இன்றைய ராசிபலன் - 23.05.2025


இன்றைய ராசிபலன் - 23.05.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் வைகாசி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 12.25 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று மாலை 06.44 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

ராசிபலன்:-

மேஷம்

வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும். பயணத்தின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலம் பளிச்சிடும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மிதுனம்

கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். எதிர்பாலினரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடையே நிலப்பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

நாடாளுபவர்கள் உதவுவார்கள். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

ஏற்ற துணை அமைவார். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். திருமணம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. வழக்கில் திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் வேலைபளு மிகும் மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். அலைச்சல் அதிகரிக்கும்.விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

1 More update

Next Story