இன்றைய ராசிபலன் - 07.09.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
விசுவாவசு தமிழ் மாதம் ஆவணி நாள் 22
ஆங்கில தேதி 7 ஆங்கில மாதம் செப்டம்பர் வருடம் 2025
நட்சத்திரம் இன்று இரவு 11-13 வரை சதயம் பின்பு பூரட்டாதி
திதி இன்று அதிகாலை 1-48 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் காலை 08-30 to 09-00
நல்ல நேரம் மாலை 03-15 to 4-15
ராகு காலம் மாலை 04-30 to 6-00
எமகண்டம் மாலை 12-00 to 1-30
குளிகை மாலை 03-00 to 4-30
கௌரி நல்ல நேரம் காலை 10-45 to 11-45
கௌரி நல்ல நேரம் மாலை 1-30 to 2-30
சூலம் மேற்கு
சந்திராஷ்டாமம் பூசம், ஆயில்யம்
ராசிபலன்:-
மேஷம்
பெண்கள் அத்தியாவசிய செலவினை சமாளிப்பர். மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்ல ஆசைப்படுபவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதிப்பர். நட்பால் ஆதாயம் உண்டு வழக்கறிஞர்களுக்கு தங்களின் வழக்கு நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வேலைக்கான எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். .
அதிர்ஷ்ட நிறம் பச்சை
ரிசபம்
இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
மிதுனம்
இன்று தங்கள் விடாமுயற்சியால் முக்கியமான ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். மார்கெட்டிங் பிரவினர்களுக்கு சம்பள உயர்வும் இன்சன்டிவ் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
கடகம்
இன்று பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். அது பிரிவினில் முடித்துவிடும். புனர்பூசம் நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
சிம்மம்
கல்லூரி மற்றும் பள்ளியில் வேலைசெய்யும் ஆசிரியர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். விடுமுறை என்பதால் குல தெய்வ கோவில் செல்வீர்கள். ஒரு சிலர் திரையரங்குகளுக்குச் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
கன்னி
கணவன் மனைவி ஒற்றுமை உண்டு. இருவரும் இணைந்து முடிவெடுப்பர். வெளிநாட்டில் தங்களுடைய தொழில் பிரசித்தி பெறும். அங்கும் தங்கள் தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். வி.ஐ.பி களின் தொடர்பால் நன்மை கூடும். தங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பணிபுரிய தங்களுக்கு அனுமதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
துலாம்
காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தங்கள் கீழ் வேலை செய்யும் பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். உத்யோகஸ்தர்களுக்கு மன அமைதி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாகும். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர்.
அதிர்ஷ்ட நிறம் கருநீலம்
விருச்சிகம்
மாணவர்கள் சாதனைபுரிவர். கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் பளபளக்கும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
தனுசு
வேற்றுமதத்தவர் உதவுவார்.தங்கள் கீழ் வேலை பார்க்கும் எடுபிடி வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். அவர்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்கவும். தங்கள் மனைவி தங்களிடம் உண்மையாக இருப்பர். அவர்கள் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
மகரம்
உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உடல் நலம் சிறக்கும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
கும்பம்
வியாபாரம் செழிப்புறும். ஆன்மீகத்தில் மனம் நாடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். தங்களுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் அதனை பிரித்துக் கொள்வர். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். இன்று சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் ரோஸ்
மீனம்
தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
