வார ராசிபலன் - 10.08.2025 முதல் 16.08.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
சொன்ன விஷயங்களை சொன்னபடி செய்து முடிக்கவும் திறன் பெற்ற மேஷம் ராசியினருக்கு, ஒன்பதாமிடம் சுப கிரக பார்வைகள் பெறுவதால் மதிப்பு மரியாதை பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மளிகை, ஓட்டல், விவசாய விளைபொருள் வியாபாரம் ஆகிய துறையினர் தொழில் முதலீடு செய்வதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு.
ரியல் எஸ்டேட் துறையில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட முதலீடு மூலமாகவும், ஷேர் மார்க்கெட்டில் எரிவாயு, நிலக்கரி நிறுவன பங்குகள் மூலமும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.
காய்ச்சல், இருமல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை மூலம் அகலும். கோவில் அன்னதானத்துக்கு தேவையான மளிகை பொருட்களை தானம் அளிக்க நன்மை ஏற்படும்.
ரிஷபம்
நிதானத்தோடு, காத்திருந்து வெற்றி அடையும் ரிஷபம் ராசியினருக்கு, 2-ம் இடத்தில் சுபர்கள் இருப்பது செல்வாக்கும், சொல்வாக்கும் பெறச் செய்யும்.
அரிசி, தானியம், எண்ணெய் வித்து தொழில், ஆடை, ஆபரண வியாபாரம் ஆகியவற்றில் புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் துறையில் தொழில் கூட்டாளிகள் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் இனிப்பு தயாரிப்பு, ஓட்டல் நிறுவன பங்குகளாலும் லாபம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிவாகை சூடுவர்.
பல், தொண்டை, காது வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். உடல் உழைப்பு, துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம், செருப்பு தானம் செய்தால் நன்மை உண்டு.
மிதுனம்
கெட்டது நினைத்தவர்களுக்கும் நல்லது செய்யும் மன இயல்பு கொண்ட மிதுனம் ராசியினருக்கு 7-ம் இடத்தில் சுப கிரக பார்வைங்கள் ஏற்படுவதால் திட்டமிட்ட விஷயங்களை செய்து முடிப்பார்கள்.
ஏற்றுமதி-இறக்குமதி, நுகர்பொருள் வியாபாரம் ஆகியவற்றிலும், சுயதொழில் செய்வோரும் எதிர்பார்த்த லாபகரமான காலமிது. தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்கள் பணிகளை மட்டும் பார்த்து வருவது நல்லது.
ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமானங்களை தொடங்குவதன் மூலம், ஷேர் மார்க்கெட்டில் வேளாண் நிறுவன பங்குகள் மூலம் நன்மைகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுமையான ப்ராஜெக்ட் பணிகளை மேற்கொண்டு பெயர் பெறுவர்.
தலை, கை-கால் வலி, காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை மூலம் குணமடையும். ரத்த தானம், அறுவை சிகிச்சை நடந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதால் நன்மைகள் ஏற்படும்.
கடகம்
முன்வைத்த காலை பின் வைக்காமல் எடுத்த காரியத்தை சாதிக்கும் திறன் படைத்த கடகம் ராசியினருக்கு 6-ம் இடம் சுப கிரக பார்வை பெறுவதால் பழைய கடன்கள் அடையும். பணி வாய்ப்புகள் ஏற்படும்.
தங்கம், இரும்பு, மருந்து, கெமிக்கல் வியாபாரத்திலும், மருத்துவர்கள், லேத் பட்டறை ஆகிய தொழிலிலும் வெற்றி உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது அவசியம்.
ரியல் எஸ்டேட் துறையில் புதிய ஊர்களில் கட்டுமான திட்டத்தை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட்டில் அரசு பங்குகளில் முதலீடு செய்வதாலும் ஆதாயம் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களுக்கு வாகனங்களில் செல்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
முதுகில், மார்பில் வலி ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறவும். அருகிலுள்ள அம்மன் அல்லது தாயார் கோவிலில் பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்து, மாலை சூட்டி வணங்க நல்லது நடக்கும்.
சிம்மம்
கொண்ட கொள்கையில் உறுதியோடு, நேர்மையை கடைபிடிக்கும் சிம்மம் ராசியினருக்கு 5-ம் இடம் விசேஷ பலம் பெறுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.
