இன்றைய ராசிபலன் - 28.08.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
விசுவாவசு வருடம் ஆவணி 12-ம் தேதி வியாழக்கிழமை
நட்சத்திரம்: இன்று காலை 9.28 வரை சித்திரை பின்பு சுவாதி
திதி: இன்று மாலை 05.41 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் மாலை: 10.45 - 11.45
ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00
எமகண்டம் காலை: 6.00 - 7.30
குளிகை காலை: 9.00 - 10.30
கௌரி நல்ல நேரம் காலை: 12.15 - 1.15
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டம்: உத்திரட்டாதி
ராசிபலன்:-
மேஷம்
அரசு தொடர்பான காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக வரும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். சோர்வாக இருந்தவர்களுக்கு இனி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் கூடும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் உண்டு. நண்பர்களுடன் நீண்ட தூர ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
புதிய தொழில் துவங்குவதற்கு வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதியதொரு வியாபாரம் துவங்குவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
எந்த ஒரு விசயமானாலும் தம்பதிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுப்பர்.பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. வழக்குகள் பணப்பிரச்னை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
கடகம்
காதலர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். வியாபாரம் செழிப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
சிம்மம்
மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர். பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
கம்ப்யூட்டர் மற்றும் வீட்டிற்கு தேவையான நவீன பொருட்கள் புதிதாக வாங்குவீர்கள். தொழிலை விரிவாக்குவீர்கள். பல கிளைகளை துவங்கி லாபத்தை பெருக்குவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
துலாம்
குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். கொடுக்கல், வாங்கல் கை கொடுக்கும்.புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
விருச்சிகம்
தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். மகள், மாப்பிள்ளை மூலம் சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
சகோதரர் தங்களுக்கு உதவிபுரிவர். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கை கூடும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
பங்காளிகளின் ஒற்றுமை கூடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பயணங்களின் போது கவனம் தேவை. உங்களது நீண்ட கால கனவான வீடு வாங்கும் முயற்சி பலித்துவிடும். மாணவர்கள் முயற்சி பலிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கும்பம்
வழக்கறிஞர்கள் சாதனை படைப்பர். பெண்களுக்கு நினைத்த வரண் அமையும். உங்கள் சொத்து பிரச்சினை இழுபறிகள் நீங்கி நல்ல முடிவினைத் தரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். காதல் கசக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
மீனம்
இன்று உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே