இன்றைய ராசிபலன் - 03.11.2025: இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:-
நவம்பர் 3
கிழமை: திங்கட்கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: ஐப்பசி
நாள்: 17
ஆங்கில தேதி: 3
மாதம்: நவம்பர்
வருடம்: 2025
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.02 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
திதி: இன்று அதிகாலை 01.43 துவாதசி, இரவு 11.49 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 6.15 - 7.15
நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45
ராகு காலம் மாலை: 7.30 - 9.00
எமகண்டம் காலை: 10.30 - 12.00
குளிகை காலை: 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம் காலை: 09.15 - 10.15
கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம் :பூரம்,உத்திரம்
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். தம்பதிகள் திட்டமிட்டு செயல்படுவர். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.பழைய கடனை பைசல் செய்ய மாற்றுவழி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். நெடுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்குகள் சாதகமாகும். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
மிதுனம்
பெண்கள் சுய தொழில் ஆரம்பிப்பர். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். காதலர்கள் எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீரகள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
சிம்மம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
கன்னி
சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை விரைவில் நிறைவேறும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதப்பட்டு வந்தடையும். பணப் பற்றாக்குறை நீங்கும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும். கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
விருச்சிகம்
தேகம் பளிச்சிடும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். தம்பதிகள் ஒற்றுமை காப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
தனுசு
புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மகரம்
கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வெகு நாட்களாக குழந்தை இல்லாதோர்க்கு பிள்ளை யோகம் உண்டாகும். உத்யோகம் சாதகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் இறுதியில் லாபத்தை ஈட்டுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வங்கி லோன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கௌரவப் பதவி தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்






