இன்றைய ராசிபலன் - 22.04.2025


Todays Horoscope - 22.04.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் சித்திரைமாதம் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம்:இன்று காலை 08-26 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

திதி: இன்று பிற்பகல் 01-27 வரை நவமி பின்பு தசமி

யோகம்:சித்த யோகம்

நல்ல நேரம் காலை 7.30 - 08.30

நல்ல நேரம் மாலை 4.30 - 5.30

ராகு காலம் மாலை 03.00 - 04.30

எமகண்டம் காலை 09.00 - 10.30

குளிகை மாலை 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: பூசம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வெளிநாட்டு விசா கிடைத்துவிடும். அந்த பயணம் பயன் தரும். சொத்து சம்பந்தமான பதிவு செய்வது மற்றும் பட்டா வாங்குவது நல்ல விதத்தில் முடியும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அதற்கேற்ற சம்பளமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

ரிஷபம்

தாங்கள் நினைத்த ஒரு காரியம் பலிக்கும். தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். ஆன்மீகப் பணியில் நாட்டம் கூடும். கோவில் பணிகளுக்கு உதவுவீர்கள். கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு வெளியூரில் வேலை கிடைத்து செல்வர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

உத்யோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். விவசாயிகளுக்கு கடன் உதவி கிடைக்கும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். உடல் உஷ்ணம் ஏற்படும். நீராகாரம் மற்றும் இளநீர் போன்றவைகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம்.. ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

வியாபாரிகளின் சோம்பேறித்தனம் விலகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். நீண்ட நாளுக்குப் பின் தங்கள் தோழரை சந்திப்பீர்கள். சில விசயங்களை தாங்கள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

வெளியூரிலிருந்து நற்செய்திகள் வரும். விருப்பமில்லாத சில விசயங்கள் தங்களிடம் இருந்து நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனைவியிடம் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்களின் வருகை தங்கள் வீட்டில் மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வேண்டுதல் நிறைவேறும். கலைஞர்களுக்கு நன்மதிப்பு கூடும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரிடம் அனுசரனையுடன் இருப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

திருமணம் மற்றும் சீமந்தம் போன்ற சுப காரியங்கள் தங்கள் வீட்டில் நிறைவேறும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். ஒரு சிலர் கிளைகளை துவங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

நட்பு வட்டம் விரிவடையும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செழிப்படையும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. பெண்களுக்கு மூட்டுகளில் வலி வந்து போகும். உடல் நலத்தில் அக்கறை தேவை. நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

வியாயாரிகளுக்கு ஒரு பெரிய தொகை லாபமாக கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். உணவு விசயத்தில் மிகவும் தேவை. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். நண்பர்களின் சுப விசேஷத்திற்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நன்மையில் முடியும். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பீர்கள். குடும்பத் தலைவிகள் சிக்கனத்தை கடைபிடிப்பர். வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனம் தேவை. பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். கர்ப்பினி பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

1 More update

Next Story