இன்றைய ராசிபலன் - 02.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும்


Today Rasi Palan in Tamil - 02.11.2025
x
தினத்தந்தி 2 Nov 2025 6:09 AM IST (Updated: 3 Nov 2025 5:54 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஐப்பசி

நாள்: 16

ஆங்கில தேதி: 2

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-04 வரை

பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று அதிகாலை 03-18 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை: 03.15 - 4.15

ராகு காலம் மாலை: 04.30 - 6.00

எமகண்டம் மாலை: 12.00 - 1.30

குளிகை மாலை: 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

பழைய பிரச்சினைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை பயன்தரும்.மாணவர்கள் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் அநாவசியப் பேச்சை நிறுத்தி விடுவது தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். தாயின் உடல் நலம் சீரடையும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். கடன் தொகை கைக்கு வந்து சேரும். வெளிவட்டார தொடர்பால் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த நற்செய்தி மனதை மகிழ்விக்கும். மாமன் வழியில் நன்மைகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பெண்களுக்கு சுபகாரியம் செட்டாகும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனம் வாங்கிவிடுவீர்கள். சகோதரரால் நன்மை விளையும். மனதிற்கு பிடித்தவைகளை செய்து முடிப்பீர்கள். காதல் கசக்கும். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்திலுள்ளவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். பழைய கடனில் ஒரு தொகையை அடைத்துவிடுவீர்கள். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.மலை பிரதேசங்களுக்கு சென்று வருவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

விஞ்ஞானிகள் சாதனைப் படைப்பர். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். மாணவர்கள் நல்நட்பை வளர்ப்பர். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

பணவரவு பாக்கெட்டினை நிரப்பும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்கும். புதியவர்களின் அறிமுகத்தால் தங்கள் காரியம் கைகூடும். காதலர்கள் விட்டுக் கொடுப்பர். பெண்களுக்கு மதிப்பு மிகும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

தொழில்.அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். மாணவர்களுக்கு மந்த நிலை விலகும். பயணங்கள் வெற்றி தரும். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

தனுசு

சுபகாரியம் ஒன்று தாமதமாகும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். உயர் கல்விச் செலவு உண்டு. பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கலைஞர்களின் கனவு நனவாகும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

பிள்ளைகளின் திருமண ஏற்பாடு சிறப்பாக நடக்கும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவர். பெரிய தொடர்பால் மனம்மகிழும். நினைத்த இலக்கை அடைவர். இளைஞர்கள் விரும்பிய வேலையில் அமர்வர். வியாபாரத்தில் இருந்த போட்டிள் மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும். பணவிசயங்களில் தட்டுப்பாடு இருக்காது. எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிட்டும். வெளி நபர்கள் உதவுவர். சேமிப்பு பலன் தரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். மக்கள் மத்தியில் தங்கள் மரியாதை கூடும். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். வேலைதேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் பயன்படுத்திகொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கொள்ளும். விவசாயிகளுக்கு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story