செப்டம்பர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
உங்களுக்கு சமூக சேவையில் மனம் நாடும். மற்றவர்களின் தேவையை அறிந்து உதவுவதும் உங்கள் ,இயற்கையான குணம்.
சிறப்புப்பலன்கள்
உத்தியோகதர்களுக்கு
உத்தியோகஸ்தர்களுக்கு மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பொறுப்பு எடுத்துக் கொள்வதோ கூடாது. தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் வெளிநபர்களின் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
குடும்பத் தலைவிகளுக்கு
தாங்கள் பிள்ளைகளைப்பற்றி கருத்தில் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ள தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு மற்ற நடிகர் நடிகைகளுடன் கிசுகிசுக்களை தடுக்க வேண்டுமென்றால் தாங்கள் தாங்கள் நடிக்கும் எதிர்பாலினரிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம். தங்களுக்கு அதிக மதிப்பெண்களை பெற வேண்டுமானால் வீட்டில் அடிக்கடி எழுதி பார்ப்பது நல்லது.
பரிகாரம்
குருபகவானுக்கு வியாழக் கிழமை அன்று முல்லை மலர் மாலையை அணிவித்து வழிபடுவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே!
சம நிலையில் இருப்பவர் நீங்கள். மொத்தத்தில் பக்குவப்பட்டவர்
சிறப்புப்பலன்கள்
உத்தியோகதர்களுக்கு
உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளில் தலைமையில் இருப்பவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். நல்ல சம்பளமும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு உங்களது பேச்சாலேயே பிரச்சினைகள் உருவாகும். ஆதலால் எங்கு பேசினாலும் நிதானமாகவும் யோசித்தும் பேசுங்கள். நல்ல லாபத்தை பெறலாம்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். தந்தை வழியில் பணம் வரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர்.தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். ‘
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் தங்கள் இயக்குனரிடம் வாக்குவாதம் செய்யாமல் அவர்கள் சொன்னதை நடித்தால் தங்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் நீண்ட நேரம் செல்போன்களை பயன்படுத்தாமலும் இரவில் விழிக்காமலும் அதிகாலையில் எழுந்து படித்தால் நன்கு மனதில் பதியும்.
பரிகாரம்
அய்யனாருக்கு சனி கிழமை அன்று பொங்கலிட்டு வணங்குவது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!
நீங்கள் புது சிந்தனைகளையும் மாறுபட்ட புதுமையான கருத்தையும் சிறந்த தத்துவங்களையும் கூறுவீர்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் செல்லுதல் மற்றும் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளுதல் போன்றவையால் உடல் நலம் கெடும். உடல் நலத்தில் கவனம் தேவை.
வியாபாரிகளுக்கு
ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளின் குடும்பம் பிரச்சினைகளின்றி சுமுகமாக செல்லும். தங்க நகைகளை இரவல் கொடுப்பது வாங்குவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு படபிடிப்பின் போது மற்றவர்களிடம் அதிக நெருக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம். பொது விசயங்களை கலந்துரையாடல் செய்வது நல்லது.
மாணவர்களுக்கு
மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவது போன்று தங்களது படிப்பிலும் கவனம் செலுத்தினால் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் அன்பையும் பெற இயலும். நன்மதிப்பெண்களை பெறுவர்.
பரிகாரம்
பாடிகாட் முனீஸ்வரருக்கு செவ்வாய் கிழமை அன்று பொங்கல் படைத்து வணங்குவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொண்டவர் நீங்கள். நிச்சயம் உங்களுக்கு எல்லாம் இனிதே முடியும்.
சிறப்புப்பலன்கள்
உத்தியோகதர்களுக்கு
உத்தியோகஸ்தர்களில் சிலருக்குப் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அதற்கான அமைப்பு உண்டாகும், விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள்.
வியாபாரிகளுக்கு
சிலருக்கு நிலையான தொழிலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும். அந்த தொழில் தங்களுக்கு மிக உதவியாகவும் நிரந்தரமாகவும் அமையும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பிள்ளைகளால் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தங்கள் சங்கத்தில் நீண்ட நாட்களாக தாங்கள் கேட்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும். ஒரு சிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வர்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் எதிர்ப்பார்த்த பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமானால் பல முறை எழுதி பார்ப்பது நல்லது. அப்போதுதான் நற்மதிப்பெண்களை பெற இயலும்.
பரிகாரம்
வெக்காளி அம்மனுக்கு மல்லிகை மலர் மாலையை வெள்ளிக் கிழமை அன்று சாத்தி வணங்குவது நல்லது.
