இன்றைய ராசிபலன் - 26.03.2025


இன்றைய ராசிபலன் - 26.03.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

2025 மார்ச் 26

குரோதி வருடம் பங்குனி மாதம் 12ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.42 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

திதி: இன்று அதிகாலை12.27 வரை ஏகாதசி, இரவு 11.05 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 to 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 to 5.30

ராகு காலம் மாலை: 12.00 to 1.30

எமகண்டம் காலை: 7.30 to 9.00

குளிகை காலை: 10.30 to 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 to 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 to 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

பழைய கடன் தீரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

மிதுனம்

இரவு நேர பயணத்தின் போது அதிக கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

இன்று புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள். பிள்ளையின்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

திருமண விழா வெற்றி பெறும். பணவரவில் பங்கம் இல்லை. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பெண்களுக்கு அறியாமை விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

புதிய நட்பால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

தனுசு

தாயின் உடல் நலம் சீரடையும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிசன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள். வீட்டில் உள்ளவர்கள் அடிபணிவர். ஊதிய உயர்வினைப் பெறுவர். பெற்றோர் தக்கசமயத்தில் உதவுவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். பழைய கடனை பைசல் செய்ய மாற்றுவழி பிறக்கும். தம்பதிகள் வருவாயில் திட்டமிட்டு செயல்படுவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள். நெடுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த காரியம் சாதகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்




Next Story