மே மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான மே மாத பலன்களை பார்ப்போம்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!!
நீங்கள் தியாக மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உங்கள் சக பணியாளர்களிடம் முன்கோபத்தைக் காட்ட வேண்டாம். மாறாக அவர்களுடன் புன்னகையுடன் செல்வது அனைத்துவிதத்திலும் நல்லது.
வியாபாரிகளுக்கு
சில்லரை வியாபாரம் மற்றும் மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும். கொள்முதலை பெருக்குவீர்கள். சேமிப்பும் கூடும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகளுக்கு தங்கள் வருமானத்தை பெருக்க கைத்தொழில் உங்கள் குடும்பத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஆதலால், புதிய கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள ஆரம்பீர்கள்.
கலைஞர்களுக்கு
சினிமா மற்றும் சின்னத்திரைகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து முடித்து விடுவீர்கள்.
மாணவர்களுக்கு
பிள்ளைகள் தங்கள் கல்வியில் அலட்சியம் காட்டாமல் இருந்தால்தான் தாங்கள் நினைத்த துறையைப் பெற உதவியாக இருக்கும்.
பரிகாரம்
குருபகவானுக்கு வியாழ கிழமை அன்று வணங்குவது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே! எப்போதும் வியாபார சிந்தனை மிக்கவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகதர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு நேரடியாக மேலதிகாரி உங்களுக்கு உதவாதவாறு இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு மறைமுகமாக தங்களுக்கு ஆதரவு அளிப்பார்.
வியாபாரிகளுக்கு
தங்களை சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். கவலை வேண்டாம். அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு வெளியூர் பயணங்கள் அடிக்கடி லொகேஷன் பார்ப்பதற்கும் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதும் இருக்கும். அந்த அலைச்சல் வீண்போகாது.
மாணவர்களுக்கு
நீச்சல், டென்னிஸ் மற்றும் மற்ற விளையாட்டுத் துறையில் சேர்ந்து பயிற்சி பெற நினைப்பர். அது உங்களது எதிர்காலத்திற்கு நன்கு பயன்படி இருக்கும்.
பரிகாரம்
ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.
துலாம்
துலா ராசி அன்பர்களே!
நியாயமுடன் நடப்பவர் நீங்கள். சரிசமமாக மற்றவர்களை நடத்துபவர் நீங்கள்.
`சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் கீழ் பணி செய்யும் உத்யோகஸ்தர்களிடம் ஏற்றத் தாழ்வினை பார்க்காமல் அவர்களுடன் சுமூகமாக பழகி வருவதன் மூலம் உங்கள் பணிகளில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
வியாபாரிகளுக்கு;
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். கோபப்பட்டால் தங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு;
குடும்பத் தலைவிகள் தங்கள் குடும்ப செலவில் ஒரு பகுதியை சேர்த்து வைத்து அதில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வீட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
கலைஞர்களுக்கு;
கலைத்துறையில் உள்ளவர்கள் எப்பொழுதும் தங்கள் எதிர்பாலினரிடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. தேவையற்ற கிசுக்கிசுக்கிளில் இருந்து தப்பலாம்.
மாணவர்களுக்கு;
மாணவமணிகள் தங்கள் இலக்கை தற்போதிலிருந்தே நிர்ணயித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பின்னால் குழப்பமடையக் கூடும். அதிக மதிப்பெண்கள் பெற புரிந்து படிப்பது நல்லது.
பரிகாரம்
பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
எதுவாக இருந்தாலும் முகத்திற்கு முன்பு பேசுபவர் நீங்கள். பின்னால் பேசாதவர் நீங்கள்.
`சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்களுக்கு
சக ஊழியர்கள் தங்களைப் பற்றி தவறாக பேசினாலும் தங்கள் அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிகள் தங்களை தவறாக நம்ப வாய்ப்பில்லை. மாறாக, உத்யோகத்தில் அமைதி நிலவும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள். தேவையற்ற காலவிரையத்தை அது தவிர்க்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு
தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மிகவும் அனுசரனையுடனும், இன்முகத்துடனும் பழகுபவர். ஆதலால், தங்களுக்கு எப்பேர்ப்பட்ட பணச்சிக்களையும் சமாளித்து வெற்றி பெறக்கூடியவர்.
கலைஞர்களுக்கு
திரைப்படத்துறையில் முன்னேற துடிப்பவர்கள் படத்தில் மட்டும் கவனம் செலுத்தவும். தங்கள் கதாநாயகருடன் அதிக நெருக்கம் வேண்டாம். உங்கள் திறமை வீண்போகாது.
மாணவர்களுக்கு
அரசு தேர்வு எழுதுபவர்கள் தங்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். இல்லையென்றால் குறைவாக பெற்று எதிர் மாறான பலன்களைத் தரும்.
பரிகாரம்
திருவேற்காடு மாரியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
***********
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389