இன்றைய ராசிபலன்: காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும்


இன்றைய ராசிபலன்: காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும்
x
தினத்தந்தி 14 Sept 2025 6:40 AM IST (Updated: 14 Sept 2025 7:24 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: ஞாயிறு கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஆவணி

நாள்: 29

ஆங்கில தேதி: 14

ஆங்கில மாதம்: செப்டம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01-17 வரை ரோகினி பின்பு மிருகசீரிஷம்

திதி: இன்று காலை 09-15 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 06-00 to 07-00

நல்ல நேரம்: மாலை 03-15 to 4-15

ராகு காலம்: மாலை 04-30 to 6-00

எமகண்டம்: மாலை 12-00 to 1-30

குளிகை: மாலை 03-00 to 4-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

மனைவி வீட்டார் வருகை இருக்கும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமில்லை. உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு. மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் வேண்டிய இலக்கினை எட்டுவீர்கள். வழக்கு சாதகமாகும். பல்வலி வந்து போகும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமண தகவல் மையத்தில் இருந்து நல்ல வரண் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர். அவர்களால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்கு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

நினைத்து பாராத ஒரு நல்ல செய்தி வந்தடையும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த லாபத்திற்கு மேல் லாபம் உண்டாகும். திருமணம் மற்றும் கிரகபிரவேசத்திற்கு அழைப்பு வரும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். சகோதர, சகோதரி வழியில் மனஸ்தாபம் ஏற்படும் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்வீர்கள். தங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல் பொலிவினைக் கூட்டும்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

அரசு சம்பந்தப்பட்ட விசயத்தில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

விருச்சிகம்

தம்பதிகளிடையே ஒற்றுமை மேம்படும். வியாபாரிகளுக்கு முதல் போடுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இதனால் தங்கள் வேலைகள் சுலபமாகும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். செலவு கூடும். சிக்கனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மகரம்

பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். தொலைந்து போன தங்கள் வாட்ச் மற்றும் தங்க நகை பொருள்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உணவு விசயத்தில் கவனம் தேவை.

மூன்றாம் நபரால் ஏற்பட்ட தங்களின் குடும்பப் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

புதுநபர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. விற்பனை பிரதிநிதிகளுக்கு ஏற்றவாறு தங்களின் அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் செழிப்புறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் மின்னும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

விரும்பிய வரணை கைப்பிடிப்பீர்கள். பணம் தொடர்பான சிக்கல் இருக்கும். அதனை சமாளித்து வீட்டில் நற்பெயர் எடுப்பீர்கள். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பெண்களுக்கு உஷ்ண பாதிப்பு ஏற்படும். குளிர்ந்த பொருட்களை உட்கொள்ளுதல் நன்மை தரும். தேகம் பளபளக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை




1 More update

Next Story