வார ராசிபலன் - 08.06.2025 முதல் 14.06.2025 வரை


வார ராசிபலன் - 08.06.2025 முதல் 14.06.2025 வரை
x
தினத்தந்தி 8 Jun 2025 8:53 AM IST (Updated: 8 Jun 2025 12:54 PM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

இந்தவார ராசிபலன்:-

மேஷம்

உறவினர், சொந்தபந்தங்களை அனுசரித்து வாழ வேண்டும் என்ற மனநிலை கொண்ட மேஷம் ராசியினருக்கு இனிய வாரம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சுமூகமாக முடியும். ராசியில் உள்ள சுக்கிரன் பெண் நண்பர்களின் ஆதரவை பெற்று தருவார்.

தானியங்கள், விவசாய விளைபொருள் உற்பத்தி தொழில் துறையினர் புதிய தொழில் முயற்சிகளை திட்டமிட்டு தொடங்கலாம். பேன்சி ஆடை, தங்கநகை வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கல், பணப்பரிவர்த்தனைகளில் கவனமாக செயல்பட வேண்டும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று நன்மை அடைவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிலக்கரி, மருந்து, பெட்ரோலிய நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு, விளயாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவர்.

வெளியிடங்களில் நேரம் தவறி சாப்பிடுவதாலும், வாய்ப்புண், தொண்டை வலியால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையால் குணமடையும். கோவில் வளாகத்தை சுத்தம் செய்வது, பக்தர்களுக்கு நீர்மோர், இனிப்பு தானமாக வழங்குவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்

மென்மையான, பயந்த சுபாவம் இருந்தாலும் திடமான மனதுடன் செயல்படும் ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் பழைய நண்பர்களை சந்திப்பார்கள். சனியும், குருவும் வருமானத்தை பெருக்குவார்கள்.

வேளாண் விளைபொருள் தொழில் துறையினருக்கு அரசாங்கம் மூலம் நன்மை ஏற்படும். ஆடைகள், மருந்து விற்பனை, மூலிகை மருந்து உற்பத்தி தொழில்துறையினருக்கு ஆதாயமான காலகட்டம். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் துறையினர் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன, மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவன பங்கு மூலம் லாபம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி பெறுவர்.

கை-கால் வலி, வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பைரவருக்கு பேரீட்சை நிவேதனம் செய்வதும், இரவில் நாய்களுக்கு பிஸ்கட் அளிப்பதும் பல நன்மைகளை தரும்.

மிதுனம்

மூத்தோர் சொல்லுக்கு மரியாதை அளிக்கும் மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் பண வரவு உண்டு. ராசியில் உள்ள ராசியதிபதி, குரு சேர்க்கை புதிய மனிதர்கள் தொடர்பு மூலம் நன்மை தரும்.

ஆடை தயாரிப்பு, மகளிர் ஆபரண உற்பத்தி தொழில் துறையினருக்கு தொழில் விருத்தி உண்டு. புத்தக விற்பனை, தினசரி சந்தை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, பெட்ரோலியம், நிலக்கரி, சுரங்க நிறுவன பங்கு மூலம் லாபம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை செய்வர்.

காய்ச்சல், தொண்டை வலி, பல்வலி பாதிப்பு ஏற்பட்டு தக்க சிகிச்சையால் விலகும். அம்பிகை அல்லது தாயார் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு பசும்பால் வழங்குவதும், குங்குமம் வாங்கித் தருவதும் நன்மைகளைத் தரும்.

கடகம்

பொதுவெளியில் மற்றவர்களது மதிப்பையும் மரியாதையும் பெற்று பெருந்தன்மையோடு நடந்து கொள்ளும் குணம் கொண்ட கடகம் ராசியினருக்கு புதிய செய்திகள் மனதில் நம்பிக்கையை உருவாக்கும். பத்தாம் இடத்தில் உள்ள சுக்கிரன் எதிர்பாராத தன வரவை தருவார்.

