இன்றைய ராசிபலன்: 15.09.2025...காதலர்கள் சிந்திப்பது நல்லது


Today Rasi Palan - 15.09.2025
x
தினத்தந்தி 15 Sept 2025 6:24 AM IST (Updated: 15 Sept 2025 6:25 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

செப்டம்பர் 15

கிழமை: திங்கட்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஆவணி

நாள்: 30

ஆங்கில தேதி: 15

ஆங்கில மாதம்: செப்டம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 11-55 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

திதி: இன்று காலை 7-01 அஷ்டமி வரை பின்பு நவமி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை மாலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.45 - 2.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

அலுவலகத்தில் மனநிம்மதி அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்படலாம். மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். உங்கள் துணை தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். உடல் நலம் சிறக்கும். திடீர் வெளியூர் பயணம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

ரிஷபம்

நண்பர்கள் உதவி கிடைக்கும். பழைய கடன் குறையும். தம்பதிகளிடம் அன்யோன்யம் மிகும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர்.மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். இருவரும் இணைந்து குடும்ப விசயத்தில் முடிவெடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வாகன வியாபாரம் லாபம் தரும். வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

கடன் தொல்லை தீரும். குடும்பத்தில் பணப் பிரச்சினை இருக்காது. மாறாக, இரட்டிப்பு வருவாய் வரும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் சண்டை ஏற்படும். ஆகவே, அமைதி காப்பது நன்று. மனம் விட்டு பேசுவீர்கள். பின்பு சமாதானமாவீர்கள். தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

சிம்மம்

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். அங்கீகாரம் பெறும் காலம். உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவர். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு பட வாய்ப்பின் மூலமாக முன் பணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை வலுவாக்கும். சம்பளம் உயர வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். அவர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்வர். வியாபாரம் செழிப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்கள் வெளியே செல்லும் போது மற்றவர்கள் துணையின்றி செல்வதை தவிர்ப்பது நல்லது. விவசாயிகளின் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டுநிறம்

விருச்சிகம்

விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

பணம் பலவழிகளில் கிட்டும். எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும். அது தங்களுக்கு ஆனந்தத்தைத் தரும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தங்களின் பிள்ளையின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். வியாபாரத்தில் தாங்கள் நினைத்ததற்கும் மேலாக லாபம் ஏற்படும். காதலர்கள் பொறுப்புணர்வர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மகரம்

பிள்ளைகளிடம் அனுசரித்து போவது நல்லது. அவர்களிடம் சற்று தட்டிக்கொடுத்து அவர்கள் வழியாகவே செல்வது நல்லது. தேகம் மினுமினுக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

தங்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்திப்பது நல்லது. தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமரசமாவர். கணினித் துறையில் உள்ளவர்கள் தங்கள் வேலையில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் விருந்து, விழா என்று சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

மீனம்

தம்பதிகள் ஆலயப் பணியில் இணைந்து செயல்படுவீர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தாங்கள் சந்திக்க வேண்டும் என்பவரை சந்திப்பீர்கள். ஒரு சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். விரும்பிய துறையில் நீங்கள் கால் பதிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

1 More update

Next Story