ராசிபலன் (27.11.2025): நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: வியாழக் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: கார்த்திகை
நாள்: 11
ஆங்கில தேதி: 27
மாதம்: நவம்பர்
வருடம்: 2025
நட்சத்திரம்: இன்று இரவு 10-57 வரை அவிட்டம் பின்பு சதயம்
திதி: இன்று இரவு 8-03 வரை சப்தமி பின்பு அஷ்டமி
யோகம்: சித்த, மரண யோகம்
நல்ல நேரம்: காலை 10-45 to 11-45
ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00
எமகண்டம்: காலை 6-00 to 7-30
குளிகை: காலை 9-00 to 10-30
கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
நெடுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த காரியம் சாதகமாகும். தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வெகு நாட்களாக குழந்தை இல்லாதோர்க்கு பிள்ளை போகம் உண்டாகும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மனம் அமைதியைத் தேடும். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடன் தீரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
மிதுனம்
புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். தாயின் உடல் நலம் சீரடையும். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். பணவரவில் பங்கம் இல்லை. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். உடல் நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள். பிள்ளையின் திருமண விழா வெற்றி பெறும். நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
தனுசு
கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரி இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார். குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிசன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
கும்பம்
வழக்கு சாதகமாகும். பழைய கடனை பைசல் செய்ய மாற்றுவழி பிறக்கும். தம்பதிகள் வருவாயில் திட்டமிட்டு செயல்படுவர். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள். பெற்றோர் தக்கசமயத்தில் உதவுவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்






