இன்றைய ராசிபலன் - 21.04.2025


Todays Horoscope - 21.04.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 8-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்:இன்று காலை 8-34 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

திதி: இன்று பிற்பகல் 2-33 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம்:மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.30 - 07.30

நல்ல நேரம் மாலை: 4.30- 5.30

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை மாலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: புனர்பூசம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

நடைபாதை வியாபாரமான காய்கறி, பழங்கள் மற்றும் அயன் செய்பவர்களுக்குசிறு வியாபாரிகள் நல்ல ஆதாயம் பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். பெரியவர்கள் மனதை குளிர்விப்பீர்கள். அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிசபம்

காதலர்களுக்குள் சிறு ஊடல்கள் தோன்றி விலகும். ஒரு சிலருக்கு திருமணம் செட்டாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வாகனங்களில் ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம். விவசாயிகளின் பொருட்களுக்கு நல்ல தேவைகள் மற்றும் விலை ஏற்றமும் உண்டு. தம்பதிகளிடையே அன்பு பெருகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு விற்பனையைப் பெருக்க கூடுதல் அலைச்சல்கள் ஏற்படும். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். ஒரு சில நேரங்களில் நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் நிம்மதி நிலவும். உங்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

வியாபாரிகளின் தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

உத்யோகத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

தனுசு

வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தம்பதிகள் ஒற்றுமை காண்பர். தேகம் பளி ச்சிடும். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

பெண்கள் சுய தொழில்களில் முதலீட்டினை மேற்கொள்வர். சகோதரர்களின் உதவி கிடைக்கும். தாய்வீட்டு உறவினர்கள் வருகை உண்டு. விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். அதிகப் பயணங்களால் லாபம் கூடும். மாணவர்கள் பகுதி நேர தொழில்நுட்பப் பயிற்சியில் சேருவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பீர்கள்.குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.உடல் சோர்வு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை




1 More update

Next Story