சுப காரியம் கைகூடும் நாள்.... இன்றைய ராசிபலன் - 30.10.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
விசுவாவசு வருடம் ஐப்பசி 13-ம் தேதி வியாழக்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02.56 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
திதி: இன்று காலை 05.32 வரை அஷ்டமி பின்பு நவமி'
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00
எமகண்டம் காலை: 6.00 - 7.30
குளிகை காலை: 9.00 - 10.30
கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 1.15
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
ராசிபலன்:-
மேஷம்
பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். மகிழ்ச்சி பொங்கும். அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
மகரம்
பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
மீனம்
தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்






