுபவித்தாலும் மனதில் உள்ள நம்பிக்கையை கைவிடாத கன்னி ராசியினருக்கு இந்த வாரம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சுக்கிரனால் புதிய உற்சாகம் ஏற்படும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு முன்னேற்றம் அடையலாம். தனியார், அரசு உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் ஆதரவை பெற்று மகிழ்ச்சி அடைவர்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு மகிழ்ச்சிகரமான காலம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவர்.

மனக்குழப்பம் காரணமாக தலைவலி, உடல் நடுக்கம் ஏற்பட்டு வைத்தியத்தால் குணமடையும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைதானம், பொருள் உதவி செய்தால் நன்மைகள் தேடி வரும்.

துலாம்

எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் துலாம் ராசியினர் இந்த வாரம் குரு, செவ்வாய் ஆகியவற்றின் பலம் காரணமாக திட்டமிட்ட வெற்றியை பெறுவர்.

தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து வெற்றிகரமாக சமாளிப்பார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட இறுக்கம் அகன்று, சுமுக போக்கு நிலவும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலமிது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வியிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி உண்டு.

மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மருந்துகளை வேளாவேளைக்கு கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப பெரியவர்கள், குருமார்களிடம் ஆசீர்வாதம் பெற்றால் நன்மைகள் பல நாடி வரும்.

விருச்சிகம்

பெற்ற அனுபவங்களை மனதிற்குள் புதைத்து வைத்து அதை வெற்றி பெற உத்வேகமாக பயன்படுத்தும் விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் 7-ல் உள்ள சுக்கிரனால் எதிர்பாரா நன்மைகள் உண்டு.

தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும், லாபம் குறையாது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெற்று மகிழ்வர்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு இது திட்டமிட்ட வெற்றிகளை அளிக்கும் காலம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியிலும், இதர எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளிலும் திறமையாக செயல்படுவர்.

அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, சளித்தொல்லை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு இயன்ற அளவு அன்னதானம், பொருள் தர்மம் செய்தால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

நடை, உடை, பாவனைகளில் மிக நேர்த்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த வாரம் 3-மிட ராகு, 7-மிட குரு ஆகியோரால் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு.

தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணவரவு தடை தாமதங்களுக்கு பிறகு வந்து சேரும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு புதிய நபர்களால் ஆதாயம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வித் தடைகளை சந்தித்தாலும், இதர திறன்களை சிறப்பாக வெளிப்படுத்துவர்.

மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

மகரம்

மாற்று சிந்தனைகளை மனதில் கொண்டு தனிப்பட்ட முறையில் செயல்படும் மகரம் ராசியினருக்கு இந்த வாரம் பஞ்சம ஸ்தான சுக்கிரன், சப்தம ஸ்தான புதன் ஆகியோரால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தி லாபம் அடைவர். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் ஏற்படும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு வரவேண்டிய தொகை காலதாமதமாக வந்து சேரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால படிப்பு குறித்த வழிகாட்டுதல் பெறுவர்.

நுரையீரல் பாதிப்பு, இருமல் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் நீங்கும். கருப்பு நிற பசுமாட்டுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுப்பதன் மூலம் பல நன்மை ஏற்படும்.

கும்பம்

காரிய வெற்றி என்ற இலக்கை குறிவைத்து, ஒற்றை சிந்தனையாக செயல்படும் கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் சுக ஸ்தான சுக்கிரன், பஞ்சம ஸ்தான குரு ஆகியோர் திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் அமைப்பில் இருக்கிறார்கள்.

தொழில்துறையினர், வியாபாரிகள் சிக்கல்களை சந்தித்தாலும் அதனால் நன்மையே ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினருக்கு புது தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும் நேரம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறுப்புடன் அனைவரும் பாராட்டும் காரியங்களில் ஈடுபடுவார்கள்.

வெளியிடங்களில் நேரம் தவறி உண்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சீராகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு பரிசளித்து மகிழச் செய்தால் நன்மை உண்டு.

மீனம்

மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில் கூச்ச சுபாவம் கொண்ட மீனம் ராசியினருக்கு இவ்வாரம் 5-ல் உள்ள புதன் எந்த சிக்கலையும் சுமுகமாக தீர்க்கும் சிந்தனை தருவார்.

தொழில் துறையினர், வியாபாரிகள் நீண்ட காலமாக மனதில் நினைத்த திட்டங்களை செயல்படுத்தலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணிச்சுமை மூலம் மன உளைச்சல் அடைவர்.

ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் துறையினர் பலமுறை ஆலோசனை செய்த பின்னரே புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

மன அழுத்தம், ஜீரணக் கோளாறு, பிரஷர் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் குணமடையும். ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு ஆடை, பொருள்தானம் செய்தால் நன்மை ஏற்படும்.

1 More update

Next Story