இன்றைய ராசிபலன் (05.01.2026): எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும்..!


இன்றைய ராசிபலன் (05.01.2026): எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும்..!
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: திங்கட் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: மார்கழி

நாள்: 21

ஆங்கில தேதி: 5

மாதம்: ஜனவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 05-02 வரை பூசம் பின்பு ஆயில்யம்

திதி: இன்று பிற்பகல் 1-24 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 6-30 to 7-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: மாலை 7-30 to 9-00

எமகண்டம்: காலை 10-30 to 12-00

குளிகை: காலை 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம்: காலை 09-30 to 10-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஓரளவு பணம் வரும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் மகிழ்ச்சியும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தேகம் மின்னும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்

கடகம்

சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல துணை அமையும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு. தாய் மகன் அன்பு பலப்படும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். வீடு வாங்க கடன் கிடைக்கும். வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். முக்கிய விழாவிற்கு தலைமை ஏற்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

துலாம்

நட்பு வட்டம் விரிவடையும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். வியாபாரம் செழிப்புறும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பணப் புழக்கம் மிகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கிறது, வியாபாரிகளுக்கு திருப்பம் உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாக்கில் கவனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். லாபத்தை அதிகரிப்பர். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பர். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கும்பம்

பணவரவுக்கு பஞ்சமில்லை. நல்ல செய்தி கிடைக்கும். கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கல்வியில் வெற்றி உண்டு. உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

சகோதரர் வருகை உண்டு. ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்



1 More update

Next Story