மார்ச் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான மார்ச் மாத பலன்களை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் புற அழகை ஆராதிப்பதை விட மற்றவர்களின் அக அழகை மட்டும் பார்த்து பழகும் இயல்புள்ளவர். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
குடும்பத் தலைவிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு தாங்கள் காத்திருந்த வேலை கிடைக்கும். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.
கலைஞர்களுக்கு படம் செட்டாகும். சம்பளம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
மாணவர்கள்மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்
மலையில் வசிக்கும் முருகர் பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை அணிவிப்பது மிக நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
பெற்றோர்களை போல நண்பர்களையும் நினைக்கும் அன்பு மிக்கவர் நீங்கள். ஒருபோதும் நண்பர்களுக்கு துரோகம் செய்யாத பண்பாளர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்களுக்கு தொழில் செய்ய புதிய இடம் கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு பண சிக்கல்கள் அகலும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் இணையும் வண்ணம் சூழலை உண்டாகும்.
கலைஞர்களுக்கு தங்கள் புகழ் ஓங்கும் காலமாக இருக்கும். தங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும்.
மாணவ மணிகளுக்கு முன்பை விட ஞாபகத்திறன் அதிகரிக்கும். வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்
பௌர்ணமி திதியன்று ஜீவசமாதிகளுக்கு சென்று மெடிடேஷன் இருப்பது மிக நன்று.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
எவருடைய சிபாரிசும் இன்றி தங்கள் தனித்திறமையால் முன்னேறிக் கொண்டிருப்பவர் நீங்கள். எந்த பிரச்சினை வந்தாலும் நேருக்கு நேர் நின்று சமாளிப்பவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேறு இடத்தில் இடமாற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் தையல் கலையில் ஈடுபடுபவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு கணவர் வழி உறவினர்களால் வந்த தொல்லைகள் இனி அகலும்.
கலைஞர்களுக்கு படத்திற்கான முன் பணம் கிடைக்கும். தாங்கள் எதிர்பார்த்த வண்ணம் நல்ல சம்பளம் கிடைக்கும்.
மாணவ, மாணவிகளுக்கு வகுப்பில் அமைதி காப்பது மிக நன்று. உடல்நலம் சீராக இருக்கும்.
பரிகாரம்
புதன்கிழமை அன்று சீனிவாச பெருமாளை தரிசித்து துளசி மாலையை சாத்துவது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
எந்த விசயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடிப்பவர் நீங்கள். கோபத்தை குறைத்து விவேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் இனி தவறினை உணர்வர்.
வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.
குடும்ப தலைவிகளுக்கு நீண்ட காலமாக சம்பந்திகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். சகோதர சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு செல்வாக்கு கூடும். பிரபலமாவர். பாராட்டுகள் குவியும்.
மாணவர்கள்மாணவ மணிகளுக்கு கல்வி கற்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் தங்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருவர். உடல் உஷ்ணமாகும். இளநீர் நீராகாரம் போன்றவைகளை உட்கொள்வது நல்லது.
பரிகாரம்
முத்துமாரி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் படைப்பது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389