செங்கல், பிளைஆஷ் பிரிக் தயாரிப்பு, விவசாயத் துறையினர் தொழில் விருத்தி செய்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம், கட்டிடப்பொருள் வியாபாரிகளுக்கு இது நல்ல காலகட்டம். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் தொழிலாளர்களின் குறைகளை சரி செய்ய வேண்டும். ஷேர்மார்க்கெட் பிரிவினர் அரசு துறை, உணவு, மசாலா பொருள் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நீரிழிவு, ஒற்றை தலைவலி பாதிப்பு உடையவர்கள் மருந்துகளை வேளாவேளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு முடிந்தவரை மளிகை பொருட்கள் வாங்கித் தருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்

விட்டுக் கொடுக்காமல், நம்பிக்கையோடு செயல்பட்டு ஜெயித்துக் காட்டும் சிம்மம் ராசியினருக்கு இது முன்னேற்றமான வாரம். குடும்ப பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் எளிதாக மனதை உணர்ச்சி வசப்படச் செய்வார்.

மருந்து, மளிகை கடை, விவசாய விளைபொருள் தொழில் துறையினருக்கு நல்ல காலகட்டம். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஆடை ஆபரண வியாபாரிகளுக்கு வர்த்தகம் அதிகரிக்கும். அரசு உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினருக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, மருந்து, பால் பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மூலம் கல்வி மேன்மை அடைவர்.

முதுகு வலி, இடுப்பு வலி, மன உளைச்சல், உடல்சோர்வு ஏற்பட்டு விலகும். இந்த வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நவக்கிரகங்களுக்கு பால் அபிஷேகம் செய்து, மல்லிகைப்பூ சூட்டி வழிபட்டால் பல பிரச்சனைகள் தீரும்.

கன்னி

பிரச்சனைகளில் சிக்காமல் எச்சரிக்கையாக நழுவும் குணம் பெற்ற கன்னி ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்ட விஷயங்கள் நடக்கும். சந்திரன் சஞ்சாரம் காரணமாக பிரயாணங்கள் மூலம் தன வரவு உண்டு.

கல்வி நிறுவனம், உணவகங்களை நடத்துபவர்கள் மேன்மை பெறுவார்கள். திருமண மண்டபம், நகை வியாபாரிகள் ஆகியோர் தொழில் விரிவாக்கம் செய்து லாபம் பெறுவர். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலியம், பால் உற்பத்தி நிறுவன பங்குகள் மூலம் லாபம் அடையலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொறியியல், கணினி பாடங்களை உற்சாகமாக கற்றுக்கொள்வார்கள்.

இடுப்பு வலி, முதுகு வலி, சிறுநீரக பாதிப்பு, ஜீரணக் கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் சீராகும். அறக்கட்டளை அல்லது கோவில் அன்னதான பணிகளில் முடிந்தவரை மளிகை பொருட்கள் தானமாக வழங்குவது நன்மைகளைத் தரும்.

துலாம்

முன்கோபமும், நல்ல குணமும் கொண்ட துலாம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் தடைபட்ட திருமணங்களை நடத்தி வைப்பார்.

விவசாயம் மற்றும் இரும்பு சார்ந்த தொழில் துறையினருக்கு ஆதாயமான வாரம். புதிய நண்பர்கள் மூலம் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மளிகை, நகை வியாபாரிகள் திட்டமிட்ட தொழில் விரிவாக்கம் செய்யலாம். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

ஷேர் மார்க்கெட் பிரிவினர் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் இந்த வாரம் புதிய வாய்ப்புகளை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

கை-கால் வலி, உடல் அசதி, காய்ச்சல் ஏற்பட்டு விலகும். ரம்ப கல்வி பெறும் மாணவ மாணவியர்களுக்கு எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள் வழங்குவதன் மூலம் பல நன்மைகள் உண்டு.

விருச்சிகம்

கஷ்டமான சூழ்நிலையில், நகைச்சுவையோடு அனுபவத்தை பேசும் குணம் கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இவ்வாரம் மனதில் நினைத்த விஷயங்கள் கைகூடும். ராசிக்கு முன்-பின்னாக சஞ்சரிக்கும் சந்திரன் சமூகத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தித் தருவார்.

தானியங்கள் மற்றும் மசாலா பொருள் வியாபாரிகள் புதிய வர்த்தக தொடர்பு பெற்று லாபம் அடைவார்கள். எந்திரத்துறை தொழில் முனைவோர் புதிய முன்னேற்ற பாதையில் செல்வார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டுமே செய்து வரவேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினர் நடந்து வரும் கட்டுமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசுத்துறை பங்குகளில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக பாடங்களை படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவர்.

வயிற்று வலி, ஜீரணக் கோளாறு ஆகியவை ஏற்பட்டு விலகும். ஆதரவற்ற விதவைகளுக்கு அன்னதானம் வழங்குவதும், கோவில்களில் அம்பிகை அல்லது தாயாருக்கு வஸ்திரதானம் வழங்குவதும் நன்மைகளை தரும்.

