செப்டம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


September month rasipalan for mesham, rishabam, Mithunam, kadagam in tamil
x

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

செப்டம்பர் மாத பலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

தலைகணம் இல்லாதவர் நீங்கள். பணிவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து நடப்பவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் திறமையை தங்களின் மேலதிகாரிகள் கண்டுபிடித்து உங்களை மேல்நிலைக்குச் செல்ல முற்படுவர். ஆதலால், அதற்கு குறுக்கே நிற்காமல் அவர்களின் சொல்படி நடக்கப்பாருங்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலுக்கு முதல் தேவைப்படுவதால் அரசு வங்கியில் கடன் கேட்பீர்கள். அரசுக் கடனும் கிடைத்துவிடும். அதனை வைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் வீட்டிற்கு வரும் தங்கள் கணவரது உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் அமைதிகாப்பது மிக சிறந்த ஒன்று.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வெல்வர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலும் தங்கள் முத்திரை பதிப்பர்.

மாணவர்களுக்கு

அரசு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் தற்போதிலிருந்தே சிறப்பு பயிற்சி மேற்கொண்டு நன்கு படிப்பர். நல்ல மதிப்பெண்களை பெறுவர்.

பரிகாரம்

ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சனிகிழமை அன்று சாத்தவும்.

ரிசபம்

ரிஷப ராசி அன்பர்களே!

ஆள் பாதி ஆடை பாதி என்பதை நீங்கள் உணர்ந்தவர். எப்போதும் நன்கு உடைஅணிவதில் ஆர்வம் மிக்கவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு ஆதரவும், சலுகைகளும் கொடுப்பர். பெரிய பொறுப்புகளும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வர்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தாங்கள் பிள்ளைகளின் திருமண விசயமாக கோவில் பிரார்த்தனைகள் மற்றும் பரிகாரங்கள் செய்து முடிப்பர். பணவரவில் பிரச்சினை இல்லை.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுடன் நல்ல சம்பளமும் கிடைக்கும் மாதமாக அமையும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பு கூடும்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் மிகுதியாகி நன்கு படிப்பர். அதிகமதிப்பெண்கள் பெறுவர்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று வெக்காளி அம்மன் அல்லது அங்காளி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே!

நீங்கள் தன்மானத்தை விட்டு எங்கேயும் இறங்க மாட்டாதவர். அன்புக்கு மட்டுமே நீங்கள் அடிமை.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். தங்கள் சக ஊழியர்களின் உதவியால் பங்கிட்டு முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள், சில்லரை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் எதிர்பார்ப்புக்கு மேல் வருவாய் அதிகரிக்கும். அதில் ஒரு பகுதியை எடுத்து வீடுகட்ட ஆரம்பிப்பீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய சேமிப்பு தொகை அதிகரிக்கும். பணம் தாராளமாக புழங்கும். வீட்டில் உறவினர்களின் வருகை உண்டு. அவர்களால் தங்களுக்கு நன்மையே விளையும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருடங்களாகியும் வெளிவராமல் இருந்தது அல்லவா அந்த படம் இந்தமாதம் வெளிவரும். அதில் தங்களின் நடிப்புத் திறன் வெளிப்படும்.

மாணவர்களுக்கு

மாணவ மாணவிகள் தங்களது மாணவர்களுக்கு படிப்பில் முழுக் கவனம் தேவை. தேவையற்ற விசயத்தில் கவனம் செலுத்தாமல் தாங்கள் தங்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்து அதற்கேற்ப படிக்க துவங்குங்கள்.

பரிகாரம்

லட்சுமி நரசிம்மருக்கு சனி கிழமை தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே!

உங்கள் முகம் அனைவரையும் ஈர்க்கச் செய்யும் ராஜ வசியம்மிக்கவர் நீங்கள். உங்களை சூழ்ந்து ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

நீண்ட காலமாக தள்ளிப்போன பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணத் தடை நீங்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு முன்பிருந்ததை விட சற்று தொய்வு நிலையை காணலாம். இருப்பினும் சற்று கடின உழைப்புடன் இருந்தால் நஷ்டத்திலிருந்து தப்பிக்க இயலும். புது நபரை பணப்பெட்டி அருகே விட்டிருப்பதை தவிருங்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு புதிய புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வீர்கள். முன் பணமும் கைக்கு கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். ஆனால் உடல் நலனில் சற்று அக்கறையுடன் இருந்தால் நன்கு படிக்க உடல் ஒத்துழைக்கும். ஐஸ்க்ரீம் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்

முருகப் பெருமானுக்கு செவ்வாய் கிழமை அன்று அரளிப்பு மாலையை கொடுப்பது நல்லது.

1 More update

Next Story