இன்றைய ராசிபலன் (03.12.2025): குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்...!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை புதன் கிழமை
தமிழ் வருடம் விசுவாவசு
தமிழ் மாதம் கார்த்திகை
நாள் 17
ஆங்கில தேதி 3
மாதம் டிசம்பர்
வருடம் 2025
நட்சத்திரம் இன்று மாலை 4-47 வரை பரணி பின்பு கிருத்திகை
திதி இன்று காலை 10-13 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம் சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை 9-15 to 10-15 - மாலை 12-00 to 1-30
எமகண்டம் காலை 7-30 to 9-00
குளிகை காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம் காலை 10-45 to 11-45 மாலை 6-30 to 7-30
சூலம் வடக்கு
சந்திராஷ்டமம் :அஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன்
மேஷம்
செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். யோகாவில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு.காதலர்கள் பொறுப்புணர்வர். நல்ல வரன் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் கிரே
மிதுனம்
தம்பதியரிடையே கருத்து பகிர்வுகள் நடக்கும். உடல் நலம் சீராகும்.பிள்ளை நன்கு படிப்பர். ஞாபக மறதி வந்து போகும். கவனமாக இருக்கவும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். மொத்ததில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்
கடகம்
தங்கை வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மீது கவனம் தேவை. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பங்கு சந்தையால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சைனஸ் தொந்தரவு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் கருநீலம்
சிம்மம்
நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
கன்னி
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
துலாம்
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருக்கும். திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரண் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேகம் பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
விருச்சிகம்
கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வாயுத் தொந்தரவு வந்து போகும். உணவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில மகிழ்ச்சி உண்டாகும். அரசியலில் உள்ளோர் மேடை பேச்சுகளில் கவனம் தேவை. புது வீடு வாங்குவர். திடீர் பயணங்களால் லாபம் அதிகமுண்டு. நண்பர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
தனுசு
வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு.அதற்கேற்ப செலவுகளும் வந்து போகும். சிக்கனமாக இருங்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். தூக்கமின்மை வந்து போகும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
மகரம்
சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். வாகனத்தை இயக்கும் முன் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும்.அதற்கான இன்று முயற்சிகள் ஆரம்பமாகும்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
கும்பம்
உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். சளி தொந்தரவு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
மீனம்
பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் யோகம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்