தனுசு

எதை எங்கே, எப்படி பேசுவது என்ற நுட்பத்தை அறிந்த தனுசு ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குருவும், புதனும் பல வெற்றிகளை தருவார்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் துறையினர், வங்கித் துறையினருக்கு புதிய வாய்ப்பு மூலம் லாபம் பெருகும். நுகர்பொருள், பேன்ஸி பொருள் வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்யலாம். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த விஷயங்களை மட்டுமே கவனிக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். ஷேர் மார்க்கெட் துறையினருக்கு இண்டீரியர், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி, விளையாட்டில் நற்பெயர் பெறுவர்.

இந்த வாரம் முடிந்தவரை மௌனமாக இருப்பதும், வெளியிடங்களில் வேளை தவறி உண்பதையும் தவிர்க்க வேண்டும். துர்க்கை அல்லது காளி கோவிலுக்கு சென்று ஆறு முறை வலம் வந்து வழிபடுவதும், பசு மாடுகளுக்கு அருகம்புல் தருவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

மகரம்

உணர்ச்சிகரமாக பேசி நினைத்த விஷயத்தை சாதித்துக் கொள்ளும் திறன் பெற்ற மகரம் ராசியினருக்கு இந்த வாரம் தடைகளை கடந்து வெற்றி பெறுவர். சனியும், சுக்கிரனும் சுப காரியங்களில் உங்களை ஈடுபடச் செய்வார்கள்.

விவசாயம், லேத் தொழில் துறையினருக்கு சிக்கல்கள் விலகி புது வாய்ப்புகள் ஏற்படும். தங்க நகை, நுகர்பொருள், மசாலா ஏற்றுமதி வியாபாரிகள் தொழில் விருத்தி செய்வார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உரிய அங்கீகாரம் பெறுவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் தங்க நகை, ஆபரண பொருள் நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வார்கள்.

காய்ச்சல், சளி, வயிற்று கோளாறு ஏற்பட்டு மருத்துவத்தால் குணமடையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உற்றார் உறவினர்களுக்கு மருந்து பொருள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்குவதால் நன்மைகள் உண்டு.

கும்பம்

துணிச்சலோடு செயல்பட்டு நினைத்த காரியயத்தில் வெற்றி அடையும் திறமை கொண்ட கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட நல்ல விஷயங்கள் நடந்தேறும். ஐந்தாம் இடத்தில் உள்ள குருவும், புதனும் உங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்துவார்கள்.

மருத்துவம், சுற்றுலா, கேட்டரிங் தொழில் துறையினருக்கு லாபகரமான காலகட்டம். நகை, ஆடை ஆபரண வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவார்கள். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலியம், எரிவாயு, பொதுத்துறை நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிற்கல்வி பயிற்சி பெறுவார்கள்.

சுப காரியங்களுக்காக பல இடங்களுக்கும் சென்று வருவதால் உடல் அசதியும் காய்ச்சலும் ஏற்படக்கூடும். மனைவி வழி உறவினர்கள், ஆதரவற்ற அனாதை குழந்தைகள் ஆகியோருக்கு பொருளாதார உதவிகள் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டு.

மீனம்

கனிவாக, அன்பாக பேசி மற்றவர்களை கவரும் திறன் கொண்ட மீனம் ராசியினருக்கு இந்த வாரம் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். ஜென்ம ராசியில் உள்ள சனி தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தினாலும் ஆதாயமும் உண்டு.

ஓட்டல், கணினி, எந்திர உற்பத்தி தொழில் துறையினர் புதிய இடங்களில் தொழில் விரிவாக்கம் செய்யலாம். மசாலா, ஸ்டேஷனரி, தினசரி சந்தை வியாபாரிகள் லாபம் பெறுவர். தனியார், அரசு உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் நல்ல செய்தி கிடைக்க பெறுவர்.

ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டப் பணிகளை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் கணினி மென்பொருள், பெட்ரோலியம், விவசாய விளைபொருள் நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிவுத்திறன் சாரந்த போட்டிகளில் வெற்றி பெறுவர்.

தலைவலி, மன அழுத்தம் காரணமாக தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். மாலை வேலைகளில் நந்திக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதும், காளை மாட்டுக்கு அருகம்புல் உண்பதற்கு தருவதும் நன்மைகளை ஏற்படுத்தும்.

1 More update

Next Story