ஆடை, ஆபரண, பாத்திர தொழில் துறையிலும், எண்ணெய் வித்து, திரவம், கால்நடை வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம், லாபம் உண்டு. அரசு உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
ரியல் ரியல் எஸ்டேட் தொழிலில் முடக்கம் நீங்குவதாலும், ஷேர் மார்க்கெட்டில் ஹோட்டல், எரிவாயு நிறுவன பங்குகள் மூலவும் லாபம் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டு நெறிகள் கிடைக்கப்பெறும்.
சுகாதாரமற்ற இடங்களில் சாப்பிடுவதாலும், தண்ணீர் வருவதாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பசு மாட்டுக்கு அகத்திக்கீரை, வெண் பூசணி உண்பதற்கு கொடுப்பதன் மூலம் நன்மை வந்து சேரும்.
கன்னி
மற்றவர் மனதில் உள்ளதை இயல்பாகவே கண்டுகொள்ளும் திறன் பெற்ற கன்னி ராசியினருக்கு 4-ம் இடம் சுப பலம் பெறுவதால் வண்டி வாகனங்கள், பூமி லாபம் ஆகியவை உண்டு.
ஜவுளி உற்பத்தி, எந்திர தொழில்துறையிலும், நுகர்பொருள், பெட்ரோலிய பொருட்கள் வியாபாரத்திலும் தொழில் வளர்ச்சிக்கு நல்லநேரம் கனிந்துள்ளது. தனியார் மற்றும் அரசு உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.
ரியல் எஸ்டேட் தொழிலில் புதிய திட்டங்களை தொடங்குவதாலும், ஷேர் மார்க்கெட்டில் தனியார் நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலமும் நன்மைகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்பதற்குரிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
உடல்நிலையில் அலைச்சல் காரணமாக அசதி ஏற்பட்டு விலகும். ஆசிரியர்களுக்கும், குடும்ப பெரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஆசிகளை பெறுவதன் மூலம் நன்மைகள் உண்டு.
துலாம்
பிறர் துயரை தன் துயர் போல் நினைத்து வருந்தும் துலாம் ராசியினருக்கு 3-ம் இடம் சுப பலம் பெறுவதால் பல்வேறு காரிய வெற்றிகள் உண்டு.
ஹோட்டல், விடுதி, வாகனம் தொழில் துறையினரும், ஜவுளி மற்றும் சாலையோர வியாபாரிகளும் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். அரசு உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளை செய்வதன் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் நிலக்கரி, பெட்ரோலிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதாலும் லாபம் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டு விசேஷங்களில் பங்குகொண்டு உற்சாகம் அடைவர்.
மன உளைச்சல், தலைவலி, பல் வலி ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். தந்தை, தந்தை வழி உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆசிகளை பெற்று நன்மை அடையலாம்.
விருச்சிகம்
மனிதனுக்கு மானமே முக்கியம் என்ற கருத்தைக் கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு 2-ம் இடம் சுப பலம் பெறுவதால் தடைபெற்ற திருமணங்கள் நடைபெறும்.
வாகன உற்பத்தி, மளிகை தொழில் துறையினரும், விவசாய விளைபொருள், எண்ணெய் வித்து வியாபாரிகளும் தொழில் வளர்ச்சி அடைவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று சிறப்பாக செயல்படுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை நிதானமாக மேற்கொள்வதன் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடுகளை கவனமாக மேற்கொள்வதன் மூலமும் நன்மை பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்பு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்வார்கள்.
வயதானவர்கள், நாள்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ ஆலோசனை, மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அம்மன், தயார் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து மல்லிகைப்பூ மாலை சூட்டி பிரார்த்தனை செய்தால் நல்லது நடக்கும்.
