மார்ச் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்


மார்ச் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
x

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான மார்ச் மாத பலன்களை பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாதவர் போல் முகபாவனை செய்யும் குணமிக்கவர். ரகசியத்தை பாதுகாப்பவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோரின் உதவி கிடைக்கும். வேலை சுமை குறையும்.

வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இணையதளம் வழியாக ஆர்டர்கள் வழியும்.

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். தம்பதியர் இடையே அன்னியோன்யம் கூடும்.

கலைஞர்களுக்கு தங்கள் சக ஊழியர்களால் பண உதவி கிடைக்கும்.

மாணவ மாணவிகளுக்கு அரசு தேர்வு என்பதால் பய உணர்வு அதிகரிக்கும். நன்கு படித்திருப்பது நல்லது. உடல் நலம் சிறப்படையும்.

பரிகாரம்

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கோதுமையை நைவேத்தியமாக வைத்து படைப்பது நல்லது.

கன்னி


கன்னி ராசி அன்பர்களே!

தான் கோபப்பட்டால் தனக்குத் தான் நஷ்டம் என்பதை அறிந்து நடப்பவர் நீங்கள். பொறுமையை கையாண்டு நினைத்த இலக்கை அடைபவர்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இரண்டு வகையான துறைகளில் இருந்து லாபம் கிகும்.

குடும்பத் தலைவிகளுக்கு வெளியே தேவையான பொருட்களை கணவர் வாங்கித் தந்து மகிழ்விப்பார். தங்கள் கணவர் தங்களை புரிந்து கொள்வார்.

கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாரே குறித்த நேரத்தில் படபிடிப்பு ஆரம்பிக்கப்படும்.

மாணவ மாணவியருக்கு ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

பரிகாரம்

சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று எள்தீபம் ஏற்றுவது மிக சிறந்தது.

துலாம்

துலா ராசி அன்பர்களே!

யார் யாரை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்தவர் நீங்கள். சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதனை உண்ர்ந்தவர்

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக பெண் ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள். கணவர் வீட்டு உறவினர் வந்து போவர்.

குடும்பத் தலைவிகளுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினை அகலும். கணவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள்.

கலைஞர்களுக்கு புதிய நபர் உங்களுக்கு சிபாரிசு செய்வர்.

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து தானாகவே மற்றவரின் தூண்டுதல் இன்றி படிக்கத் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் உட்கொள்ள வேண்டாம்.

வழிபாடு

லக்ஷ்மி நரசிம்மரை வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

நீங்கள் மற்றவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பழகி அவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். யாருடைய குறைகளையும் பொருட்படுத்தாதவர் என்றால் அது நீங்கள்தான்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர் ஒருவரால் தங்களுக்கு நன்மை உண்டாகும்.

வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்பவர்களுக்கு இனி முன்னேற்றம்தான்.

குடும்பத் தலைவிகளுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி குவிப்பார். தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும்.

கலைஞர்களுக்கு தங்கள் கதாபாத்திரம் பேசப்படும் வண்ணம் இருக்கும்.

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடி தங்களுக்கு பிடித்த துறைய…

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவது நல்லது.

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Next Story