இன்றைய ராசிபலன் - 24.07.2025


இன்றைய ராசிபலன் - 24.07.2025
x
தினத்தந்தி 24 July 2025 5:47 AM IST (Updated: 24 July 2025 9:01 PM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 8-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று மாலை 6.11 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி: இன்று அதிகாலை 3.05 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம்: அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 10.45 - 11.45

ராகு காலம்: பிற்பகல் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 -10.30

கௌரி நல்ல நேரம்: காலை 12.15 - 1-15, மாலை 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மாணவ, மாணவிகள் தங்கள் இலக்கை எட்டிவிடுவர். தேக ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரம் செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் வியாபாரத்தில் சில அதிரடி மாற்றம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

தனியாக தொழில் செய்யும், தொழில்முனையும் பெண்களுக்கு தங்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். கணவர் அல்லது மனைவி வீட்டாரின் உறவு சீராகச் செல்லும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பலவீனமான முதியோர்கள் நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்குச் வேலைச்சுமை கூடும். அதனை திட்டமிட்டு முடிப்பர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கடகம்

வீட்டிலிருந்தபடியே வருவாயை அதிகரிப்பர். தொழில் சூடு பிடிக்கும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை இனிதே நிறைவேறும். நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

பணத்தை கவனமாக கையாளுங்கள். மாமியார் சொந்தங்கள் தங்களுக்கு பக்கபலமாக உறுதுணையாக இருப்பார். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தொழிலதிபர்கள் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். சம்பளமும் உயரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கிவிடுவர். குடும்பப் பிரச்சினை சீராகும். கணவர் வழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பழைய நண்பர்கள் பணம் என்று கேட்டு வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவினர்களிடம் இருந்து நற்செய்திகள் வரும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

இன்று கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரிடம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வர். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். சேலை வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் பெருகுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

இன்று மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

சேலை வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் உண்டு. பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு சில ஜாதகம் கைக்கு வரும். குழந்தைக்காக கோவில் குளம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

வேலைக்குச் செல்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. ஆன்மீகத்தில் பக்தியும் நம்பிக்கையும் அதிகரிக்கும். கோவிலுக்குச் செல்வீர்கள். உடல் நலம் பளிச்சிடும். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு விரும்பிய துறை கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகம் பார்ப்பவர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் உஷ்ணமாகும். அதற்கேற்ற வகையில் உணவினை உட்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

1 More update

Next Story