இன்றைய ராசிபலன் - 29.08.2025


இன்றைய ராசிபலன் - 29.08.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் ஆவணி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 11.59 வரை சுவாதி பின்பு விசாகம்

திதி: இன்று மாலை 7.39 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 09.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 01.15

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன்:-

மேஷம்

இளைஞர்கள் வேலைக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்ளு பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். வியாபாரம் சாதகமாக இருக்கும். வியாபாரம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

சேமிப்பில் கவனம் தேவை. வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். தம்பதிகளின் புரிதல் அதிகரிக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். நினைத்த துறையில் சேருவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

அண்டை வீட்டார்கள் உதவுவர். பணத்தட்டுப்பாடு நீங்கும். பிரிந்தவர் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். தம்பதிகளிடம் அன்யோன்யம் மிகும். சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

தம்பதிகளிடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரிகளுக்கு முதல் போடுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். செலவு கூடும். சிக்கனம் தேவை. புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

தன்னம்பிக்கை மிளிரும். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர். எடுத்த காரியம் வெற்றியடையும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். பெரியவர்களிடம் பணிவு தேவை. கணவரிடம் அனுசரிப்பது நல்லது. மாணவர்கள் திறன் கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். உடல் வலி நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாகும். உணவு விசயத்தில் கவனம் தேவை. வீட்டு உணவை உண்பது நலம். கடன் பைசலாகும். குடும்பத் தலைவிகள் தங்கள் தேவையை பூர்த்திச் செய்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பங்குச் சந்தையில் ஆதாயம் உண்டு. பண வரவு நன்றாக இருக்கும். உறவினர் வருகை உண்டு. சகோதரர் வழியில் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

தனுசு

இன்று பல காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் சரணடைவர். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர். தம்பதிகளின் அன்பு அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக சேமிப்பினை துவங்குவர். உத்யோகத்தில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மகரம்

தம்பதிகளின் அன்யோன்யம் கூடும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். இளைஞர்கள் புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். உடலில் சளி தொந்தரவு வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

இன்று உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story