தனுசு
மாற்று கருத்துக்களோடு சிந்தித்து செயல்பட்டு காரிய வெற்றி பெறும் தனுசு ராசியினருக்கு சுப கிரக பார்வைகள் மூலம் வெளியிட தொடர்புகள் கிடைத்து குடும்ப சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
அச்சு தொழில், பத்திரிகை, அரசியல் துறையிலும், ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர், எலெக்ட்ரிகல் உதிரிபாக வியாபாரம் ஆகியவற்றில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தொழில் விருத்தி செய்யலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணியிடமாற்றம் அல்லது உத்தியோக உயர்வு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் புதிய கட்டுமான திட்டத்தை தொடங்குவதன் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் ஹோட்டல், தங்க நகை, பெற்றோர் நிறுவன பங்குகள் மூலமும்ஆதாயம் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுமுறை கால விளையாட்டு போட்டிகளில் வெற்றி அடைவர்.
முதுகு வலி, உடல் அசதி, காய்ச்சல் ஏற்பட்டு சரியாகும். அனாதைகள், குழந்தைகள், வயதான பெண்களுக்கு பொருளுதவி, பண உதவி செய்வது நன்மை தரும்.
மகரம்
நல்ல விஷயத்தை, எந்த தடையையும் கடந்தும் செய்து முடிக்கும் மன உறுதி கொண்ட மகரம் ராசியினருக்கு 12-ம் இடம் சுப கிரக பார்வை பெறுவதால் புதிய வீடு மாற்றம், புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.
ஜவுளி, இரும்பு, வாகன உற்பத்தி தொழில் துறையினரும், திரவ பொருள், கிரானைட், இரும்பு வியாபாரிகளும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடையலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை ஏற்று செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையில் கட்டிட பணிகளை கவனமாக பார்வையிடுவதன் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் புதிய முதலீடுகளை கவனமாக செய்வதன் மூலமும் விஷயங்களைத் தவிர்க்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களில் தங்களுடைய தனித்திறன்களை காட்டி வெற்றி பெறுவர்.
பிரயாணம், அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். முருகன் கோவில் பூஜைக்கு தேவையான பால், சிவப்பு நிற மலர்கள் வழங்கினால் நன்மை ஏற்படும்.
கும்பம்
நன்மையும், தீமையும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்த கும்பம் ராசியினருக்கு 11-ம் இடம் பலம் பெறுவதால் எதிர்பாராத நன்மைகள் வீட்டு கதவை தட்டும்.
விவசாயம், இரும்பு, வாகனம் தொழில் துறையினரும், பர்னிச்சர், நகை வியாபாரிகளும் முதலீடு அல்லது கொள்முதல் செய்வதில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். தனியார் துறை உத்தியோகஸ்தர்களுக்கு இனிமையான பணியிடச்சூழல் அமையும்.
ரியல் எஸ்டேட் துறையில் புதிய தொடர்புகள் மூலமாகவும், ஷேர் மார்க்கெட்டில் பால் பொருள் மற்றும் இரும்பு உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயல்படுவர்.
அஜீரணம், மலச்சிக்கல் ஏற்பட்டு விலகும். துப்புரவு பணியாளர்களுக்கு தண்ணீர் தானம் தருவதாலும், நந்திக்கு பால் அபிஷேகம் செய்வதாலும் நன்மைகள் வந்து சேரும்.
மீனம்
குழப்பங்கள் மனதில் இருந்தாலும், தைரியமாக செயல்பட்டு காரிய வெற்றி காணும் மீனம் ராசியினருக்கு 10-ம் இடம் பலமாக இருப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
பெண்கள் ஆடை, பாத்திரங்கள், மிதிவண்டி தொழில் துறையினரும், நகை, மளிகை, சிறு வியாபாரிகளும் சங்கடங்கள் விலகி லாபம் பெறுவர். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு புதிய பணியிட மாற்றத்திற்கான தகவல் வந்து சேரும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய முதலீடுகளை தொடங்குவதன் மூலமும், ஷேர் மார்க்கெட்டில் நிதானமாக முதலீடு செய்வதன் மூலமும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்று செயல்படுவது வெற்றி தரும்.
பல்வேறு காரணங்களுக்காக வெளியிடங்களில் அலைவதால் உடல் அசதி ஏற்பட்டு விலகும். கோவிலில் உள்ள கருப்பு நிற பசுக்களுக்கு அருகம்புல் கொடுப்பதாலும், உடன் பிறந்த, ஒன்றுவிட்ட சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்குவதாலும் நன்மை ஏற்படும்.